சுட்டி விஞ்ஞானி அசத்தல் அதிரா!
தேச நலனை பாதுகாப்பதற்கு பயன்படும் வகையில் தனது அறிவியல் கண்டுபிடிப்பினை செய்து அசத்தியிருக்கிறார் ஈரோடு மாவட்டம் திண்டல் பாரதிய வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் சுட்டி விஞ்ஞானி அதிரா
மாநில அளவிலான இன்ஸ்பயர் கண்காட்சியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றதுடன் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார் இவர்.
“2001 ம் ஆண்டு டிசம்பர் 13 ல் நம் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தை தகர்க்கும் நோக்கில் வந்த தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அது முறியடிக்கப்பட்டாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பலர் உயிரிழந்தாங்க அப்படின்னு எங்க ஆசிரியை சொன்னபோது அது என்னை ரொம்பவே பாதிச்சது… நம்ம அறிவியல்தொழில் நுட்பத்தால அதை தடுக்க முடியாதான்னு யோசிச்சபோதுதான் இந்த ஐடியா எனக்கு தோன்றியது..” என கூறிய அதிரா தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கினார்.
“இந்த பார்லிமெண்ட் செக்யூரிட்டி சிஸ்ட்த்தில் அங்கு செல்லக்கூடிய அனுமதிப்பெற்ற வாகனங்கள் அனைத்திலும் ரேடியோ வேவ் ட்ரான்ஸ்மிட்டர்கள்[radio wave transmitter] பொருத்தப்படவண்டும்..ஆளில்லாத முதல் நுழைவாயிலில் அதற்கான ரிசிவர் பொருத்தப்பட வேண்டும். இரண்டாவது நுழைவாயிலில் நமது வீர்ர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புபணியில் ஈடுபடுவார்கள், வாகனம் முதல் நுழைவாயில் அருகில் வந்தவுடன் அதன் டிரைவர் அவருக்கு அளிக்கப்பட்ட ரகசிய அலை வரிசையிலான ரேடியோ ப்ரிகொன்ஸியை [RF frequency] ட்யூன் செய்யவேண்டும் அது நுழைவாயிலில் உள்ள ரிஸிவரால் ஏற்கப்பட்டு மேச் ஆனால் மட்டுமே பச்சை விளக்கு எரியும் அதன் பின்னரே வாகனம் முதல் நுழைவாயிலை கடக்க அனுமதிக்கப்படும். இரண்டாவது நுழைவாயிலில் வழக்கமான சோதனைகளுக்குப் பன்னர் வாகனம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அனுமதி பெறாத வாகனம் என்றால் பச்சை விளக்கு எரியாது எனவே நமது பாதுகாப்புப்படை வீர்ர்கள் உடனே அலர்ட் ஆகிவிடமுடியும்..” என்றார்.
இந்த ரேடியோ அலைவரிசையை ரகசியமான முறையில் மாற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியும்… மேலும் இதனை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்றார்.
தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, “அதிராவின் இந்த கண்டுபிடிப்பினை செயல்படுத்துவது சாத்தியமான ஒன்றுதான் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடிதம் மூலம் பாரட்டியுள்ளது எங்களுக்கு பெருமையளிக்கின்றது என்றார்.
இவரது இந்த கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியை பிரேம்சுதா, “அதிரா இது மட்டுமல்லாமல் எலக்ட்ரோ மேக்னட் வேவ் ஐ பயன்படுத்தி நமது கடல் எல்லையை அறிந்து மீனவர்கள் பிடிப்பதற்கான வழிமுறை, மருத்துவமனை பகுதியில் ஒலி எழுப்புவதை தடை செய்யும் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார் என்றார்
. பேச்சு கட்டுரை,விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ள அதிராவை பெற்றோர்களுடன் நாமும் பாரட்டுவோம்..
உங்களுக்குத் தெரிந்த அறிவியல்,விளையாட்டு, ஓவியம் போன்றவற்றில் அதிரா போன்ற திறமைமிகுந்த சுட்டிகள் இருந்தால் தொடர்புகொள்ளுங்களேன்…. 8525898736 velanthangavel@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக