தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என,சென்னை ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி,வளர்ச்சிக் கழக இயக்குநர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார். அரூரை அடுத்த கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் "லேசர்,நிறப்பிரிகை இயல்' எனும் தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்க ம்கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராஜாமணி தலைமையில்வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை ஆவடி செயின்ட்பீட்டர்ஸ் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி, வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர்எஸ்.குணசேகரன் பேசியது: ஆங்கிலத்தில் படிப்பவர்தான் சிறந்தவர்கள், அறிவு மிக்கவர்கள்என்பது பொய்யானது. தாய் மொழியான தமிழில் படித்தால்கூட சிறந்தஅறிஞர்களாக, ஆராய்ச்சியாளர்களாக உயர முடியும். மனித வாழ்க்கையில்
கல்வி அறிவு, பணம் இரண்டுமே அவசியம். ஆனால், விலைமதிக்க முடியாத,களவு போகாத ஒரே சொத்து கல்வி மட்டுமே. பணத்தை சம்பாதிக்கவும்,செலவு செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவ வேண்டும்.பாடப்புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் படிக்க கூடாது.பொது அறிவு தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும். பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அறிவியலின் நன்மைகள், அறிவியல்பயன்பாடு, தொழில்நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எதைப்படித்தாலும் தெளிவாக நன்கு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு அறிவியல் சார்ந்த படிப்புகளை அதிகம்படிக்க வேண்டும். இளம் பருத்திலேயே ஒழுக்க நெறிகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள்,வயது மூத்தவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக