வெள்ளி, 12 ஜூன், 2015

ஜார்ஜ் உக்ளோ போப் என்ற ஜி.யு. போப்

ஜார்ஜ் உக்ளோ போப் என்ற ஜி.யு. போப் (1820-1908) தமிழர்கள் நன்றியுடன் நினைக்கக்கூடிய பெயர்களில் ஒன்று. திருக்குறனை முழுமையாக ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர் இவரே. 1886 - இல் இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது. தமிழ் எழுத்து இலக்கியங்களை முறையாகப் பயின்ற ஜி.யு. போப் தமிழ்ப் பேச்சு மொழியின் நுட்பங்களையும் உணர்ந்தவர். அவரது 'திருவாசக' மொழிபெயர்ப்பு உலகறிந்த ஒன்று. சைவ சாத்திர நூலான 'திருவருட் பயனை'யும், தமிழ்ச் சமூகத்தின் எட்டாம் நூற்றாண்டு வாழ்வியலைக் காட்டும் 'புறப்பொருள் வெண்பா மாலை' என்றும் இலக்கண நூலையும் மொழி பெயர்த்துள்ளார். நீதி நூலான 'நாலடியாரை'யும் மொழிபெயர்த்தார். புறநானூற்றின் சில பாடல்களை மொழி பெயர்த்ததோடு அந்நூல் குறித்த கட்டுரைகளையும் அக்கால இதழ்களிலே எழுதியுள்ளார். போப் இலண்டனில் 1908-ல் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக