சனி, 28 பிப்ரவரி, 2015

நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்


நாடெங்கிலும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஏழை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்து தரம் உயர்த்த திட்டம் வகுக்கப்படும் என்று கூறினார். .

மத்திய கல்வித் துறையின் சார்பில் கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும்.

அருணாச்சலப் பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளும் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றன.


 

பதவி உயர்வு :கலந்தாய்வு மூலம் 122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்

நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட,122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு,பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
நடப்பு கல்வி ஆண்டில், 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.மேலும், 72 உயர்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பதவிகளுக்கு,பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி, தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்உத்தரவிட்டு உள்ளார். இதற்கான கலந்தாய்வு, நாளை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கருத்தரங்கில்நடக்கிறது.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான மேற்பார்வை அதிகாரிகளுக்கே தேர்வு !

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகளும் தேர்வுப் பணிகளில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். மாலையில், சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்களுக்கென தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்கூட்டத்தில் சி.இ.ஓ., டி.இ.ஓ.க்களுக்கு வழங்கப்பட்ட கையேடு தொடர்பாக 40 வினாக்கள் கொண்ட தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் திடீரென நடத்தினார். இந்தத் திடீர் தேர்வு அதிர்ச்சியளித்தாலும், மகிழ்ச்சியுடன் அனைவரும் தேர்வில் பங்கேற்றதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். வழக்கமாக கையேடுகளை அதிகாரிகள் முழுவதுமாகப் படித்துப் பார்ப்பதில்லை. எனவே,அனைவரும் இந்தக் கையேடுகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தேர்வு நடத்தப்பட்டதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலானோர் 30-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி அறிமுகம்

மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் டெக் விஸார்ட் நிறுவன தலைமைச் செயல்அதிகாரி பால் வின்ஸ்டன் கூறியதாவது: வளர்ந்து வரும் ரோபாடிக்ஸ் துறையில் இந்திய இளைஞர்களும் சிறந்த விளங்கும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 தலைப்புகள் வீதம் 6 ஆண்டுகள் படிக்கக் கூடிய வகையில்
இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும். இந்தப் பயிற்சியில் முதல் 4 ஆண்டுகள் முடிவில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ்
கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இளநிலை டிப்ளமோ சான்றிதழ்வழங்கப்படும். மேலும், 6 ஆண்டுகள் முடிவில் பயிற்சியில் சிறந்த முறையில்தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே தொழில்நுட்ப அறிவைத்தூண்டுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவதாக
அமையும் என்றார்.

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்(புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம்முழுவதும் இந்தத் தேர்வை 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10.72 லட்சம்பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சென்னையில்புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா,அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறியது: நிகழாண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் இந்தச்
சான்றிதழை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். அதன்பிறகு, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களின்சான்றொப்பத்தை மாணவர்கள் பெற வேண்டும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மதிப்பெண் சான்றிதழைப்பிழையின்றி அச்சடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன்காரணமாக, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படக்
கூடாது என்பதற்காக இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என்றார் அவர்.

மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்?
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், மாணவர்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு,
மறுகூட்டலுக்குப் பிறகே அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம்,திருத்தங்கள் அதிகமில்லாமல் சரியான தகவல்களுடன் மதிப்பெண் சான்றிதழைத்தர முடியும். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் தகவல் பிழைகள் இருந்தால், அவற்றை அசல் மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் திருத்தம்செய்து கொள்ளலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புகாருக்கு இடமில்லாமல் நடத்த வேண்டும்: கூட்டத்தில், பொதுத்
தேர்வுகளை எந்தவிதப் புகாருக்கும் இடமில்லாமல் நடத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர்
அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளமாவட்டங்களுக்கு முன்கூட்டியே சென்று தேர்வு ஏற்பாடுகளை மேற்பார்வைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கான பாதுகாப்பு,வினாத்தாளை எடுத்துச் செல்லும் வழித்தடங்கள், விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள மையங்களுக்குக்கொண்டு செல்வது, பறக்கும் படைகளை அமைப்பது போன்றவை தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் எந்த பகுதிக்கு இடம்மாறினாலும் அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி மே 3–ந்தேதி அமலுக்கு வருகிறது.

நாட்டின் எந்த பகுதிக்கு இடம்மாறினாலும், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால்
அதே எண்ணில் பேசும் வசதி மே 3–ந்தேதி அமலுக்கு வருகிறது.

சேவை நிறுவனத்தை மாற்றும் வசதி தற்போது,ஒரே தொலைத்தொடர்பு வட்டத்துக்குள்,அதாவது ஒரே மாநிலத்துக்குள்தான்,வேறு செல்போன்சேவை நிறுவனத்துக்கு மாறினாலும்அதே செல்போன் எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயத்தில், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறிய ஒருவர், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால், டெல்லியில் வாங்கிய சிம்கார்டு எண்ணை தக்க வைத்துக் கொள்ளமுடியாது. புதிதாக மாறிய நிறுவனம் அளிக்கும் எண்ணுக்கு மாற வேண்டி இருக்கும். புதிய வசதி இந்நிலையில், நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும், அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி,மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது.
இதற்காக, 'மொபைல் எண் மாற்றம்' (எம்.என்.பி.) தொடர்பான உரிம ஒப்பந்தத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 3–ந் தேதி திருத்தம் செய்தது. இந்த திருத்தம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த வசதி அமல்படுத்தப்பட வேண்டும்என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மே 3–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது. ட்ராய் இதற்கேற்ப, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ட்ராய்', தொலைத்தொடர்பு மொபைல்எண் மாற்ற ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அத்திருத்தம், மே 3–ந்தேதி அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. எனவே, நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறிய பிறகும், செல்போன்சேவை நிறுவனத்தை மாற்றும்போது அதே எண்ணில் பேசும் வசதியை, மே 3–ந் தேதியில்
இருந்து பெறலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 236 பள்ளிகளைச்சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 43மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 10லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகிறார்கள்.

இந்த தேர்வு செம்மையாக நடத்துவதற்காகஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டம்சென்னை கிண்டியில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- தேர்வு எழுத கட்டமைப்பு வசதிகள் அரசு பொதுத்தேர்வுகள்நடைபெறப்போவதை முன்னிட்டு முன்கூட்டியே அனைத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களும்,இணை இயக்குனர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டமாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக உரிய கட்டமைப்பு வசதியுடன் உள்ளதா? குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்டவசதிகள் இருக்கிறதா என்றுநேரில் பார்வையிட்டுவந்தனர். பெரும்பாலான மையங்கள் தயார் நிலையில் இருந்தன. சில மையங்களில் சற்று வசதிகள் குறைவாக இருந்தன. அந்த மையங்களும் இப்போது சரி படுத்தப்பட்டு தயாராக உள்ளன. பள்ளிக்கல்வித்துறைதான் பெரிய துறையாகும். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். சலசலப்புக்கும் வழி இன்றி தேர்வை நடத்துங்கள் தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து தற்போது கூட்டம் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையைச்சேர்ந்த அதிகாரிகள் எந்த வித சலசலப்புக்கும் வழி ஏற்படுத்தாமல்
தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும். அரசு பள்ளிகளில் இருந்து கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.அதுபோல இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மட்டுமல்ல பிளஸ்-2 தேர்விலும் எடுக்கவேண்டும்.அரசுக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

தகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்களில் ஆய்வை முடிக்க யு.ஜி.சி.,க்கு உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட,
உதவிப்பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில்
முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம்
அறிவுறுத்தியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கல்லூரிகளில், உதவி பேராசிரியர் நியமனங்களுக்கு கல்வித் தகுதியை யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின், இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, 5,000ஆசிரியர் பணியிடங்களில், கால் பங்கு தான், யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு,
அக்டோபரில் நடந்த, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,யு.ஜி.சி., விதிமுறைகளில் கூறியுள்ளபடி, இரண்டு ஆண்டுகளுக்குள், கல்வித் தகுதியை, ஆசிரியர்கள்பூர்த்தி செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்லூரிகளில் நடந்த நியமனங்களை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, ஏராளமான ஆவணங்களை, சென்னைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. பரிசீலனை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின் முழுமையான வடிவம் தெரியவரும்' என்றார். மேலும், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, நியமனங்கள் இல்லை என்றால், அதற்கான விளைவுகள் பின்தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பொதுநல மனுவை, இந்த கட்டத்தில் அனுமதிக்க, நாங்கள்விரும்பவில்லை. நியமனங்கள் குறித்த ஆய்வை, யு.ஜி.சி.,யும், பல்கலைக்கழகமும் விரைவுபடுத்தவேண்டியுள்ளது. ஆய்வு செய்வதற்காக, ஆவணங்களை, பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வர வேண்டும். இதற்கு, பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் என, நம்புகிறோம். ஆறு மாதத்திற்குள் பணிகளை முடிக்க, யு.ஜி.சி.,
முயற்சிகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

புதன், 25 பிப்ரவரி, 2015

TRB RELEASED PG Provisional Selection List After Certiificate Verification


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

 

Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2013 - 14 and 2014 - 15

          

Provisional Selection List After Certiificate Verification

As per the Notification No.8/2014 published on 07.11.2014, the Board conducted  Written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts on 10.01.2015 and results were published on 06.02.2015 except Physical Director Grade I.  Board also conducted Certificate Verification for the same from 16.02.2015  and 17.02.2015

Now, the Board  releases the Provisional Selection list for all subjects except Physical Education Director Grade.I. The list is prepared based on Written Examination marks and weightage marks for Employment Seniority and Teaching Experience following merit-cum-Communal Rotation, as per rules in vogue.

This selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras.

The appointment order for the eligible candidates, satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process.

Utmost care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.  Incorrect list would not confer any right of enforcement.

 

Dated: 25-02-2015

 

Member Secretary

Next

Home

 

தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இன்று நடைபெறவில்லை...

ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3 பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இன்று நடைபெறவில்லை இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

தகவல் : திரு.செ.முத்துசாமி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

NEWS UPDATE:ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி , மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி , மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை

செய்தது ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர்
தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக்கல் தீபா தாக்கல் செய்தமனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல்எம்.ஏ.,(தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்)ஆசிரியர்நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண்பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில்படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார்.அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும்,
எனகுறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம்,ராமநாதன்ஆஜராகினர். நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும்எம்.ஏ.,ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர்பணி வழங்க வேண்டும்


மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை
S.Deepa
... Petitioner
Vs.

The Member Secretary,
Tamil Nadu Teacher Recruitment Board,
Chennai.
... Respondent

Prayer: Writ Petition filed under Article 226 of the Constitution of India to
issue a Writ of Certiorarified Mandamus to call for the records in connection
with the impugned order of the respondent vide proceedings dated Nil and
quash the same and consequently direct the respondent to appoint the
petitioner as P.G. Assistant in the recruitment year 2012 with all attendant
and service benefits.

For Petitioner : Mr.V.Panneerselvam for
Mr.K.Ramanathan

For Respondents : Mr.V.Muruganantham
Addl. Govt. Pleader

:ORDER

This writ petition is filed challenging the order of the respondent
rejecting the petitioner's candidature for the post of P.G Assistant (Tamil)
on the ground that she studied M.A., B.Ed., in the same year.

2. The case of the petitioner is as follows:-
She completed her B.A., (Tamil) regular degree during the academic year
2004-2007. Thereafter, she joined B.Ed., in the academic year 2007-2008, for
which, examination was conducted in April 2008. She passed the B.Ed., degree
in the month of July 2008. After the result, she joined the M.A., (two
years) Tamil in the academic year 2008 November to 2009 November. First year
examination of M.A., was conducted in November 2008 and the second year
examination was conducted in November 2009. She passed M.A., in November
2009. After obtaining the above degree, she participated in the examination
conducted by the respondent in the month of October 2012 for the post of P.G.
Assistant (Tamil). She was successful in the examination by obtaining 108
marks. However, the respondent declined to give appointment to the
petitioner on the ground that she studied M.A., as well as B.Ed., in the same
year.

3. Counter affidavit is filed on behalf of the respondent, wherein it
is stated that at the time of certificate verification, it was found that the
petitioner passed B.Ed., degree course in July 2008 and she wrote M.A.,
(Tamil) in November 2009 and passed M.A., (Tamil). Because the petitioner
pursued both B.Ed., course and M.A., (Tamil) course during the same academic
year, the petitioner was not selected for appointment.

4. The learned counsel appearing for the petitioner submitted that the
reasons stated in the impugned order is factually not correct, since the
petitioner has passed the B.Ed., course in April 2008 and joined the M.A.,
course on 12.06.2008 and passed the same in the examination conducted in the
month of November 2009, for which the result was published on 15.04.2010.

5. Per contra, the learned Additional Government Pleader appearing for
the respondent reiterated the contentions raised in the counter affidavit and
submitted that the petitioner was not selected as she studied M.A., B.Ed., in
the same year.

6. Heard the learned counsel appearing on either side and perused the
materials placed before this Court.

7. The issue involved in this case is as to whether the petitioner has
studied both M.A., and B.Ed., in the same academic year as contended by the
respondent or not.

8. The B.Ed., degree certificate issued to the petitioner dated
12.11.2008 with Register No.A8400907 would show that the petitioner has
passed B.Ed., degree during the month of April 2008. Further, the statement
of marks issued by the Madurai Kamaraj University for M.A., (Tamil) course in
respect of the petitioner as found in the typed set of papers would show that
the examination for the said course was conducted in the month of November
2009 and the date of publication of result was on 15.04.2010. Further the
course completion certificate issued by the Madurai Kamarai University dated
11.02.2010 in favour of the petitioner would also show that she completed the
course of study in M.A., (Tamil) during January 2008 to December 2009.


9. Considering the above stated facts, I am of the view that the
respondent is not correct in stating that the petitioner studied M.A., and
B.Ed., in the same year. As already pointed out, the petitioner after
passing the B.Ed., degree in the month of April 2008, joined the M.A., course
in the academic year and however, completed the course and became successful
only in the month of April 2010, for which, examination was conducted in the
month November 2009. Therefore, it cannot be said that the petitioner has
studied both the B.Ed., and M.A., in the same year.

10. The learned Additional Government Pleader appearing for the
respondent relied on Division Bench decision of this Court made in W.A.No.845
of 2013 dated 07.01.2014 to contend that the person, who obtained both
degrees in the same academic year is not entitled for consideration for
appointment.

11. A perusal of the said order would show that the writ petitioner
therein had obtained B.Ed., degree and B.A., degree simultaneously within the
same calender year and consequently, the learned Judge rejected the
contention of the petitioner therein and the Division Bench upheld the order
of the learned Single Judge. The facts of the present case are totally
different as discussed supra. As I have already pointed out that the
petitioner has not obtained both the B.Ed., and M.A., in the same year, I
find that the petitioner is entitled to succeed in this writ petition.
Accordingly, the Writ Petition is allowed and the impugned order is set
aside. Consequently, the respondent is directed to appoint the petitioner as
P.G. Assistant in Tamil, within a period of eight weeks from the date of
receipt of a copy of this order. No costs. Consequently, connected
Miscellaneous Petition is closed.





To,
The Member Secretary,
Tamil Nadu Teacher Recruitment Board,
Chennai.

எண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் நிறுத்தம்

>

இன்டர்வியூ – நேர்முகத் தேர்வு!



 
 

து ஒரு நீண்ட ரயில் பயணம். நம் எதிரில் மூன்று பேர். அருகில் இரண்டு பேர்.

முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு. அவருக்கும் நாம்தான் இலக்கு.

முதலில் ஒரு புன்னகையை வீசிப் பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு, பேச்சு இந்தவிதமாகத்தான் துவங்கும்..

ஒரே புழுக்கமா இருக்குல்ல?

நீங்க எங்க இறங்கணும்? (சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில்)

டயத்துக்கு எடுத்துருவாங்களா?

ட்ரெயினை பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது…

என்று ஆரம்பித்து, "தம்பி என்ன பண்றீங்க?" என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், "என்னம்மா பண்றீங்க?") பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல்கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.

இதே நிலைதான், ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுன்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.

இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனத்துக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.

பெண் பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண் பார்க்கும் படலத்தின் நோக்கம்.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.

ஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான்!

ஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ள நபரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்து வைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பு இருக்கிறது.

 
 

இதேபோலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனி மனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை "இவர் இதுக்கு ஒத்துவருவாரா? மாட்டாரா?" என்று முடிவெடுக்க வைக்கிறது.

பொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.

இன்டர்வியூ – நேர்முகத் தேர்வு!

ஒரு இளைஞர் (ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான்) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு செல்கிறார் என்றால்…

ட்ரெஸ்ஸை இன் பண்ணிக்க…

கேட்ட கேள்விக்கு, தெரியுதோ தெரியலையோ, பட் பட்டுன்னு பதில் சொல்லு…

நிதானமா பேசு…

நேரா உக்காரு…

லைட் கலர் சட்டை போட்டுக்க…

தலையை லூசா விடாத…

கண்ணைப் பாத்து பேசு…

உக்காரலாமான்னு கேட்டுட்டு உக்காரு…

ஒரு சிரிப்போடயே இரு…

சீரியஸா முகத்தை வச்சுக்க…

சொந்த விவரங்களை ரொம்ப சொல்லாத…

சம்பளம் என்னன்னு கேளு…

சம்பளைத்த பத்தியே கேக்காத…

என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய், கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல், சீட்டின் நுனியிலேயே அமர்ந்து, ஏற்கெனவே காதில் வாங்கிய அறிவுரைகளில் எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.

கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும், ஒரே நேரத்தில் நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இன்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்.

இன்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.

இன்டர்வியூவை தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.

இந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.

இருந்தாலும், ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் இன்றைய நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.

முதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது.

அதற்கு முன்னால், ஒரு கேள்வி. Resume - Curriculam Vitae எனப்படும் CV. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

அடுத்து பார்க்கலாம்…


 

ஆதார் எண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் நிறுத்தம்

PG TRB TAMIL :இறுதி விடைக்குறிப்பில் நீக்கப்பட்டஇரண்டு கேள்விகள் - மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு

தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம்தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தமிழ்தேர்வு மதிப்பீட்டில் சிறிய எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டு 148 வினாக்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது.அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டது தவறு அதற்கு மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதியரசர் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம்

வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில்திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால்மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில்ஏராளமானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகளில் கலெக்டர் அலுவலக பயிற்சி முடிக்க இயலாத நிலையுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த ஊழியர்கள் துறை தேர்வுகளில் பயிற்சி பெற்று, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இரண்டாண்டு வருவாய் ஆய்வாளர் பணி முடித்திருப்பின் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதியானவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
நேரடி நியமன உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கு பதில், வருவாய் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரிய அமைச்சு பணி விதியில்திருத்தம் செய்யலாம் என வருவாய் நிர்வாக கமிஷனரும் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம் (அரசாணை எண்: 93, 20.2.15) செய்து அரசு செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு 12 வாரத்தில் ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
இதற்கான தேர்வில் 91 கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோருக்கான பிரிவில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கானஒதுக்கீட்டில் பட்டதாரி ஆசிரியர் பணி கோரினேன். ஆனால் தமிழ் வழி கல்வி ஒதுக்கீட்டிற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, ''தேர்வு நடந்தது, சான்றிதழ் சரிபார்த்தது ஆகியவற்றில் டிஆர்பி தரப்பில் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று அளித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கவில்லை என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதில், எங்கோ தவறு நடந்துள்ளது. மனுதாரரின் விளக்கம் திருப்தி அளிக்கிறது. டிஆர்பி தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.எனவே மனுதாரருக்கு 12 வாரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க டிஆர்பி தலைவர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கலசலிங்கம் பல்கலை.- பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்: கிராமப்புற மாணவர்களும் ஐஏஎஸ் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி பெற வாய்ப்புL

மாநில, மத்திய தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் அரசின் பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பட்டப் படிப்பு முடித்த கிராமப்புற மாணவர்கள், அடுத்தபடியாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட மாநில தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சரியான வழிகாட்டுதல்கள், முறையான பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால், பலர் தேர்ச்சி பெறுவதில்லை.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று, போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள், உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் சில தன்னார்வ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்கின்றனர். குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர் களுக்கு முக்கியப் பயிற்சி மையமாக விளங்குவது நூலகங்கள் எனலாம்.

விருதுநகர் மாவட்டப் பொது நூலகத் துறை சார்பில் ரூ.1.7 கோடியில் அரசு ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப் பட்டது. இந்தப் பயிற்சி மையத்தை, அரசு முதன்மைச் செயலர் இறையன்பு தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட பொது நூலகத் துறையும், கலச லிங்கம் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், நூலகங்களில் வாசகர்களாக உள்ள இளைஞர்கள், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாகப் பயிற்சி பெறலாம்.

இந்தப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே 420 பல்கலைக்கழகங்களுடன் இணைவு பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், 420 பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் சிறப்புப் பயிற்சிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த மாணவர்களும் பயிற்சி பெறலாம். இதுகுறித்து நூலகத் துறை அலுவலர்கள் கூறியதாவது:

போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சி, கருத்தரங்குகளில் இலவசமாகப் பங்கேற்பது மட்டுமின்றி, நூலக உறுப் பினர் அட்டை வைத்துள்ள அனைத்து இளைஞர்களும் இப்பயிற்சி மையத்தில் உள்ள நவீன கணினி வசதி மூலம் இ-புக், இ-லேர்னிங் மூலமும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறலாம். மேலும், எந்த மாதிரியான நூல்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது பற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.

தனியார் பல்கலைக்கழகத்தோடு பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வாசகர்களுக்கு வழிவகுத்துள்ளது நாட்டிலேயே இதுவே முதல் முறை. இதன்மூலம், எந்த அரிய புத்தகத்தையும் நிமிடத்தில் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இனி கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும். இதனால், சரியான வழிகாட்டுதல்களோடு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்களும் இனி சுலபமாக வெற்றி பெற முடியும் என்றனர்.



 

குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை!’ – ஆயிஷா நடராஜன்


தமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற 'ஆயிஷா' நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள்  ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

இரா. நடராஜன் (படம் உதவி: ப்ளிக்கர்)

நாம்: குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஏன் முக்கியமானது?
நடராஜன்: அதன்மூலம் அவர்கள் தம்முடைய கலாசார, பண்பாட்டு வேர்களை அறிந்து கொள்கிறார்கள். கதை என்பது வெறும் மனித, மிருகங்கள் உலா வருவது மட்டுமல்ல. குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்குவது – தாத்தா பாட்டி, அம்மா அப்பா ஆகியோர் சொல்லும் கதைகளின் வாயிலாகவும்தான்.

நாம்: கதை கேட்கும் மனோபாவம் எந்த வயது வரை ஒரு மனிதனுக்கு இருக்கும்?
நடராஜன்: மனிதன், தன் கடைசி வாழ்நாள் வரையிலும் கதை கேட்கும் மனோபாவத்துடன்தான் இருக்கிறான். பிறர் வாய்மொழியாகச் சொல்லும் கதையைக் கேட்கும் வயதைத் தாண்டிவிட்டாலும், புத்தகங்களின் மூலம் எழுத்தாளர்களின் வாயிலாகவும், பத்திரிகைச் செய்தியின் மூலம் பத்திரிகையாளனிடமிருந்தும், திரைப்படங்களின் மூலம் இயக்குநரிடமிருந்தும் நீங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.

நாம்: கூட்டுக் குடும்ப முறை சிதைந்துவரும் நிலையில், தாத்தா பாட்டியிடமிருந்து நமக்கு பழங்கதைகள் கிடைக்கும் வாய்ப்பு அருகிவிட்டது. அதை மீட்க நாம் என்ன செய்யவேண்டும்?
நடராஜன்: தாத்தா பாட்டிகளின் கதைகளை நாம் மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமான படிநிலை. ஏனெனில், மனிதர்களைக் கடத்திக்கொண்டு போய் முதியோர் இல்லங்களில் விடுவதை ஒரு கலாச்சாரமாக நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. அவர்களின் கதைகளை மீட்டெடுக்க பலவித கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்து வேலை பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. இதைச் செய்ய, நமது கல்விமுறைக்குள் புகுந்துகொண்டுதான் வேலை செய்யவேண்டும். குழந்தைகளைக் கதைசொல்லிகளாகவும் கதை கேட்பவர்களாகவும் மாற்றுவதே சிறந்த வழி!

நாம்: தாய்மொழியில் கதை சொல்வது அல்லது ஆங்கில சித்திரக்கதை இதழ்களை படிக்கச் செய்தல் /வாசித்துக் காட்டல் – இவற்றுள் எது சரி?

நடராஜன்: தாய்மொழி வழியே சொல்லிக் கொடுக்கப்படும் கதைகள்தான் குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்குமேயொழிய, பிறமொழிக் கதைகள்அல்ல. ஆங்கிலமொழி வழி அறியும் கதைகளில், ஆங்கிலப் படம் பார்ப்பது போல, அக்கதைகளின் உட்கூறுகளில் இயங்குகின்ற கதையின் அம்சங்களை மட்டும்தான் பார்க்கிறோமே தவிர, அதன் உள்ளே பொதிந்து இருக்கும் கலாச்சாரத்தை நம்மால் சரிவர உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அதுபோலத்தான் அந்தக் கதைகளும் வேலை செய்யும்.
நாம்: குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகளின் அடிநாதமாக அறநெறிகள் இருக்கவேண்டும் என்பது கட்டாயமா?
நடராஜன்: யாருக்கு அறநெறி தேவை? பெரியவர்களுக்கா? குழந்தைகளுக்கா? பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளா பொய் சொல்கிறார்கள்? கொலை செய்யக் கூடாது என்கிறார்கள். குழந்தைகளா கொலை செய்கிறார்கள்? திருடக் கூடாது என்கிறீர்கள். குழந்தைகளா திருடுகிறார்கள்? நம்முடைய நாட்டில் குழந்தைகள் இலக்கியமென்றாலே புராண, இதிகாசங்கள்தாம் என்று முடிவு கட்டிவிட்டார்கள். இதனால்தான் குழந்தைகள் – புத்தகங்களை விட்டும், நீங்கள் சொல்லிக் கொடுக்கின்ற கதைகளை விட்டும் ஓடுகின்றார்கள். அறநெறிகளை முன்னிருத்தி, 'இப்படி நடந்துகொள்; அப்படி நடந்துகொள்!' என்று சொல்லப்படுகின்ற அறிவுரைகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஒரு குழந்தையின் முன் அறநெறி அறிவுரைகளை சொல்லுவதைவிட, அதன்படி வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், பின்பற்றுகிறார்கள். இந்த அடிப்படையில், குழந்தைகள் அறிவியல் கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள். புதிய புதிய வனராஜாக்கள் கதைகளை விரும்புகிறார்கள். இன்றைக்கு மலையாளத்திலும், கன்னடத்திலும், தமிழிலும் அதிகம் விற்பனையாகும் குழந்தைகள் நூல்கள் எவை என்று எடுத்துப் பாருங்கள். இவை அனைத்துமே அறநெறிக் கதைகள் இல்லை. இவற்றின் தேவை பெரியவர்களுக்குத்தானே ஒழிய, குழந்தைகளுக்குஅல்ல! குழந்தைகள் எப்போதும், கற்பனை உலகில் இருக்கவே விரும்புகிறார்கள். அழகான பட்டாம்பூச்சிகளின் உலகையும், அறிவாற்றல்மிக்க உலகையும் மற்றும் பஞ்சதந்திரக் கதைகள் மாதிரியான உலகையும்தான் அவர்கள் விரும்புகிறார்களே தவிர, அறநெறிக் கதைகளை இல்லை.
நாம்: குழந்தைகளின் கதைசொல்லும் திறன் வளரும்போது, அவர்களின் படைப்பாற்றல் வளர்கிறது என்று கொள்ளலாமா ? எதிர்காலத்தில் இது அவர்களுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்?

நடராஜன்: நம்முடைய கல்வி முறை, அறிவைக் குறிவைத்து இயங்குகின்ற கல்வி முறையாக இருக்கிறது. அந்த அறிவை மனப்பாடம் செய்து, விடைத்தாளில் கக்க வைக்கின்ற மோசமான கல்விமுறையாக இருக்கிறது. ஆசிரியர்களின் வேலையே, பாடப்புத்தகங்களில் அறிவு என்று சொல்லப்படுகின்றவற்றை, அப்படியே குழந்தைகளின் தலையைத் திறந்து வங்கிகளில் பணம் போடுவது போல 'பொத்து பொத்'தென்று போடுவதாக இருக்கிறது. குழந்தைகளைப் படைப்பாளி ஆக்குகின்ற படைப்பாக்க கல்வியை நோக்கி நாம் போகவேண்டும். ஒரு வகுப்பறையில் ஒரு நிலாவைப் பற்றி பாடம் நடத்துகிறோம் என்றால், அக்குழந்தை முதலில் நிலாவைப் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டு, அப்புறம் நாம் பாடத்துக்குச் செல்லவேண்டும். அப்போதுதான் அக்குழந்தை, தான் நினைத்து வைத்திருக்கும் நிலா பற்றி அறிவியல் பூர்வமாகவும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அதைவிட்டு, அக்குழந்தைக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டு நிலாவைப் பற்றி பாடம் எடுப்பதில் பயனில்லை. கல்வியில் உண்மையான கற்றல் நடைபெறவேண்டும் என்றால், ஒரு குழந்தையை கதை சொல்லவும், படைப்பாளியாக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நாம்: குழந்தைகளுக்கான இன்றைய திரைப்படங்கள், சித்திரக் கதைகளில் சூப்பர் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா? சாமானிய மக்களின் வாழ்க்கையை, கதைகளாகப் புனையவேண்டிய தேவைஇருக்கிறதா?
நடராஜன்: சாதாரண மக்களின் கதைகளைத்தான் குழந்தைகள் விரும்பி ஏற்பார்கள். ஆனால், இப்போதைக்கு அமானுஷ்ய சக்தி வாய்ந்த மனிதர்களின் கதைகளை குழந்தைகள் விரும்புவதாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாம்தான் இப்படியான கதைகளை அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய காகமும் நரியும் கதை, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா உங்களுக்கு ? நம்முடைய கதையில் காக்கா, பாட்டியிடமிருந்து வடையைத் திருடிக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இதுவே சீனக் கதையில் மிக அற்புதமாக மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டியிடம் ஒரு காக்கை, தான் தேடிக் கண்டுபிடித்த காய்ந்த சுள்ளிகளைக் கொண்டுபோய் போடுகிறது. அந்தச் சுள்ளிகளை வைத்து அடுப்பெரிக்க முடிந்த அந்தப் பாட்டி, காக்கையின் உழைப்புக்காக ஒரு வடையைப் பரிசாகக் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை, நரி ஏமாற்றி வடையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறது. காக்கை 'கா.. கா..' என்று கத்தி, தன் இனத்தவர்களை அழைக்கிறது. நூற்றுக்கணக்கான காகங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. உழைப்¬பவனின் உழைப்பைச் சுரண்டுகிறவனைச் சும்மா விடாதே என்று நரியின்மேல் பாய்கின்றன. காக்கைகளுக்கு அன்றைக்கு அந்த ஒரு வடை மட்டுமல்ல; நரியும் உண்ணக் கிடைத்தது என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட கதைகளைத்தான் நாங்கள் வரவேற்கிறோம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காகக் கதை சொல்ல வந்தவர்கள். வெறும் கதைகளை மட்டும் நாங்கள் சொல்லுவதில்லை. அக்கதைகளுக்குள் பல மந்திரங்களையும் தந்திரங்களையும் அடிநாதமாக வைக்கிறோம். நம்முடைய தர்மங்களுக்கும் நியாயங்களுக்கும் சரியான இடம் கிடைக்கவேண்டும் என்று விதைக்கிறோம். உழைப்பாளர்களான சாதாரண மக்களின் வாழ்க்கையையும் இந்த உத்தி கொண்டுதான் நாங்கள் கதை தொடுக்கிறோம். இப்படியான கதைகளைத்தான் குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். சூப்பர் ஹீரோ கதைகளைக் கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கட்டும். உண்மையில் எங்களைப் போன்றோரின் கதைகளைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு, விற்பனையாகும் எங்களது நூல்களே சான்று.

நாம்: தமிழில் குழந்தை இலக்கியத் துறையில் நாமக்கல் கவிஞர்கள் அழ.வள்ளியப்பா, ஆலந்தூர்.கோ.மோகனரங்கன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, வாண்டுமாமா என்று ஒரு பரம்பரையே இருந்தது. இப்போது அதன் நீட்சி இருக்கிறதா? உங்கள் கதை மரபு பற்றிச் சொல்லுங்கள்…
நடராஜன்: எல்லா இலக்கியங்களையும் எடுத்தாண்ட சுப்பிரமணிய பாரதி, குழந்தைகள் இலக்கியத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறான். அவனது பாடல்களின் வழியே போனவர் அழ.வள்ளியப்பா. அவரது பாடல்களில் உழைப்பையும் கலந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியான பாடல்கள் பலவற்றைப் புனைந்திருக்கிறார்.
"மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!
முக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க!
ஏர் ஓட்டுற மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க!
சும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க!"
என்று ஒரு பாடல் எழுதியுள்ளார். இவை எல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. இதையெல்லாம் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அவ்வையின் ஆத்திச்சூடியை எல்லாம் குழந்தையிடம் கொண்டு செல்வோம். புதிய ஆத்திச்சூடியை பாரதியும் படைத்திருக்கிறான். ஏனெனில், குழந்தைகள் இவற்றைப் படிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். வருங்கால அறிவியலைப் பற்றியும் எழுதுகிறான். இந்த பாரதியிடமிருந்து அறிவியலை எடுத்துக்கொண்டவர்களில் சிங்காரவேலர், அதன்பின் பூவண்ணன், வாண்டுமாமா ஆகியோரின் பங்களிப்பைக் குறைத்து மதித்துவிட முடியாது. இவர்களின் வரிசையில்தான் நானும் இயங்கி வருகிறேன்.

நாம்: பூந்தளிர், பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய புரட்சியே நடந்துகொண்டிருந்தது. இப்போது இவற்றில் பலவும் காணாமல் போய்விட்டன. இது இயல்பானதா? நாம் இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடராஜன்: இன்றைக்கு இருக்கும் குழந்தைகளை வாசிக்க வைப்பது என்பது பெரிய சவால்! இன்றைய குழந்தை வேறு, அன்றைய குழந்தை வேறு. 80களுக்கு முன் இருந்த கல்விமுறை வேறு. அதன்பின் ராஜீவ் அரசு கொண்டுவந்த கல்விமுறை வேறு. 80களுக்கு முந்தைய கல்வி – வாசிப்பை, மனிதநேயத்தை வளர்த்த கல்வியாக இருந்த்து. இன்றைய கல்விமுறை டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துகின்ற கல்வியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே முதல் வகுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற போராட்டத்தின் கட்டாயத்தால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாடப்புத்தகத்தைவிட்டு, வேறு புத்தகத்தைப் படிக்கவைப்பதே பெரும் சவால். இப்படியான அவலமான சமூகத்தை நாம் உருவாக்கி விட்டிருக்கிறோம். இவை தவிர வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சிகள் என்று வாசிப்பைப் போக்கடித்த காரணிகள் நிறைய இருந்தாலும், வாசிப்பை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் ஏறி விளையாடிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, விளையாடவே வெளியே செல்லவில்லை என்று குழந்தைகளைக் குறைகூறி என்ன பயன்? இன்றைக்கும் கோகுலம், சுட்டி விகடன் மாதிரியான சிறுவர் பத்திரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், அவை எவ்வளவு தூரம் பரவலாகச் சென்றடைகின்றன என்பதை நாம் கவனிக்கவேண்டும். இச்சூழ்நிலையில்தான் குழந்தைகளுக்காக நான் எழுதிய 71 நூல்களும் குறைந்தது மூன்று பதிப்புகள் கண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வாசிப்பைச் சுவாசிப்பாக்கும் பணியை எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும். இதில் நீங்கள், நான், மக்கள் என்று எல்லோருக்கும் பங்கு உண்டு.
நாம்: அறிவியல் புனைகதைகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்…

நடராஜன்: ஆர்தர் சி க்லார்க் (Arthur C. Clarke), ஐசக் அசிமோவ் (Isaac Asimov) போன்றோரெல்லாம் தலைசிறந்த அறிவியல் புனைகதையாசிரியர்கள். ஆர்தர் சி க்லார்க் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய '2001: A Space Odyssey' என்ற நாவலில், அவர் குறிப்பிட்ட செயற்கைக்கோள்கள்தான் இன்றைக்கு நிஜமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஐசக் அசிமோவ், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குள் இன்றைக்கு நமது அலுவலகங்கள் இயந்திரமயமாக மாறும் என்பதை அன்றே சொன்னானே! அதைத்தானே நாம் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அறிவியல் புனைகதை என்பது, பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கற்பனாவாத விஷயங்களை முன்வைத்து பெரும் ஊக்குவிப்பைச் செய்கிறது. இந்த அடிப்படையில்தான் சுஜாதா போன்றோர் அறிவியல் புனைகதைகளை எழுதினார்கள். மாலன் கூட அருமையான இரண்டு அறிவியல் புனைகதைகளை எழுதியிருக்கிறார். இரா.முருகன் முதலாக நான் உட்பட இப்போது பெரிய கூட்டமே அறிவியல் புனைகதைகளை எங்களுக்கான தனித்தன்மையோடு எழுதி வருகிறோம். வகுப்பறைகளில் ஆசிரியர் கொடுக்கமுடியாத த்ரில்லை அறிவியல் புனைகதைகள் வாயிலாகக் கொடுத்து வருகிறோம். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இதனை அணுகமுடியும் என்பதால் இவை அவசியமானதும்கூட!

நாம்: பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி முறையில், போதுமான அளவுக்கு சிறுவர் நூல்கள் உள்ளனவா? தங்களது 'year of zero' நூல் மூலம் கிடைத்த அனுபவம் பற்றி…

நடராஜன்: 'year of zero' என்பது பூஜ்ஜியமாம் ஆண்டு என்ற தமிழ்ப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஒர் அறிவியல் போட்டியின் மூலம் தேர்வாகும் குழந்தைகள், விண்வெளிக்குச் செல்வதாகக் கதை. அதில் ஒரு பார்வையற்ற குழந்தையும், ஜுரத்தினால் பேசும் சக்தியை இழந்துவிட்ட ஒரு சிறுவனும் நான்கு பேரில் இருவராகத் தேர்வாகிறார்கள். பேச முடியாதவர்களையும், கண் தெரியாதவர்களையும் நீ அனுப்புவியா? என்று சமூகத்தை நோக்கி அதில் கேள்வி எழுப்பியிருப்பேன். உண்மையில் சாதாரணமானவர்களை விட, பார்வையற்றவர்களுக்கு நுண்ணுணர்வு அதிகம். அதனால் அந்தப் பாத்திரப்படைப்பு படைக்கப்பட்டது. இன்று நாம் காணும் எந்த விளம்பரத்திலாவது, மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் காட்டுகிறார்களா என்று யோசிக்க வேண்டும். ஏன், அவர்கள் உயிர் இல்லையா? எல்லாக் குழந்தைகளுமே 'கொழுக் மொழுக்' என்றுதான் இருக்குமா அல்லது இருக்கவேண்டுமா? என்ன அரசியல் இது? இதனாலேயே இப்படைப்பு எழுதப்பட்டது. அப்போது நண்பர் ஜின்னாவின் பெரும் முயற்சியால், தமிழில் பிரெய்லி முறையில் முதலில் வந்த புத்தகம் பூஜ்ஜியமாம் ஆண்டு. பார்வையற்ற வாசகர்களுடன் இலக்கியச் சந்திப்பு எல்லாம் நடத்தினோம். பிறவிப்பயன் என்று ஒன்று இருக்குமேயானால், ஒரு எழுத்தாளனாக அந்தச் சந்திப்பில்தான் நான் அதை அடைந்தேன் என்று சொல்லமுடியும்.

நாம்: பிற இந்திய மொழிகளில் குழந்தை இலக்கியம் எப்படி இருக்கிறது?
நடராஜன்: மராத்தி மொழியில், குழந்தைகளையே ஆசிரியர்களாகக் கொண்டு ஒரு குழந்தைகள் பத்திரிக்கை இருக்கிறது. அடுத்து கன்னடம். அங்கே வரக்கூடிய எல்லா வெகுஜன இதழ்களிலும், குழந்தைகளுக்கு என்று பத்து பக்கங்கள் ஒதுக்குகிறார்கள். அதில் குழந்தைகள் படைப்புகள், அவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் தமிழிலும் நடந்தால் நன்றாக இருக்கும். சிந்தி மொழியில், கல்வித்துறையே குழந்தைகளுக்கான ஒரு பத்திரிக்கையை நடத்துகிறது. நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும், என்னுடன் பயணம் செய்யும் யூமா வாசுகி, விழியன், சரவணன் போன்ற படைப்பாளிகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். சுட்டி விகடனும் கோகுலமும் சிறுவர் இலக்கியத்திற்காகச் செய்துவரும் பணி, நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்கிறது.



 

ஒரு மனிதனின் தைரியம் அவனது உடல்பலத்தில் இல்லை....மன திடத்தில்தான் இருக்கிறது!


''என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்" என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம் நோயை மீறி இயல்பான வாழ்க்கையில் தம்மை இணைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் உதவி வருகிறார்கள்.

"கால்களில் பயங்கரமான வலி ஏற்பட்டுச்சு. சமதளமான தரையிலேயும்கூட நடக்க முடியவில்லை. யாரோ கால்களைத் தட்டிவிடுவது போல, தடுக்கி தடுக்கி விழுந்தேன். பயங்கரமான வலி எடுத்துச்சு. மருத்துவர்கள், எனக்கு வந்திருக்கும் நோயின் பெயர் மஸ்குலர் டிஸ்ட்ரோபின்னு சொன்னாங்க. அதுவரைக்கும் அப்படி ஒரு நோய் இருக்குறதே எங்க வீட்டில் யாருக்கும் தெரியாது. 'என்ன வைத்தியம் பார்த்தாலும் இதை குணப்படுத்த முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக நடை தடைபட்டு படுக்கையில் விழுந்துடுவேன்'னு மருத்துவர்கள் சொன்னபோது, அதனுடைய சீரியஸ்னஸ் அப்போ எனக்குத் தெரியலை. ஆனால், எல்லோரையும் போல நீண்டகால வாழ்க்கை எங்களுக்குக் கிடையாது. குறுகிய காலத்துல எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்துடணும்னு நினைக்கிறேன்" என்றார் மாதேவி.

Vanavanmadevi

இயலிசை வல்லபி, வானவன் மாதேவி

மாதேவிக்கு மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்று உறுதிபடுத்தப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, அவரது தங்கை இயல் இசை வல்லபிக்கும் இதே நோய் தாக்கியது. பள்ளி சென்ற நாட்களில் இவர்கள் கீழே விழுந்து எழாத நாளே இல்லை. தங்கைக்கு அக்காவும், அக்காவுக்குத் தங்கையுமாக உதவிகள் செய்து பத்தாவது வரைக்கும் பள்ளி சென்று படித்தார்கள். படிக்கும் ஆர்வமிருக்க, உடல்நிலையோ ஒத்துழைக்க மறுக்க, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை, தனித் தேர்வராக எழுதி வெற்றி பெற்றார்கள். அதன்பின் அஞ்சல் வழியாக கணினி (டி.சி.ஏ) பட்டயப்படிப்பும், டிடிபி படிப்பும் படித்து முடித்துள்ளனர்.

"இப்படியே முடங்கிடுவோம்னு நினைக்கவே இல்லை. ஆனாலும், தன்னம்பிக்கை மட்டும் குறையாம பார்த்துகிட்டோம். அதுக்கு அம்மாவும், அப்பாவும் ரொம்பவே உதவுனாங்க. தங்களுடைய ஏமாற்றத்தையும் வலியையும், ஒருபோதும் எங்க முன்னாடி அவங்க காட்டிக்கிட்டதே இல்லை.  அதோட நல்ல மனம் படைத்த நண்பர்களின் ஆதரவும் இருந்ததுதான் இவ்வளவு தூரம் எங்களைப் பயணப்பட வச்சிருக்கு. நம்பிக்கைதானேங்க எல்லாம்" என்று சிரிக்கிறார் வல்லபி.

கற்றுத்தேர்ந்த கல்வியின் பயனாக, சில நாட்கள் வீட்டிலேயே சுய தொழிலாக  திருமண அழைப்பிதழ், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை வடிவமைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்துள்ளனர். இவ்வளவு பணிகளுக்கு நடுவிலும், தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளுக்காக வெளியூர் பயணங்களையும் மேற்கொண்டு வந்தனர்.

தங்களுக்கு இருக்கும் வசதியால் இவ்வளவு வேலைகளைச் செய்ய முடிந்திருக்கிறது. இதுவும்கூட இல்லாதவர்களின் நிலை என்ற சிந்தனை ஒரு நாள் வந்தபோது, உருவானதே ஆதவ் அறக்கட்டளை. இச்சகோதரிகளின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்க இவர்களின் தந்தை இளங்கோவன் முன்வந்தார். மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியர் இவர். தனது ஓய்வூதியப் பணத்தை, தன் மகள்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கொடுத்தார்.

தங்களது சொந்த வீட்டிலேயே வாரம் ஒருமுறை பிசியோதெரபி பயிற்சியும், அஃகுபிரஷர் பயிற்சியும் தொடங்கியுள்ளனர். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர்களுக்குச் சென்று இப்படி ஓர் இலவச தெரபி சென்டர்  தொடங்கப்பட்டுள்ளது என்று துண்டறிக்கை மூலம் தெரியப்படுத்தினர். அப்படியும் பெரிய அளவில் மக்கள் யாரும் வரவில்லை.

பொது வாகனங்களில், இப்படி தசைச்சுருக்கு நோய் உடையவர்களை ஏற்றிஇறக்கி வந்துசெல்ல முடியாது என்பதுதான் காரணம். இதை அறிந்ததும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ஆட்டோவில் வந்துபோகும் செலவையும் இவர்களே ஏற்றுக்கொண்டனர். வாரம் ஒரு நாள் பயிற்சி போதாது என்பதை உணர்ந்த இவர்கள், தினமும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக தனியாக இடம் பார்த்து பயிற்சிக்கூடத்தைத் தொடங்கினர். அப்புறம் அங்கே தங்கி, பயிற்சி எடுத்துக்கொள்ளும் வசதிகளையும் ஏற்பாடு செய்தனர். இவையனைத்தும் இலவசம்.

'தங்கி இருப்பவர்கள் தாங்களே, தங்கள் செலவில் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்போது அரிசி, பருப்பு என்று சமையலுக்குத் தேவையான பொருட்களும், உதவும் உள்ளங்கள் மூலம் கிடைத்து வருகின்றன. இவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள், இன்னும் இருக்கு' என்று சிரிக்கிறார்கள் சகோதரிகள்.

இவ்விருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி, தசைச்சுருக்கு நோயைக் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவிட பல நல்மனம் கொண்ட மருத்துவர்களும் வருவதால், இவர்களின் பணி தொய்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

"தொடக்க காலத்துல எங்களுடைய கைக்காசைப் போட்டுத்தான் இந்த வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தோம். அப்புறம் சிலர் நன்கொடைகள் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்படிப் பலரும் உதவி வருவதால், நாங்க வாழும் காலத்திலேயே எங்களுடைய கனவுத்திட்டத்தை நிறைவேத்திட முடியும்னு நம்புறோம். அதுக்காகத்தான் வேகமாக உழைச்சுகிட்டு இருக்கோம்.

எங்களுடைய எதிர்கால திட்டம்னு ஒண்ணு இருக்கு. இப்ப இங்க நாங்க நடத்திகிட்டு இருக்குற ஹோம்ல, மஸ்குலர் டிஸ்ட்ரோபியால் பாதிக்கப்பட்டவங்க மட்டும்தான் தங்கி சிகிச்சை எடுக்க முடியுது.  மூளை முடக்குவாதம் (cerebral palsy) போன்ற பிரச்னைகள் உள்ளவங்க, தினமும் வெளியில் இருந்து வந்து சிகிச்சை எடுத்துக்குறாங்க. அவங்களும் தங்கி இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது மாதிரி பெரிய இல்லம் ஒண்ணு கட்டணும். அது, ஹைட்ரோதெரபி மாதிரி வலி குறைவான பயிற்சிகளுக்கான வசதிகள் உள்ளடக்கிய மையமாக இருக்கணும்னு ஆசைப்படுறோம். அதுக்காக இப்பத்தான் பக்கத்துல மூணு ஏக்கரில் இடம் வாங்கி இருக்கோம். இனி, கிடைக்கும் நன்கொடைகள் மூலமாக அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டணும்" என்கிறார்கள் குரலில் நம்பிக்கை தொனிக்க.

'ஒரு மனிதனின் தைரியம் அவனது உடல்பலத்தில் இல்லை. மாறாக, மன திடத்தில்தான் இருக்கிறது' என்பதை வாழ்க்கையாக வாழ்ந்துகாட்டி வருகிறார்கள் இவ்விருவரும்.


 

உள்ளம் கவர் கோமாளி .....


 


பள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

தூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த 'ஹோய்' ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன் தயாரிப்புதானோ என்று சந்தேகம் எழுகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் அந்தக் கோமாளி, தன் குழுவினருடன் கதை சொன்னபடி நாடகம்போல நடித்துக் காட்டுகிறார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளையும் வீசுகிறார். அவர்களும் மிகுந்த உற்சாகமாக அக்கோமாளியின் கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைத்து விடாதீர்கள். 'வேலு மாமா' என்று குழந்தைகளால் அன்புடன் கொண்டாடப்படும் பேராசிரியர் வேலு சரவணன் செல்லுமிடம் எல்லாம் இதே கதைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லியாகவும், நாடகக் கலைஞராகவும் அறியப்பட்டு வரும் வேலு சரவணன், இந்த ஆண்டின் 'செல்லமே' விருது நாயகனாகிறார். அவரிடம் பேசுவதற்காக உதவிப் பேராசிரியராக அவர் பணியாற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கே சென்று சந்தித்தோம்.

"புதுக்கோட்டை பக்கத்துல இருக்குற கம்பர் கோயில்ங்கிற கிராமம்தான் நான் பிறந்த ஊர். எனக்கு எங்க ஊர்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு கடை கூட அங்கே கிடையாது. அம்புட்டு சின்ன ஊரு. எவ்வளவுதான் சுத்தினாலும் எல்லா முகங்களுமே தெரிஞ்ச முகங்களாக இருக்கும். எல்லோரையும் உறவுமுறை சொல்லி கூப்பிட்டுக்குவோம். பன்னிரண்டாவதுக்கு அப்புறம் மேலே படிக்க வைக்க, எங்க அண்ணன் என்னை அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வச்சார். அப்பத்தான் இந்த ஊரையும் மக்களையும் பிரியுறோமேன்னு எண்ணம் வந்துச்சு. அதனால படிப்பு மேல எனக்குக் கோவம் வந்துச்சு. அந்தக் கோபம் இன்னமும் இருக்கு.

'கட்டாயமா கல்லூரி போகணும்'னு அண்ணன் ஏன் என்னைய அனுப்பினார்னா.. அந்த வருசம்தான் என்னோட அப்பா காலமானார். அப்பா இல்லாத பையனைப் படிக்கவிடாம தடுத்துட்டான்னு அண்ணனை யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, கஷ்டத்துலேயும் என்னைய கல்லூரிக்கு அனுப்பினார். நானும், அண்ணனுக்குக் கெட்டபேரு ஏதும் வந்துடக் கூடாதேன்னுதான் பி.எஸ்.ஸியே படிச்சேன். கல்லூரி ஆண்டுவிழாவுல நாடகம் எல்லாம் போட்டோம். அப்பத்தான் எனக்கு இதுல ஆர்வமே வந்தது. ஊருக்குள்ளேயும் நண்பர்களை வச்சுகிட்டு குட்டி குட்டியா நாடகங்கள் போட்டோம். கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு எழுதினதும், ஏதாவது வேலைக்குப் போயிடுவோம்னு தூத்துக்குடி பக்கம் பார்த்து வண்டி ஏறிட்டேன். ஏன்னா.. நான் பாஸாகவே மாட்டேன்னு நினைச்சேன். ரிஸல்ட் வர்ற அன்னிக்கு 'ரிசல்ட் பார்க்க வர்றியாடா?'ன்னு நண்பர்கள் போன் பண்ணி கூப்பிட்டாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன். ஆனா எப்படியோ பாஸாகிட்டேன். அதை நண்பர்கள் சொன்னபோது நம்பிக்கையே வரலை. அந்தச் சமயத்துலதான் தினசரி பத்திரிக்கைகளில் பாண்டிச்சேரியில நாடகத்துறை துவங்கப் போறாங்க. விருப்பமானவங்க விண்ணப்பிக்கலாம். பெரிய எதிர்காலமெல்லாம் இருக்குன்னு விளம்பரம் வருது. எனக்கு இந்த ஆட்டம் பாட்டத்துல ஆர்வம் இருக்குறது அண்ணனுக்கும் தெரியும். அவரு மனு போடச் சொன்னாரு. நானும் போட்டேன். இடம் கிடைச்சிடுச்சு. நாளைய சூப்பர் ஸ்டார் நாமதாண்டான்னு நினைச்சுகிட்டு வந்துட்டேன். ஆனா.. வந்த பிறகுதான் தெரிஞ்சது. இந்த உலகமே வேறன்னு. கொஞ்சம் மனசு சோர்வானாலும், சீக்கிரமே என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன்.

இங்கே வந்த பிறகுதான், நாடகத்துலேயே இத்தனை வடிவங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. நமக்கான இடம் இதுதான்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதோட இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் மாதிரியான இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்திருக்காங்க. அதோட, இந்தத் துறையில படிக்க வந்தவங்களிலேயே நான்தான் வயசுலேயும் உருவத்துலேயும் சின்னப் பையன். மத்தவங்க எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க. இவங்க மூலமா வாசிப்புப் பழக்கமும் எனக்கு ஏற்பட்டுச்சு. பல புதிய விசயங்களும் அறிமுகமாச்சு.

அப்போ ஒரு நாடக விழா நடத்தினாங்க. அதுக்கு இயக்குனர் பாலச்சந்தர் எல்லாம் வந்திருந்தாங்க. மத்தவங்க நாடகங்களில் திரைக்குப் பின்னாடிதான் எனக்கு வேலை. நடிக்க வாய்ப்பு கிடைக்கலை. நான் ரொம்ப சின்னப் பையனா இருந்தது ஒரு காரணம். சின்ன வயசுல என்னோட தாத்தா சொன்ன கதை கடல் பூதம். என்னோட ஆசிரியர்கள்கிட்ட அனுமதி வாங்கி, அந்தக் கடல் பூதத்தை சிறுவர் நாடகமாக்கினேன். கூட படிச்சிகிட்டு இருந்தவங்கள வச்சே நாடகத்தைப் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். எல்லோரும் பாராட்டினாங்க. அந்த விழாவுக்கு, பாண்டிச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் வந்திருந்தார். அவருக்கும் நாடகம் பிடிச்சிருந்தது. 'பாண்டிச்சேரியில் இருக்குற எல்லா பள்ளிகளிலும் இதை நாடகமாகப் போடுங்க'ன்னு சொல்லிட்டார். சந்து சந்தாக பாண்டிச்சேரி முழுக்க கடல் பூதம் போயிட்டு வந்தது. இதுவரைக்குமே சுமார் நாலாயிரம் தடவை போட்டிருக்கேன். அதேமாதிரி 'குதூகல வேட்டை'ன்னு ஒரு நாடகம். இதை மூவாயிரம் முறைக்கும் மேல் போட்டிருக்கோம். 'தேவலோக யானை'ன்னு ஒரு கதை. இதையும் ஆயிரம் முறைக்கு மேல போட்டிருக்கோம்.

வானரப்பேட்டைங்கற இடத்துலேயிருந்து நாடகம் போட ஒரு ஆசிரியை கூப்பிட்டாங்க. சரின்னு போய் இறங்கினா, அத்தனையும் பால்வாடி பசங்க. குட்டிக் குட்டி பாப்பாக்கள். அவங்களைச் சிரிக்க வைக்கணும். சவாலா எடுத்துகிட்டு கடல் பூதம் நாடகம் போட்டேன். அதுல 'குபீர்'னு பூதம் வந்தபோது, ஒரு பாப்பா 'வீல்'னு அலறிடுச்சு. அம்புட்டுதான்.. அங்க இருந்த ஆயா வெளக்குமாத்தைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. கடுமையா, 'போங்கடா வெளியே'ன்னு திட்டினாங்க. ஆனா, டீச்சர் ஆயாவைச் சமாதானப்படுத்தி, அந்தப் பாப்பாவைத் தூக்கிகிட்டு வெளியில போனாங்க. பூதம் வேடம் போட்டவன் ஒரு சின்னப் பையன். அவன் ஆயாவுக்குப் பயந்துகிட்டு தூணுக்குப் பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான். வெளியில வரல. அப்புறம் அவனையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்து நாடகம் போட்டோம். அந்த முழு நாடகத்தையும், பயந்து அழுத அந்தப் பாப்பா வெளியே இருந்த ஜன்னல் வழியா பார்த்துகிட்டே இருந்தது. கண்ணுல நீர் கோர்த்து இருந்த அந்தப் பாப்பா, ஒரு கட்டத்துல குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சது. இதை என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

பொதுவாகவே, நான் போற இடத்திலெல்லாம் பள்ளிக்கு ஒரு கோமாளி வேண்டும்னு பேசுவேன். 'பாடம் பாடம்'னு மாணவர்கள் சோர்ந்துபோய் இருக்கும் சமயம், திடீர்னு கலர் கலரா ஆடை அணிஞ்சுண்டு ஒரு பபூன் வகுப்பறைக்குள் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? பட்டுக்கோட்டையில் ஒரு பள்ளியில இதை நடைமுறைப்படுத்தி இருக்கோம்னு அவங்க எனக்குச் சொன்னபோது உண்மையிலேயே ரொம்ப சந்தோசப்பட்டேன்.

வேலு சரவணன்

வேலு சரவணன்

நாடகம்னாலே, அது இரவு நேரத்துல போட்டாதான் நல்லா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கு. ஆனால், என்னோட நாடகங்களில் பலவும் பகலில் வெளிச்சத்தில் போட்டதுதான். அதோட, 'நாடகம் போடப்போற இடத்துல மேடை வேணுமா சார்?'னு கேப்பாங்க. நான், வேண்டாம்னு சொல்லிடுவேன். குழந்தைகளையும் உள்ளடக்கிச் செய்யறது என்னோட நாடகமுறை. அதுக்கு எதுக்கு தனியா மேடை? எனக்கு மேடையின்னா, என்னிக்குமே அது குழந்தைகளின் மனசுதான்.

.