திங்கள், 27 அக்டோபர், 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை மேம்பாலம்
அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். நிர்வாகி ரமேஷ்,மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலைவகித்தார்.

#முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்காலிப்பணியிடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும். ஒளிமறைவு இல்லாத கலந்தாய்வு நடத்த வேண்டும்.
# அகவிலைப்படி,50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்.
# தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க, கடுமையாக உழைக்கும் நிலையில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை,இரவிலும் நீட்டிக்க வேண்டும், என்று கட்டாயப்படுத்துவதை முதன்மை கல்வி அலுவலர் தவிர்க்க வேண்டும்.
# தேர்வு காலங்களில் மற்றும் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியின்போது,பணி மூப்பு பதிவேடு முன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பராமரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்,

என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக