தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம்தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது
இதற்கிடையில் ,சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதியியல் மற்றும் தமிழ் பாடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.6 ஆம் தேதி வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பில் சில தவறான விடைக்குறிப்பு உள்ளதாகவும்,அதனை பரிசீலித்து சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.வழக்கினை விசாரித்த நீதியரசர் துரைசாமி பதில்மனு தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கினை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக