வெள்ளி, 27 ஜூலை, 2012

நிறம்மாறும் பச்சோந்தி மலைக்குன்று

                     நிறம்மாறும் பச்சோந்திக் குன்று .
  இருக்கின்ற இடத்திற்கேற்ப தன் உடலின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது மத்திய ஆஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஊலூரூ (Uluru)எனும்  குன்று
    இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் அதன் கதிர்கள் ஊலூரு மீது படும்பொழுது அது ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாகும்…. காலையிலிருந்து மாலைவரை சூரியனின் வெப்பநிலை மாற மாற தன் நிறமும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறி  பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கின்றது இக்குன்று….
  சுமார் 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உலகின் மிகப் பழமையான பாறைகளில் ஒன்றான இது 318 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 8 கி.மீ சுற்றளவும் கொண்டது.  மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவா முட்டை வடிவிலான இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான சித்திரங்கள் செதுக்கப்பட்ட சில உருவங்களும் காணப்படுகின்றன.
                   1873-ல் டபிள்யு. ஜி. கோஸி என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.அப்போது ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த ஹென்றி ஏயர்சு பெயரால்  'ஏயர்ஸ் பாறை'  [Ayers rock] எனவும் அழைக்கப்படும் இக் குன்றை யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. .

சுட்டி ஸ்டார் தாமரை
தருமபுரி
  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக