பி.எட். படிப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி களின் இணைப்பு அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கலைச் செல்வன் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கல்வியியல் கல்லூரி களில் பி.எட்., படிப்பில் சேரும் மாணவர்களிடம் கல்விக் கட்டண மாக ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் வசூலிக்கலாம். இதில் அட்மிஷன், டியூஷன், ஆய்வகம், நூலகம், கணினி பயிற்சி, விளை யாட்டு உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் அடங்கும்.
அதேபோல், நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி உத்தரவின்படி, தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்புக்கு ரூ.41,500-ம், தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருந்தால் ரூ.46,500-ம் வசூலிக்கலாம். இந்த கல்விக் கட்டணத்தை மட்டுமே தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் இணைப்பு அங்கீ காரம் (அபிலியேஷன்) ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். வகுப்புகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக