அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்க,சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிய வழக்கில், மனுவை அரசுத் தரப்பில்பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அனைத்து மாவட்ட சிறப்பு (பி.எட்.,) பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன்தாக்கல் செய்த மனு: மனநலம் குன்றியோர், பார்வை குறைபாடு, செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள், கற்றலில் குறைபாடு உள்ளவர்களுக்கு கற்பிக்க, சிறப்பு பட்டப்படிப்பு முடித்துள்ளோம். இந்திய மறுவாழ்வு மையம்,வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பணியை எதிர்நோக்கியுள்ளோம். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்கி, கல்வி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு ஆசிரியர்பட்டப்படிப்பானது, பொதுவான பி.எட்., படிப்பிற்கு இணையானது. டில்லி ஐகோர்ட் உத்தரவைப் பின்பற்றி,பல்வேறு மாநிலங்களில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோல், தமிழகத்தில் நியமனம் மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும், எனகுறிப்பிட்டார்.
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு,''மனுவை பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக