வியாழன், 10 அக்டோபர், 2013

PTA தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்


அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில்,ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப்பாடங்களுக்கு,ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின்
தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதைதவிர்க்கும் பொருட்டு, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, முதல்வர் ஜெ.,அறிவித்தார்.
 அதன்படி, மாவட்ட வாரியாக மேல்நிலை,உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்கள் குறித்த எண்ணிக்கை விவரம்,பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.
அவற்றை உடனடியாக நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்தபட்டியல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதியத்தில் பணிபுரிய விரும்புவோர், பட்டியலை பார்த்து, தகுந்த சான்றிதழ்களுடன்,சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையோரை,உடனடியாக அப்பணியில் நியமிக்க,தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாவட்டவாரியாக,முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில்,தொகுதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 5,000,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் சம்பளமாகவழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய்,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், "ரெகுலர்' ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும்வரை , இவர்கள் பணியில் இருப்பவர் என,   அறிவிக்கப்பட்டுள்ளது.

NO OF VACANCIES TO BE FIILED IN DHARMAPURI DISTRICT

PG ASSISTANT
ENGLISH.          17
MATHS.          09
PHYSICS.          09
CHEMISTRY.    13
ZOOLOGY.        02
ECONOMICS.    26
COMMERCE.    13

BT ASSISTANTS
ENGLISH.          90
MATHS.          12
SCINCE.            58

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக