வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஐந்து அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


 ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில்வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் கழகத்தின் சார்பில் திருவள்ளூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் வாசுதேவன், செந்தில்வளவன், ராஜசேகரன்
ஆகியோர் முன்னிலை வதித்தனர். மாநில செய்தி தொடர்பு செயலாளர்
ஜம்பு கண்டன உரையாற்றினார்.

இதில், முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். 35 ஆண்டுகளாக எவ்வித பதவி உயர்வும் இல்லாத முதுநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும்.தன்பங்கேற்பு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2003-ம்
ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தை நியமணம் செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரண்முறைப் படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூத்த முதுநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை தடுக்கும் பிரிவை தனியார்பள்ளி ஒழுங்கு படுத்தும் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டன. திருவள்ளூர் கல்வி மாவட்டச் செயலாளர்
முரளிதரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக