வியாழன், 17 ஜூலை, 2014

GENERAL KNOWLEDGE 1

*தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்? சங்கரலிங்கனார்

* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்? தந்தை பெரியார்

* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்? தந்தை பெரியார்

* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்? ஈரோடு

* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்? வாஞ்சிநாதன்

* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்? மாறவர்மன் சுந்தரபாண்டியன்

* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்? மதுரை

* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்? நாவலர் நெடுஞ்செழியன்

* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை? பூம்புகார்

* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு? ஜனவரி 1, 2000

* மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திய தமிழக முதல்வர்? மு.கருணாநிதி

* தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்? எம்.ஜி.ராமச்சந்திரன்

* சுயமரியாதை திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினை வெளியிட்டவர்? அறிஞர் அண்ணாதுரை
* தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1982

* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது இருந்த முதல்வர்? எம்.ஜி.ராமச்சந்திரன்

* வைகை அணை அமைக்கப்பட்டபோது தமிழக முதல்வர்? காமராஜர்

* திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்? செப்டம்பர் 17, 1949

* திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்? அறிஞர் அண்ணா

* அறிஞர் அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்த ஆண்டு? 1935

* அண்ணா என்ற பத்திரிகையைத் துவங்கி நடத்திய கட்சி? அதிமுக

* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு? 1965

* மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை? 5

* அன்னை தெரசா பிறந்த நாடு? யூகோஸ்லோவியா

* தமிழ்நாட்டில் 1934ல் கட்டப்பட்ட அணை? மேட்டூர் அணை

* தமிழகத்தின் நில உச்ச வரம்பு எல்லை? 15 ஏக்கர்

* சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஆண்டு? 14.01.1969

* ராஜ்ய சபையில் தமிழகத்திற்கு உள்ள இடங்கள்? 18

* ஆகஸ்ட் 15 ஆம் நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடும் மற்றொரு நாடு? தென்கொரியா

* தமிழகத்தின் கரும்பு ஆராய்ச்சி மையம் இடம்? கோயம்புத்தூர்

* தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம்? முண்டந்துறை

* முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? மலேசியா

* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு? 1908

* மேட்டூர் அணையின் பழைய பெயர்? ஸ்டாலின் நீர்த்தேக்கம்

* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்? ராஜாஜி

* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு? படகுப்போட்டி

* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை? யூகலிப்டஸ்

* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு? சிலி

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?
அபுல் கலாம் ஆசாத்

* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு? இஸ்ரேல்

* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு? 1984

* சென்னை விமான நிலையம் கட்டப்பட்ட ஆண்டு? 1945

* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்? இந்திரா காந்தி

* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்? வண்டல் மண்

* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு? நவம்பர் 1, 1956

* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு? 1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்

* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்? திண்டுக்கல்

* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1981

* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு? 1982

* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1982


* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1984

* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? 1985




Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக