கலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம்பந்தபட்டமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, , காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும்
புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன
உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று,பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில்,முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பு: முதுகலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கான கலந்தாய்வு, 30ம் தேதியும் (நாளை),ஒரு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் சேர்வதற்கு, 31ம் தேதியும்கலந்தாய்வு நடக்கும்.இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம்தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்திற்குள், செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களில், பணி நியமனம்பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4, 5ம் தேதிகளிலும் நடக்கும். தேர்வு பெற்றவர்கள்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்டமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக