வியாழன், 3 ஜூலை, 2014

ஒரே பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள்: குழப்பத்தில் மாணவர்கள்.

தாம்பரம் அருகே மணிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில்ஒரு தலைமை ஆசிரியரை கல்வித்துறை நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தியு காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமத்தில்அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக 2009-2010-ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் தலைமை ஆசிரியராகஅமுதா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்யூரை அடுத்தபுத்திரன்கோட்டையில் தலைமை ஆசிரியராகபணியாற்றியவிஜயகுமாரை மணிமங்கலம் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமித்து கடந்த ஜூன் 20-இல் கல்வித் துறை இயக்குநரகம் பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளது. ஆனால் இது குறித்த தகவல் இப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கவில்லை. ஜூன் 24-ஆம் தேதி விஜயகுமார்
தனது பணிமாறுதல் ஆணையுடன் மணிமங்கலம் பள்ளிக்கு வந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர்அமுதா பிரச்னையை முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொண்டு சென்றார்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி, தலைமை ஆசிரியர் அமுதாவிடம்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தலைமை ஆசிரியர் அமுதாவை செம்மஞ்சேரிக்கு மாறுதல் வாங்கிச்செல்லுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உள்ளூர் அரசியல் காரணங்களே பிரதானம் என்று பொதுமக்கள்குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் விஜயகுமார், தனது மேலிடசெல்வாக்கை பயன்படுத்தி சென்னைக்கு அருகே பணிமாறுதல் பெற்று விட்டார்என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறினர். இதில் எது உண்மை என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்.குழப்பம் தீராததால் புதன்கிழமை வரை தினமும் 2 தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2010 - 2011-ஆம் கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சந்தித்து வருகின்றனர். அப்போது 78 சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றனர். 2011-2012-இல் 79சதவீதமும், 2012-2013-இல் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 97 சதவீதமாகஉயர்ந்தது. இது இந்த 2013-2014-ஆம் ஆண்டு தேர்வில் 98 சதவீத மாணவர்கள்தேர்ச்சி சதவீதம் கண்டது. மேலும் அரிமா சங்கம் மூலம் 2 கூடுதல் வகுப்பறைகள், ஒரு ஆசிரமத்திடம்இருந்து பள்ளிச் சுற்றுசுவர் ஆகியனவற்றை தலைமை ஆசிரியர்அமுதா ஏற்படுத்தியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக தனியார் நிறுவனம் மூலம்
மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி அளிக்கஅமுதா ஏற்பாடு செய்துள்ளார் என்று பொதுமக்கள் கூறிகின்றனர்.
இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும்மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கேட்டபோது,"இப்பிரச்னைக்கு 2 நாள்களில் நல்ல தீர்வு காணப்படும்' என்றார்.

DINAMANI


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக