வெள்ளி, 18 ஜூலை, 2014

மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் புதிதாக நியமனம் செய்யப்படுவர்

மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் புதிதாக நியமனம் செய்யப்படுவர்

இந்த ஆண்டு 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் எனபள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப்பதிலளித்தபோது இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் 71,708பணியிடங்களை அனுமதித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, 2014-15 ஆம்கல்வியாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்களும், மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் பணியிடங்களும், 340ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும். ஆசிரியர் சார்ந்த பணியிடங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,விரிவுரையாளர் பணியிடங்கள் 40, இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள்20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் அல்லாத
பணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள், 188 இளநிலை உதவியாளர்பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக