வியாழன், 17 ஜூலை, 2014

வெற்றி :' என் டீம்... என் நாடு...' ஜெர்மனி பெற்ற கனவு வெற்றி.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி பெற்ற வெற்றி, இவ்விளையாட்டில் அதன்அனைத்துமுக ஆர்வத்தை உலகிற்கு எடுத்தியம்பி இருக்கிறது.
ஒன்றுபட்ட ஜெர்மனியாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாது செய்த முயற்சியின்
பலனாக, சிறந்த கால்பந்து கூட்டணி இவ்வெற்றியை தந்திருக்கிறது. இதை ஜெர்மனியின்
தலைநகர் பெர்லின் நகரில், 10 லட்சம் மக்கள் கூடி மகிழ்ந்து. ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து, 32 நாடுகள் இதில் பங்கேற்றன. இப்போட்டிகளில், தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும், 2014ம் ஆண்டு,இந்த கோலாகல விழா ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தி, உலகம் முழுவதும் பலரைக் கவர காரணமாக அமைந்த பிரேசில் நாடு, நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பிரேசில் இழப்புக்கு, முன்னாள் வீரர்மாரடோனா, 53, மனம் நொந்து போய் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்ஜெர்மன் அணியினர் ஆடிய விதம் உலகத்தையே கட்டிப் போட்டது. ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம் மட்டும்அல்ல, கடைசியாக கோல் போட்டு வெற்றி ஈட்டித்தந்த மரியா ேகாட்சா, 2௨, இனி உலகமே பேசக்கூடிய
கால்பந்து வீரர் ஆகிவிட்டார்.
வெற்றி பற்றி அவர் கூறுகையில், 'கோல் போட்டபோது எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எனக்கு தெரிந்தது, 'என் டீம்... என் நாடு...' இக்கனவு தான் வெற்றியை தந்தது' என்ற வாசகம் அவரது உழைப்பின் வெற்றிக்கு கிடைத்த அடையாளம்.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்த போதும், ஜெர்மனிக்கு கிடைத்த வெற்றி, அந்த நாட்டிற்கு மேலும்வலு சேர்க்கும். சந்தைப்படுத்தும் பொருட்களில் இவ்வீரர்கள் நுழைவதும், அதனால் பொருளாதாரம் மேம்படவழி ஏற்படும்.
ஜெர்மனியில் உள்ள கால்பந்து கிளப்புகள், 12 வயது முதல் உள்ள சிறார்களை ஈர்த்து, படிப்படியாக பிரமாண்ட அணியை உருவாக்கியதும், தொடர் தோல்விகளுக்கு பின் அதை வெற்றியாக மாற்றிய, 'டீம்' என்றஉணர்வும்தான் இந்த வெற்றிக்கு காரணம்.



Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக