திங்கள், 22 ஜூன், 2015

ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்:அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கருவூலத்துறை அறிவிப்பால் விருதுநகர்மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுஊழியர்கள், தங்களதுஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஜூலை மாதசம்பளப் பட்டியல் ஏற்கப்படும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.

இதனால், அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும்முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் முத்துராஜ் கூறுகையில், ''அரசு திட்டங்களுக்கு ஆதார்எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிராக விருதுநகர் மாவட்டத்தில் அரசு
ஊழியர்கள் தங்களுடைய ஆதார் எண் விபரங்களை சமர்ப்பித்தால்தான் ஜூலை மாத சம்பள பட்டியல் ஏற்கப்படும் எனகருவூலத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கருவூலத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டால், பதில் அளிக்கமறுக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட கருவூலஅதிகாரியை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 24)மாவட்ட கருவூலம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக