வழுவி நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்றும் தெரிந்து உணரப்படும் எ - று. |
'வெள்ளைக் கிரண்டாம் அகவற்கு மூன்று கலிக்கடி நான்கு எள்ளப்படா வஞ்சிப்பாவிற்கு மூன்றாம் இழிபு' என்று பாக்களை முறையிற் கூறாது தலை தடுமாற்றமாகக் காரிகை சொல்லவேண்டிய தென்னையோ வெனில், 'தலைதடுமாற்றத் தந்து புணர்ந்துரைத்தல்' என்பது தந்திரவுத்தியாகலின்; அது மயேச்சுரர் முதலாகிய வொருசாராசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்றாரென்பதூஉம். ஆசிரியப்பா இரண்டடிச் (3) சுரிதகமாய் வரப்பெறும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை? |
| 'வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியெனும் நண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை இரண்டு மூன்று நான்கு மிரண்டுந் திரண்ட வடியின் சிறுமைக் கெல்லை' |
என்றெடுத்து ஓதிய மயேச்சுரர் வஞ்சிச் சிறுமைக்குக் காட்டும் பாட்டு: |
| 'பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி வேந்தன் 2கழல் பரவாதவர் வினைவெல்லார் அதனால் அறிவன தடியிணை 3பரவப் பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே.' |
இதனை முச்சீர் வஞ்சியாக அலகிட்டு வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தான் இற்று இரண்டடியான் வந்தவாறு கண்டுகொள்க. |
| '(4) ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை இருதொடை மூன்றா மடியி னிழிந்து |
|
(3) சுரிதகம் - கலிப்பா, வஞ்சிப்பாக்களின் ஈற்றில் வரும் உறுப்பு. நீர்ச் சுழிபோலச் சுரிந்து முடிவதனால் சுரிதகம் எனப்படும். சுரிந்து முடிதலாவது முன் வந்த அடியளவிற் சுருங்கி முடிதல்.
(4) இரண் டடிகொண்டது ஒரு தொடை ஆதல்பற்றி 'ஒருதொடையீரடி, என்றார். தொடை - (மலர்களால்) தொடுக்கப்படும் மாலையே போல, அடிகளால் தொடுக்கப்படுவது. மூன்றாம் அடி - மூன்றாகிய அடிகள். மேலே,' நான்காம் |
|
(பி - ம்.) 2. புகழ். 3. பரவிப். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக