சனி, 21 ஜூலை, 2012

ஓவியத்தை சாப்பிடலாம் வாங்க......

                                                        பிரட் ஓவியங்கள்                                                                  
 

   ,பிரட்டுடன்[bread]  பட்டர், ஜாம் ,சாண்ட்விச் என விதவிதமாக சேர்த்து  உணவு வகைகளை  தயாரித்து நாம் ரசித்து ருசித்துகொண்டிருக்க, நியூயார்க் புருக்ளினைச்
சேர்ந்த ஹென்றி ஹர்கிரிவ்ஸ்[Henry Hargreaves ] வித்தியாசமாக சிந்தித்து பலரின் கவனத்தை கவர்ந்திருக்கின்றார்.

 ரொட்டித்துண்டுகளை  க்ரிம் ப்ருளி டார்ச் எனும் கருவியைப் பயன்படுத்தி தேவைக்கேற்றவாறுடோஸ்ட்செய்து பின்  அவற்றை கச்சிதமாக அடுக்கி மார்லின் மன்றோ போன்ற பிரபலங்களின் உருவங்களை உருவாக்கி அசத்துகின்றார் இதற்காக சுமார் 900 பிரட் ஸ்லய்ஸ்[bread slice] பயன்படுத்துகின்றார் . பிரட்டினாலான உருவங்கள் பார்க்கவே வித்தியாசமாக இருப்பதால்  பலரும்  போட்டிபோட்டுக்கொண்டுஅதனை நல்ல விலைக்கு ஏலத்தில் எடுத்துக்கொள்கின்றனர்.
 ஒரு காலத்தில் இந்த பிரட் சாப்பிடக்கூட வழியில்லாமல்தான் நான் என் சொந்த நாடான நியூசிலந்திலிருந்து நியுயார்க்குகு வந்தேன்... இப்ப அதே பிரட் எனக்கு உணவை அளிப்பதுடன் ,என்னை உச்சத்துக்கும் கொண்டு சென்றுள்ளதுஎன்கிறார் ஹர்கிரிவ்ஸ்   பெருமையாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக