2013இல் நடந்தமுடிந்த PG.TRB மூலம் 2வது பட்டியல் மூலம் முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களை தேர்வு செய்ய கோரிக்கை காலியாக உள்ள 900 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 900 பணியிடங்களும் மற்றும் ஒரு தலைமையாசிரியர் வீதம் 100 பணியிடங்களும் என ஆக மொத்தம் 1000 காலிபணிடங்கள் உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் தற்போது படித்து வருவதால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காலதாமதமானல் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் மற்றும் தேர்ச்சி வீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி திறமையான தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடந்து முடிந்த PG.TRB மூலம் 2வது பட்டியல் மூலம் முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக