செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி!

தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில்,மண்டல ஆய்வுக் கூட்டங்கள் பலனளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 70 சதவீதத்துக்கு குறைவாக
தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்
கூட்டங்களை, மண்டலம் வாரியாக நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,13ல் மேலூர்,18ல் தஞ்சை, 19ல் புதுக்கோட்டை, 20ல் திண்டுக்கல், 21 கரூர், செப்.,1ல் தூத்துக்குடியில் நடக்கும் கூட்டங்களில் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர் பங்கேற்கின்றனர்.மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள்ஆய்வாளர் என மொத்தம் 120 பணியிடங்கள் உள்ளன. இதில் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன;
மொத்தம் உள்ள32 தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 25 இடங்களில் 'பொறுப்பு' அலுவலர்களே உள்ளனர். கல்வித்திட்டங்களை ஆய்வு செய்து அமல்படுத்துவது, அரசு திட்டங்களின் தாக்கம்குறித்து அரசுக்கு கருத்து தெரிவிப்பதும் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்வது இவர்கள் தான். பல மாதங்களாக இப்பணியிடங்கள் காலியாக இருப்பதால், மூத்த தலைமை ஆசிரியர்கள் 'பொறுப்பு'அலுவலர்களாக உள்ளனர். இதனால் பள்ளிகளை கண்காணிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் மண்டல ஆய்வுக் கூட்டங்களால் பலன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக