அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்
என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்த
போட்டி நிலவுகிறது. அரசு பணியாளர்தேர்வாணையம் எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்
லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர். ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள் என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.
அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்
காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய
காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம்.
தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ‘யூத் சர்வீஸ்‘ என்ற பெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர். அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன.
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்
உருவாக்கப்படவில்லை. மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சுமார் 40 ஆயிரம் பேர் வரை மட்டுமே புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2001ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்தாண்டுகள் புதிதாக பணி நியமனங்கள் ஏதும் நடைபெறாததும் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகவும், அரசு துறைகளில்
காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஓய்வுபெறும் ஊழியர்கள் வயது வரம்பை 60 ஆக அதிகரிக்கும் எண்ணமும் அரசிடம் உள்ளது. இது பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடாது என்கிறது அரசு ஊழியர் சங்கங்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் 2 லட்சம் பேர் ஓய்வுபெற உள்ளதால் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறையில்தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் காலியிடங்கள் ஏற்படப்போகிறது. இதனால் மக்கள் நல திட்டங்கள்தான் அதிகம் பாதிக்கும். இப்போதே அரசு துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது. மேலும் கொல்லைப்புறம் வழியாக அவுட்சோர்சிங் என்ற முறையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். மருத்துவ துறையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவுட்சோர்சிங் வழியாக ஸ்டாப் நர்சுகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவ துறை அளிக்கின்ற ஊதியம். Rs 5500 ஆனால்ஏஜென்சிகளுக்கு கமிஷன் போக ஸ்டாப் நர்சுகளுக்கு கிடைப்பது வெறும் Rs 4000 ம்தான். பேரூராட்சிகளில் துப்புரவு வாகனங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு டிரைவர் ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. டெண்டர் மூலம் டிரைவர்களை தேர்வு செய்கின்றனர். Rs 4000,Rs 3000 மாத சம்பளத்திற்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். அதுபோன்று எல்லா அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர்
ஆப்ரேட்டர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவில்லை. மாறாக எம்சிஏ பட்டதாரிகள் கூட Rs 2000,Rs 2500 சம்பளத்திற்கு பேரூராட்சிகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இப்போது ஊராட்சிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் 2ஆயிரம்தான். தற்போதைய
விலைவாசியில் ரூ.2 ஆயிரத்தை கொண்டு என்ன செய்ய முடியும்? குறைவான சம்பளத்தை கொடுப்பதின் மூலம் இவர்களிடம் இருந்து நிறைவான பணியை எதிர்பார்ப்பதும்
இயலாது போகிறது. மேலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை. மற்றொருபுறம்
பணியிடங்களே காணாமல் போகிறது. உதாரணத்திற்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலஅலுவலகத்தில் 80 பேர் பணியாற்றி வந்தனர். தற்போது அது 60 பணியிடங்களாக
குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 23 பணியிடங்கள்நீண்டநாட்களாக காலியாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் முதல் ஓய்வூதியர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுபோன்று இங்குள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் எழுத்தர் நிலையில் 14 பேர் பணிபுரிந்தஇடத்தில் பணியிடங்கள் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் இப்போது 6இடங்களில் ஆள் இல்லை. இதுபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும்பணியிடங்கள் குறைப்பு, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் வாயிலாக அரசு துறைகளில் ஆட்கள் நியமனம் என்று பணியாளர் நியமனத்தில் ஒரு புதுமுறையை அரசு செயல்படுத்துவது போன்று உள்ளது என்றார். எனவே புதிதாக ஆட்களை தேர்வு செய்து காலியிடங்களை நிரப்புவது மூலம் நடைபெறுகின்ற முறையான ஊழியர் நியமனமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
காலி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தில் ஏற்கனவே சுமார் 2லட்சம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த சூழலில் மேலும் 2லட்சம் ஊழியர்கள் வரும் 6 மாத காலத்திற்குள் பணி ஓய்வுபெற இருப்பதுடன் அடுத்து 2016ம்ஆண்டுக்குள் மேலும் 2 லட்சம் பேர் பணி ஓய்வு பெற இருப்பதும் அரசு இயந்திரத்தின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் அபாயம் உள்ளது. என்றார். வேலைப்பளு அதிகரிப்புஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள்தேர்வு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போன்று உள்ளது. உதாரணமாக குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் 40 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பொதுவாகஇளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.இப்போது 1800 உதவியாளர் பணியிடம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது. இவற்றுக்கு 243 பேரை மட்டும் குரூப்&2 தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களை கொண்டு எவ்வாறு எல்லா அலுவலகத்திலும் பணிகளை செய்ய இயலும்?இப்போதே பெரும்பாலான துறைகளில் 2 ஊழியரின் பணியை சேர்த்து ஒரு ஊழியர் கவனிக்கிறார்.இனி காலியிடங்கள் அதிகரிப்பால் இந்த பணி பளு மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இவ்வாறு கூறினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ராஜ்குமார்
Th
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக