நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2001இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து 83 பேர் 2005 இல் பணி நியமனம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் பணி நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த வழக்கில் தமிழகஅரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ரோத்தஹி தேர்வர்கள் குறியீடுகளை பயன்படுத்தவில்லை என்று விடைத்தாளை சுட்டிக்காட்டி விளக்கினார். இதனையடுத்து, இது தொடர்பாக
விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி, மனுதாரர்கள் ஏபி நடராஜன், மாதவன் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால், உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அவர்கள்பணியில் தொடரலாம் என்று உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக