"கனவுக்குச் செயல்கொடுப்போம்".
அக்டோபர் 12....2011 ஸ்ரீஹரிகோட்டா சதிஸ்தவன் ஏவுதளம்....SRMSAT,JUGNU மற்றும்LUXEMBURG நாட்டின் செயற்கைக்கோள் என மூன்றுகுட்டிச் செயற்கைக்கோள்களை முதுகில் ஏற்றிக்கொண்டு MEGHA TROPIQUES - எனும் இந்திய-பிரஞ்ச் கூட்டு முயற்சியால் காலநிலை மாற்றங்களைப்பற்றி ஆராயதயாரிக்கப்பட்ட செயற்ககைக்கோள் விண்ணில் பறந்தது…..
( ஜுக்னுவுடன் கான்பூர் ஐஐடி மாணவர்கள்)
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் SRMSAT,JUGNU இரண்டு குட்டிகளும் இந்தியமாணவர்களால் தயாரிக்கப்பட்டது என்பதுதான். சுமார் 10 கிலோ எடையுள்ளSRMSAT சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்விநிறுவனத்தில் பல்வேறுதுறைகளைச்சேர்ந்த 54 மாணவர்கள் சுமார் 2 கோடி செலவில் தயாரித்ததாகும்.இது ‘பசுமை இல்ல வாயு’க்களைப்பற்றி ஆராயத் துணைபுரியும்.JUGNU கான்பூர் ஐஐடி மாணவர்கள் 50 பேரால் தயாரிக்கப்பட்ட குறைந்தஎடையிலான் ‘நேனோ’ செயற்கைக்கோளாகும் இது வெள்ளம், வறட்சி போன்றவற்றை நிர்வகிக்கத் தேவையான விவரங்களை பெறுவதற்கு உதவும்.
2009 ல் தொடங்கி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ANUSAT,STUDSAT,YOUTHSAT[இந்திய ரஸ்யா கூட்டுத்தயாரிப்பு]
என மூன்று சிறிய செயற்கைக்கோள்கள் இதுவரை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுளன.STUDSAT தயாரித்த மாணவர்களுக்கு
சர்வதேச விருது கிடத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதே போன்ற 100 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுருக்காம்...
இதனைப்பற்றி ஒரு மாலைப்பொழுதில் சுட்டிகளுக்காக ISRO சந்திராயன் I&II திட்ட இயக்குனர் திரு மயில்சாமி அண்ணதுரை அவர்களுடன் உரையாடினோம்....
இந்த செயற்கைக்கோள்களை மாணவர்கள் தயாரித்ததின் சிறப்பம்சம், முக்கியத்தவம் என்று எதனைக் குறிப்பிடலாம்?
அறிவியல் மற்றும் பொறியியலின் பல துறைகளை உள்ளடக்கிய பணி செயற்கைக்கோளியல். மின்னணுவியல்,இயற்பியல்,இராசாயனம்
இயந்திரவியல் வானவியல் கணினியியல் என் பல துறைகளின் கூட்டுமுயற்சியே செயற்கைக்கோளின் வடிவமைப்பும் வேலைப்பாடும்
ஆக ஒரு செயற்கைக்கோளை வடிவமைக்க பல துறை மாணவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.அப்படி ஒர் சிறந்த குழுவாக
இயங்கத்தேவையான பயிற்சியை இச் செயற்கைக்கோள் தயாரிப்புப்பணி மாணவர்களுக்கு அளிக்கின்றது.அவர்கள் பின்னாளில் எத் துறைக்குச் சென்றாலும் ஒரு குழுவில் செயல்படும்பொழுது நன்கு பரிணமிக்கமுடியும்!
மாணவர்கள் செயற்கைக்கோள்கள் தயரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு மிகுதியான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு
இருக்கவேண்டுமா?
இது ஒரு கூட்டு முயற்சி. பல் துறைஅறிவு கண்டிப்பாகத் தேவை. செயற்கைக் கோள்செய்யும் போது மனிதனுக்குக் கண், காது, மூளை, கை,கால், இரத்தம், உணவு போல் பலதும் உள்ளது.எல்லாவற்றையும் செய்யவும், இணைக்கவும், சரியாகச் செயல்பட வைப்பதும், அதை
விண்வெளியொத்த தட்ப வெப்ப , வாயுவற்ற வெற்றிடத்தில் பரிசோதித்து செயற்கைக் கோள்வடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
பயிற்சிபெற்ற ISRO விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்கள் தயாரிப்பில்ஈடுபடுவதற்கும் மாணவர்கள் ஈடுபடுவதற்கும் என்ன வேறுபாடு?
தற்போதைய நிலையில், மாணவர்களின் செயற்கைக் கோள்கள் பரிச்சார்த்த முறையிலேயே உள்ளன. எடை குறைவு, ஆயுள் குறைவு, அவற்றை விண்ணில் ஏவ எங்களின் விண்கலங்கள்(ராக்கெட்) தேவை. மாறாக நாட்டின் தொலைதொடர்பு, தொலைக்காட்சி, பருவ நிலையுணர்தல் கிரகவியல் ஆராய்ச்சி போன்ற தேவைகளுக்கும், பெரிய பி.ஸ்.எல்.வி, ஜி.ஸ்.எல்.வி போன்ற பெரிய விண்கலங்களைச்(ராக்கெட்) செய்ய எங்கள் பணி தேவை.
எந்தவகையில் மாணவர்களுக்கு உதவியது?
வடிவமைப்பில் ஆலோசனை, சூரியத்தகடு, பேட்டரி போன்ற சில சாதனங்கள், மற்றும் செயற்கைக் கோளைப் பரிசோதித்துப் பார்த்தல்,
விண்கலனில்(ராக்கெட்டில்) இணைத்தல் போன்ற பணிகளில் மாணவர்களுக்கு உதவியது.
பல்கலைக்கழகங்கள், IIT போன்ற நிறுவனங்கள் அளவில் செய்யப்படும் இந்தமுயற்சி எதிர்காலத்தில் கல்லூரிகள் அளவில் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உண்டா?
கண்டிப்பாக! இப்போதே நிலை அதுதான். ஏன் இதுவரை செய்த 4 மாணவர் செயற்கைக் கோள்களில் ஒன்று மட்டுமே IIT,கான்பூர்.
மற்ற மூன்றும் 1.அண்ணாபல்கலை சென்னை , 2. கர்நாடகா, ஆந்திராவின் 5கல்லூரிகள் 3. எஸ்.ஆர்.எம் சென்னை. ஆகியவற்றின் மாணவர்களால் உருவாகப்பட்டவைதான்
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இது போன்ற விஞ்ஞானஅறிவையும்,ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்வதற்கு தாங்கள்கூறும் அறிவுரை என்ன?
அறிவியல் செய்திகள்,எண்ணங்கள் மூலம் சிறு சிறு பொறிகளை மாணவர்கள் மனதில் உருவாக்கும் முயற்சிகள்,தன்னால் ஏதும் செய்ய முடியுமா என்ற தேடலையும்,வேகத்தையும் தூண்டும் பணிகளை ,பள்ளிகள், கல்லூரிகள், இஸ்ரோ போன்ற ஆராய்ச்சி மற்றும் தொழில்கூடங்கள், மாணவர்கள் கூட்டாக முயற்சிக்க வேண்டும். செயல்முறைப் பாடங்கள் நிறைய வரவேண்டும்.
டாக்டர் அப்துல்கலாம் அய்யா மாணவர்களை ‘கனவு காணுங்கள்’ என்றார்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
"கனவுக்குச் செயல்கொடுப்போம்".
கனவு மெய்ப்படவேண்டும்.......
.
தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி
நன்றி சுட்டிவிகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக