இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்தலைமுறையினர்,இட ஒதுக்கீட்டு பிரிவினர்ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்நடத்துகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய மாண வர் சங்கம், பொதுப்பள்ளிக்கானமாநில மேடை, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை இணைந்து இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களின் போது வெயிட்டேஜ்முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெரிதும்பாதிக்கப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை கடை பிடிக்கும் போது வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தோன்றுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்கும் தொடர்ந்து நடப்பதால் பணி நியமனத்தில் பல குழப்பங்கள்ஏற்படுகின்றன. இதற்கு உரிய தீர்வை அரசு எடுக்கவில்லை. மேலும் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.பின்னடைவு காலிப் பணியிடங்களையும் நிரப்பவில்லை இதனால் மேற்கண்ட அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர் பெற்றோர் சங்க செயலாளர் அருமைநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேச உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக