செவ்வாய், 29 அக்டோபர், 2013

 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணிக்கு மறு தேர்வு-தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு  2 வாரகால  இடைக்கால  தடை


.தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான
கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் கிளையில்
மதுரை கே.புதூரை சேர்ந்தவிஜயலெட்சுமி ,ஆண்டனி  கிளாரா  ஆகியோர்மனுத்தாக்கல்
செய்தனர். இந்த மனுவை விசாரித்து, தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
பணி தேர்வு முடிவை வெளியிட நீதிபதி தடை விதித்தார். மேலும்,மறு தேர்வு நடத்துவது தொடர்பாகஅரசு ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில்,மதுரையை சேர்ந்த மகாராஜன், அன்புதவமணி,
சிவகங்கை ராம்நகரை சேர்ந்த பாலமுருகன், ராமநாதபுரம் சிக்கலை சேர்ந்த சாந்தகுமார்
ஆகியோர் இந்த வழக்கில் தங்களையும்எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும்,
தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்டதடையை விலக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கின்விசாரணைக்கு டிஆர்பி தலைவர் விபுநய்யர், உறுப்பினர்கள் அறிவொளி,தங்கமாரி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.மேற்படி பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன்இருப்பதாகவும், அக் கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மறுதேர்வு நடத்துவது குறித்துஅரசின்
கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
 இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். வினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அவ் வினாத்தாளில்தேர்வெழுதியவர்களுக்கு 110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும்ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில்ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்றார்


 இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் அட்வகேட்ஜெனரல் மூன்று யோசனைகளை தெரிவித்துள்ளார். பி பட்டியல் கேள்வித்தாளில் பிழையான 40கேள்விகளை நீக்கி, 110 மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணாக கணக்கிடுவது அல்லது தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வழங்கப்பட்ட ஏ, பி, சி, டி கேள்வி பட்டியலில் மொத்தமதிப்பெண்ணை 110 ஆக மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும்கருணை மதிப்பெண் வழங்கலாம் என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.அவரது யோசனையை ஏற்க முடியாது அந்த யோசனைகள் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும். போட்டித்தேர்வில்அனைத்து மாணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். பிழையான 40 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கினால் அந்த கேள்விகளுக்கு பதில் எழுதாத மாணவர்களும் பலனடைவர். 110 மதிப்பெண்ணை மொத்த மதிப்பெண்ணாக கருதினால், தேர்வின் நோக்கம்நிறைவேறாது.மறு தேர்வு நடத்துவதுதான் ஒரே தீர்வு. இந்த முடிவுக்கு வர ஆசிரியர்தேர்வு வாரியமே காரணம். கேள்வித்தாள் பிழை தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு கோர்ட்டில்வந்தபோது, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளனர்.இந்த வழக்கில் வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டவை பிரச்னைக்கு தீர்வாகாது.மறுதேர்வு நடத்துவது தொடர்பாக தேர்வு வாரியத்துக்கு பல்வேறு சிரமங்கள்ஏற்படும் என்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. மறுதேர்வு இல்லையெனில், நன்றாகத் தேர்வெழுதியவர்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்து விடும் 

எனவே, ஜூலை 21ல் நடந்த தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக தேர்வு நடத்த வேண்டும்.இந்த தேர்வில் ஏற்கனவே பங்கேற்றவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பங்கள் பெறக்கூடாது. பழைய ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்தலாம். 6 வாரத்தில் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தனி  நீதிபதியின்  இத் தீர்ப்பை எதிர்த்து  trb  மேல்முறையீடு  செய்தது  அவ்வழக்கு  நீதிபதிகள் M. ஜெயச்சந்திரன் ,S. வைத்தியநாதன்  ஆகியோர்  அடங்கிய பெஞ்ச்  முன்பு  விசாரணைக்கு  வந்தது. TRB. யின்  சார்பில்  தலைமை வழக்கறிஞர் சோமயாஜி  ஆஜராகி  TRB  பிழையான 40  வினாக்களுக்கு  40 கிரேஸ்  மதிப்பெண்  வழங்கி  பட்டியல்  தயாரித்து  நீதிமன்றத்தில்  தாக்கல் செய்வதாகக்  கூறி தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதிக்க  கோரினார் .அதனையடுத்து  நீதிபதிகள்  தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு  2 வாரகால  இடைக்கால  தடை விதித்து  உத்தரவிட்டனர். வழக்கு  விசாரணை  நவம்பர்  12  ந் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது .
  

இவ் வழக்கு தொடர்பான  செய்திகளை  ஆண்டனி  கிளாராவின்    வழக்கறிஞர் திரு  லூயிஸ் அளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக