ஞாயிறு, 15 ஜூலை, 2012

வாசிப்போம்....நேசிப்போம்

         உலகபுத்தகதினத்தில்………..சுட்டிகளின் சுகமான  அனுபவம்
ஏப்ரல் 23….. உலகின் தலைசிறந்த நாடகமேதை, நாடக இலக்கியத்துக்கு உயிரூட்டம் அளித்த ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்……
   உலக இலக்கியவாதிகளான டான் குயிக்சாட்நாவலைப் படைத்த செர்வாண்டைஸ், ஆங்கிலக்கவிஞர் வில்லியம்வோர்ட்ஸ்வொர்த், கவிஞர் ரூபர்ட் ப்ரூக்,  ராய்ஸ்டன் காம்ப்பெல்,திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே. இப்படி படைப்புலகத்தோடு நெருங்கிய தொடர்புடையோர்களின் நினைவு நாளாகவும் விளங்கும் இந்நாளை உலகப்புத்தக நாளாகப் கடைப்பிடிப்பது என ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு [யுனெஸ்கோ] அறிவித்தது. 
     அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச்செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல்,  தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்தல், புத்தகங்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் அனைவருக்கும் வாசிக்கும் உரிமை அளிப்பதுடன் புத்தகங்கள் மூலம்உலகஉறவினை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன்  1996 ஏப்ரல் 23 முதல்  உலகப்புத்தகநாள் அனைத்து நாடுகளிலும்  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

        குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து,பிரான்சு நாட்டு பதிப்பகங்கள்.சிறப்புக்கழிவு, பரிசுகள், பிரபல எழுத்தாளர்களின்    கையெழுத்துடன்   புத்தகவிநியோகம்   என்று     உலகப்புத்தகநாள் விமரிசையாகக் கடைப்பிடிக்கின்றன..அந்த வகையில் சுட்டிகளுடன் நாமும் 2012 ஏப்ரல் 23 ல் உலக புத்தக தினத்தை கொண்டாடினோம்

  என்னைத்தேடி நீ வந்தால்உன்னைத்தேடி உலகம் வரும்என்ற வாசகத்துடன் சுட்டிகளை அன்போடு வரவேற்றது தருமபுரி மைய நூலகம்.. நூலகர் ராஜேந்திரன் சுட்டிகளை குழந்தைகள் நூலகப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்  சுட்டிகளுக்கு தக்கவாறு குட்டி அலமாரிகளில் அழகியவண்ணப் புத்தகங்கள்..அமர குட்டி நாற்காலிகள் படிப்புமேசை  என சுட்டிகளை கவரும்வகையில் அப்பகுதி அமைந்திருந்தது. மாவட்ட நூலக அலுவலர் விஜயலட்சுமி இன்று என்ன நாள் தெரியுமா?” என சுட்டிகளைக் கேட்டவுடன் உலக புத்தக நாள் என்றனர் அனைவரும் ஒரே குரலில் ஆமாம்சுட்டிகளான நீங்கள் இந்த நாளில் இங்கு வந்ததற்கு ரொம்ப சந்தோஷம்.. நிறைய புத்தகங்களை இப்பொழுதிருந்தே படிக்கனும் கதைகள் அறிவியல் புதிர்கள் வரலாறு என பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான நூல்கள் உங்களுக்காக இங்கே காத்துகிட்டிருக்கு. இன்றைக்குமட்டுமல்ல.நேரம் கிடைக்கும்பொழுதெல்லம் இங்கே நீங்க வரவேண்டும்                  என்றார்
  சுட்டிகள் அலமாரிகளை சுற்றிச்சுற்றி வந்து தங்களுக்கு பிடித்தமான படப்புத்தகங்கள் ,குட்டிக்கதைகள் தலைவர்களின் வரலாறு,அறிவியல் அற்புதங்கள் என புத்தகங்களை தேடி எடுத்து படிக்கத்தொடங்கினர்.. 3 மணி நேரத்திற்கும் மேலாக  வாசித்து மகிழ்ந்தனர்பின்னர் நூலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு விசிட் அடித்தபின்   வாசிப்போம்உலகை நேசிப்போம்…’…என ஒரு புதிய அனுபவத்தை சுமந்தபடி  வீடு திரும்பினர்
  அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவும்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு ”--- சீனப் பழமொழி
 நாம் புத்தகங்களை படிப்பது அறிவு பெறுவதற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமன்றுஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கயை புரிந்துகொள்ளவும் சரியாக வாழவும் கற்றுக்கொள்ளத்தான்…….. புத்தகங்களில் பலதரப்பட்ட மனிதர்களின் அனுபவங்களும் சிந்தனைகளும் அடங்கிய இருக்கின்றன அவற்றை படிக்கும்பொழுது மலைமீது ஏறிநின்று, இதுவரை பார்க்காத உலகக்காட்சிகளை காணும் உணர்வு பெறுகின்றோம்”------- ஜவஹர்லால் நேரு மகள் இந்திராவுக்கு எழுதியகடிதத்தில்


சி.தாமரை சுட்டி ஸ்டார் தருமபுரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக