சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகியபாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர்பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாகவரையறுக்கப்பட்டன.எதிர்காலத்தில் முழுநேர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர். அந்த பணியிடங்களில், போட்டித்தேர்வு மூலம் நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால், மதிப்பூதியத்தில் பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்,530, ஓவிய ஆசிரியர், 250, தையல் ஆசிரியர், 160, இசை ஆசிரியர், 55 என, 995 சிறப்பாசிரியர் பணியிடங்கள் உள்ளன.போட்டித்தேர்வு மூலம் பணியிடத்தை நிரப்பினால், தங்கள் வாய்ப்பு பறிபோகும் என, பகுதிநேர ஆசிரியர்கள்தவிக்கின்றனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு கவின் கல்லூரியில்,ஐந்தாண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே, போட்டி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், சிறப்பாசிரியர்பணியிடம் பறிபோகும் நிலை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ,'' என, கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக