வெள்ளி, 12 ஜூன், 2015

குவியும் கல்வி கட்டண புகார்:கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

தனியார் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால், பல பள்ளிகளில் கட்டணப்பிரச்னை பூதாகரமாகிவருகிறது.ஆங்காங்கே, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் சாலைக்கு வந்தும், பள்ளிவளாகத்திற்குள்ளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக் மற்றும்தொடக்கக் கல்வி இயக்குனரகம் வேடிக்கை பார்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தினமும் ஏராளமான பெற்றோர்,கல்வித்துறை அலுவலகங்கள் உள்ள சென்னை, டி.பி.ஐ., வளாகத்திற்கு வந்து, பள்ளிகள் மீது புகார் கொடுத்த வண்ணம்உள்ளனர். இதுவரை, சென்னை, அடையாறு பாலவித்யாமந்திர் பள்ளி உட்பட பல பள்ளிகளின் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதிக
கட்டணம் வசூலிக்கும்பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால், அதை உடனடியாகவிசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,மெட்ரிக் அதிகாரிகளிடம்கேட்ட போது, 'தனியார் பள்ளிகள் மீது, அவ்வளவு எளிதாக நடவடிக்கை எடுத்து விட முடியாது. பள்ளி நடத்துவோரில் பலர்,அரசியலில் செல்வாக்கு உள்ளவர்கள். அதனால், அரசு உத்தரவிட்டால்விசாரணை நடத்துவோம்' என்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக