ஜப்பான் நாட்டில் சுமிடா(sumida) என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள ‘டோக்கியோ ஸ்கை ட்ரீ’(tokyo sky tree) எனப்படும் உலகின் மிக உயரமான கோபுரம் கடந்த மே 22 ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.தரையிலிருந்து 634 மீ (2030 அடி)உயரம் உடைய இந்த கோபுரத்தைக் கட்டும் பணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிப்ரவரி 2012 ல்தான் நிறைவுற்றது. 350 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டெம்போ டெக்கின் சுற்றுப்பகுதி 5மீட்டர் தடிமனுள்ள கண்ணாடியினால் கட்டப்பட்டுள்ளதால், . இங்கிருந்து டவரின் அடிப்பாகம் முதல் 70 கிலோமீட்டர் தூரம் வரை டோக்கியோ நகரின் அழகை எல்லா திசைகளிலும் பார்த்து ரசிக்கலாம்…
450 மீட்டர் உயரத்தில்445 வதுதளத்தில் உள்ள டெம்போ கேலரியாவிலிருந்து 450.வது தளம் வரை கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட ட்யூப் போன்ற அமைப்பின் வழியாக நடந்து செல்லும்போது வானத்தில் நடப்பது போன்ற பரவச உணர்வை ஏற்படுத்துமாம்.!
ரெஸ்டாரண்ட் ,ஷாப்பிங் மால் என சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தும் இந்த டவரிலிருந்து ஜப்பான் நாட்டின் டிவி மற்றும் ரேடியாக்களின் தரைவழி ஒளிபரப்பும் நடைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 12 வயது வரையிலான நம்மைப் போன்ற சுட்டிகள் இதற்குள் போய் சுற்றிப்பாக்கனும்னா கட்டணம்எவ்வளவு தெரியுமா? 1400 ஜப்பான் யென்!
சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக