இந்த கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில்
விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப்பதிலளிக்கும்போது அமைச்சர் வீரமணி வெளியிட்ட அறிவிப்பு: மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகபள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை முதல்வர்ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். விளையாட்டு தொடர்பானநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதன் தொடர்ச்சியாக 100பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
32 மாவட்டங்களில் அறிவியல் கண்காட்சி: தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும்
அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக