சனி, 20 ஜூன், 2015

இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு!

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் குறிப் பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப் பதுடன் பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற வேண்டும். இதுவரையில் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அமைப்பானது பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த் தப்படும் என்று அண்மையில் அறிவித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.

பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் சூழல் உருவான நிலை யில், அதற்குரிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மேற்கொண்டது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் என்சிடிஇ உத்தரவின்படி பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுமா? அல்லது தொடர்ந்து ஓராண்டாகவே நீடிக்குமா? என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இதற்கிடையே, ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் தயாரித்த 2 ஆண்டு கால பாடத்திட்டத்துக்கு அதன் சிண்டிகேட் குழு கடந்த மே மாதம் 20-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலை யில், என்சிடிஇ வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் விதிமுறைகளை (பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதி கரிப்பு) 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரி களிலும் நடை முறைப்படுத்துமாறு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசா ணையை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா நேற்று முன் தினம் (18-ம் தேதி) வெளியிட்டார்.

இந்த நிலையில், ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழக கல்விக்குழு வின் கூட்டம் பல்கலைக்கழக அலுவல கத்தில் நேற்று நடந்தது. கல்விக்குழு தலைவரான துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்களான கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன் உள்பட 24 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பி.எட். படிப்பு காலத்தை 2015-16 கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டதாக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் 'தி இந்து' விடம் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பி.எட். படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி காலம் 40 நாட்களாக இருந்தது. இனி மேல் அது 20 வாரங்களாக இருக்கும். முதல் ஆண்டில் 6 வாரங் களும், 2-ம் ஆண்டில் 14 வாரங்களும் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் ஏதாவது ஒரு பள்ளியில் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவர். கற்பித்தல் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அத்துடன் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன் படுத்தி பாடம் நடத்துதல், விளையாட்டு, யோகா, கலை மற்றும் கைவினை போன்றவற்றுக்கும் அதிக முக்கியத் துவம் தரப்படும். 2015-16-ம் கல்வி ஆண் டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக