செவ்வாய், 31 மார்ச், 2015

'கவுன்சிலிங்' மூலம் சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செய்திக் குறிப்பு: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,746 முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான 'ஆன் - லைன் கவுன்சிலிங்', நேற்று முன்தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற, 1,746 பேருக்கு, அவர்களால் தேர்வு செய்யப்பட்ட காலியிடங்களில், பாடவாரியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழ் 265, ஆங்கிலம் 195, கணிதம் 220, இயற்பியல் 188, வேதியியல் 188, தாவரவியல் 92, விலங்கியல் 87, நுண்ணுயிரியல் 2, வரலாறு 196, பொருளியல் 173, வணிகவியல் 140 என, பாட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,789 பேர் தேர்வானதாக அறிவித்திருந்தது; ஆனால், 1,746 பேருக்கு மட்டும், 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நடந்துள்ளது. எனவே, மீதமுள்ள 43 பேருக்கு, 'கவுன்சிலிங்' உண்டா அல்லது 1,746 பேர்தான் தேர்வு செய்யப்பட்டார்களா என்ற குழப்பம் நிலவுகிறது.

திங்கள், 30 மார்ச், 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லாதலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.இதனையடுத்து, 2 வாரம் கால அவகாசம்அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியிழப்புச் செய்யப்படுவதாகவும், எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும்
என்று கோரி, லாவண்யா உள்ளிட்ட பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

முடிகிறது பிளஸ் 2 தேர்வு

முடிகிறது பிளஸ் 2 தேர்வு
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. உயிரியல், தாவரவியல், கணிதப் பதிவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கானதேர்வுகளுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது. கணினி அறிவியல் மாணவர்களுக்கு, கடந்த வெள்ளிக்கிழமையே தேர்வுகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தப் பணிகள், தமிழகம் முழுவதும், 73 மையங்களில் நடக்கின்றன. மொழிப்பாடங்களுக்கு பல மையங்களில், திருத்தம் முடிந்து விட்டது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி விட்டது. அதே நேரம், கணிதம், வேளாண் அறிவியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மட்டும், வினாத்தாளில் பிழைகள், கேள்விகளில் குழப்பம், வினாவிலுள்ள அளவீட்டில் குளறுபடி போன்ற காரணங்களால், 'கீ ஆன்சர்'மற்றும் மதிப்பெண் வழங்கும் விதிகளில் மாற்றம் தேவைப்படுகிறது.வினாத்தாள் தயாரிப்பு கமிட்டி ஆசிரியர்களுடன், கல்வித் துறை அதிகாரிகள் பேசி, 'கீ ஆன்சரில்' திருத்தம் செய்யப்படும்; பிறகே, பிரச்னைக்குரிய பாடங்களுக்கு விடை திருத்தம் துவங்கும். மேலும், கணிதத் தேர்வு நடந்த போது, ஓசூரில் 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள் லீக் ஆனதால், அந்த மாவட்ட விடைத்தாள் கட்டுகளை திருத்துவதா அல்லது ஆய்வுக்கு உட்படுத்துவதா என்றும், முடிவு செய்யவேண்டியுள்ளது. எனவே, இப்பாடங்களுக்கான திருத்தம் தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தை தீவிரப்படுத்துவதுகுறித்து, ஜாக்டோ இன்று ஆலோசனை

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை வெளியீடு; இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம்; ஆசிரியர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.இதற்காக, கடந்த 12 ஆண்டு களுக்கு பின், 29 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழுஅமைக்கப்பட்டது. இக்குழு, மார்ச் 8ல், தமிழகம் முழுவதும் பேரணி நடத்தியது. தொடர்ந்து, ஏப்., 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக் குழுவில், மேலும், 10 ஆசிரியர் சங்கங்கள் இணைய முன்வந்துள்ளன. இதற்கான இணைப்பு மற்றும் அடுத்தகட்ட போராட்டம் குறித்த, ஜாக்டோ குழுஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி, தமிழ்வாணன் கூறுகையில், ''ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம்,
சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க அலுவலகத்தில்நடக்கிறது. பல புதிய சங்கங்கள் ஜாக்டோவில் இணைப்பது; ஏப்., 19ம் தேதி, உண்ணாவிரதத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி
வெற்றி பெற வைப்பது குறித்தும், உயர்மட்டக் குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்,'' என்றார்.
ஜாக்டோ போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்படாமல் சமாளிக்க, கடந்த பிப்ரவரியில், ஜாக்டோ குழுவினர் முதல்வர்சந்திக்க, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஜாக்டோ குழுவினர் தலைமைச் செயலகத்துக்கு
அழைக்கப்பட்டு, பின், நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.முதல்வர் தங்களைசந்திக்காத நிலையில், மீண்டும் ஜாக்டோ குழுவை, அரசே அழைக்க வைக்கும் வகையில்,போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, இன்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக, ஜாக்டோ வட்டாரங்கள் தெரிவித்தன.

'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு, அப்பாவி ஊழியர்களை பழி வாங்குவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
'சஸ்பெண்ட்'
கடந்த, மார்ச், 18ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வில், ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், விஜய் வித்யாலயாபள்ளி ஆசிரியர் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகியோர், 'வாட்ஸ் - அப்'பில், வினாத்தாளை லீக் செய்தனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களான இருவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடக்கிறது. இப்பிரச்னையில்,ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தொடர்ந்து, ஓசூர் கல்வி அலுவலக ஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியரான மற்றொரு சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் அசோக்குமார்ஆகியோரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு கல்வித்துறை அலுவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிகாரிகளின் தவறுகளுக்கு,சாதாரண ஊழியர்கள் மீது பழி போட்டு, விசாரணையை முடக்க சதி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:தேர்வுப் பணிகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வென்றால் அதில் முதுகலை ஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், 10ம் வகுப்பு என்றால், அதில் பட்டதாரிஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், ஒரு மறைமுக கூட்டு அமைத்து செயல்படுவது, கடந்த பல ஆண்டுகளாகநீடிக்கிறது. இதில், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்ற அடிப்படையில், எந்த தேர்வுத்துறை இயக்குனரும், செயலரும் மாற்றம் கொண்டு வர முயற்சித்தது இல்லை.
அவசரகதியில்...
மாறாக, தவறு நடந்தால், பள்ளிக்கல்வி ஊழியர்களை மட்டும் பழிவாங்கும் போக்கு உள்ளது. இந்த ஆண்டு தேர்வு நடக்கும்போதே, விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியதால், முதுகலை மொழிப்பாட ஆசிரியர்கள், திருத்தப் பணிக்குஅனுப்பப்பட்டனர்.அதனால், முக்கியப் பாட தேர்வுப் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், அவசர கதியில், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை பணிக்கு எடுக்கின்றனர்.தனியார் பள்ளி அனுப்பும் ஆட்களை தேர்வுப் பணிக்கு அனுப்பி விட்டு, பின் முன் தேதியிட்டு, பணி நியமன உத்தரவு கேட்கும் சம்பவங்கள்
நடந்துள்ளன.ஆனால், தனியார் பள்ளி சார்பில் வருபவர் நல்லவரா, முன் அனுபவம் உள்ளவரா, உண்மையில் அவர் ஆசிரியரா என்று அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அதனால், முறைகேடுகள் சாதாரணமாகி விட்டன. இதன்படியே, ஓசூர் விவகாரத்தில், கல்வி அலுவலக ஊழியர்கள் மீது பழி போட்டு, அதிகாரிகள் தப்பிக்கப் பார்க்கின்றனர். இதை அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
'சஸ்பெண்ட்' ரத்து செய்யாவிட்டால் போராட்டம்
ஓசூர் பிரச்னை தொடர்பாக, கல்வித்துறை ஊழியர்கள், இன்று டி.பி.ஐ., வளாகத்தில் உணவு இடைவேளையில் கண்டனக் கூட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுச் செயலர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:ஓசூரில், தனியார் பள்ளி ஆசிரியர்களை, 'ஆர்டர்' இன்றி, தேர்வறைக்கு வினாத்தாள், விடைத்தாள் கட்டுகள் கொடுத்து அனுப்பியது, தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மையப் பொறுப்பாளரின் தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாத அலுவலக ஊழியர்களை பலிகடாவாக்கி, விசாரணையை திசை
திருப்பப் பார்க்கின்றனர். எனவே, ஊழியர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பின் மாநில அளவிலும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்: இணையதள, 'சர்வரில்'கோளாறு ஏற்பட்டதால், குறித்த நேரத்தில், கவுன்சிலிங் துவங்கவில்லை

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்'கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னைஉள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டு, 1,789 முதுகலை ஆசிரியர் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு, இணையதள கவுன்சிலிங், நேற்று,தமிழகம் முழுவதும் நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலகம் மூலம், சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் இருந்து, இணையதள இணைப்பின் மூலம், பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, கவுன்சிலிங் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை,பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை இணைக்கும், இணையதள, 'சர்வரில்'கோளாறு ஏற்பட்டதால், குறித்த நேரத்தில், கவுன்சிலிங் துவங்கவில்லை. இதனால், பல மாவட்டங்களில் இருந்து, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வந்திருந்த முதுகலை பட்டதாரிகள், தங்களுக்கு பணிநியமனம் கிடைக்குமா என்று சந்தேகம் அடைந்தனர்.
பின் , 'சர்வர்' சரி செய்யப்பட்டு, கவுன்சிலிங் துவங்கியது. இதில், முக்கிய மாவட்டங்களில் உள்ள ஆசிரியர், காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை என, சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆசிரியர்கள், பணிக்கு செல்ல அச்சப்படும், சில பள்ளிகள்; பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் வேலூர்,
கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் உள்ள காலி இடங்களை மட்டும், புதிய பணிநியமனத்திற்கு காட்டியதாக கூறப்படுகிறது.
சென்னையில், 100 அரசு பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. ஆனால், ஏராளமான பணியிடங்கள், நேற்று நிரப்பப்படவில்லை. ஏற்கனவே, பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் மே மாதம் நடக்க உள்ளதால்,அப்போது, சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள, காலி இடங்களை நிரப்பதிட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங்கில்
தேர்வானவர்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை, தேர்வு செய்து கொள்ள, உயர் அதிகாரிகளின் சிபாரிசைநாடியுள்ளனர். குறிப்பாக, கோட்டையில் உள்ள ஒரு சிலரின், சிபாரிசின் படியே, புதிய ஆசிரியர்களுக்கு விருப்பப்பட்டஇடங்கள் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இணையதள கவுன்சிலிங் முறையில், எந்த முறைகேடும், சிபாரிசும் இல்லாமல், பள்ளி கல்வி விதிகளின்படியே நியமனங்கள் நடந்துள்ளன' என்றார்.

1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமைவழங்கப்பட்டன.இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சனிக்கிழமைநடைபெற்றது.
இதில் 1,025 பேருக்கு அவர்களது மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 721 ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையே பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து தற்போது இவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சனி, 28 மார்ச், 2015

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் திங்களன்று(30.03.2015) பணியில் சேரும் வகையில் ஆணை

PG VACANT FOR VELORE DISTRICT

PG VACANT FOR VELORE DISTRICT


Tamil vacant. 20

PG VACANT FOR VILUPPURAM DISTRICT

PG VACANT FOR VILUPPURAM DISTRICT


CHEMI. 19

Eco. -

PHY. 23

His. -

Tam. 16

Bot. 5


Com. -

Eng. 55

Mat. 33

Zoo. 12

PG VACANT FOR KRISHNAGIRI DISTRICT

PG VACANT FOR KRISHNAGIRI DISTRICT

Tamil 9.

PG VACANT FOR TV MALAI DISTRICT

Tamil 7. ( Selected candidates 17)

PG VACANT FOR viluppuram DISTRICT

PG VACANT FOR viluppuram DISTRICT



Tamil 16. ( Selected candidates 25)

PG VACANT FOR DINDUKAL DISTRICT

PG VACANT FOR DINDUKAL DISTRICT


CHEMI. 3

Eco. 4

PHY. 5

His. 8

Tam. 7

Bot. 0


Com. 5

Eng. 2

Mat. 6

Zoo. 0

PG VACANT FOR DHARMAPURI DISTRICT

PG VACANT FOR DHARMAPURI DISTRICT


CHEMI. 1

Eco. 6

PHY. 7

His. 3

Tam. 0

Bot. 0


Com. 4

Eng. 5

Mat. 0

Zoo. 0




ECOnomics 3 vacants may be available for other district candidates

அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்:பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள அரசு உத்தரவு!

தொடக்கக் கல்வி - ஊராட்சி ,நகராட்சி , உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு.

TRB PG TAMIL :சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை 28.03.2015 ல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்.

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும் தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும்

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 8508774178

PG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான விடை- சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

PG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான விடை- சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு
அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில்பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள்தெரிவித்தனர்.

வரிசை எண் அடிப்படையில்....
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஆண்டு வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர், வேறு
மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' மாணவர்கள், மகிழ்ச்சி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
கே.மணிவேல், அரசு மேல்நிலைப்பள்ளி அழகமாநகரி: 3, 5 ,10 மதிப்பெண் வினாக்கள் கடினமில்லை
என்றாலும், 5 மதிப்பெண் கட்டாய வினா சற்று கடினம். இதில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.
60 சதவீதம் புத்தகத்தின் பின்புறம் இருந்தும், 40 சதவீதம் புத்தகத்திற்கு உள்ளே இருந்தும் கேட்கப்பட்டன. வகுப்பறையில் ஆசிரியர்கள், 'முக்கியம்' என கூறிய சில வினாக்கள் வந்தன. வி.சுவாதி, 21ம் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை: 10 மதிப்பெண் வினாக்களில் நான்கில் ஒன்று கடினமாக
இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் கடினமில்லை. 3 மதிப்பெண் வினாக்களில், இரண்டு சற்று கடினம். வகுப்பறை,சிறப்பு வகுப்பில் ஆசிரியர்கள் கோடிட்டு காட்டிய வினாக்கள் நிறையவே இடம் பெற்றிருந்தன. இரண்டையும்படித்தவர்களுக்கு சிரமம் இருந்திருக்காது.
டி.அகிலா, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி: ஒரு மதிப்பெண் வினாக்கள் கஷ்டம். யோசித்து எழுதியதால் அதிக நேரம் செலவானது. 5, 10 மதிப்பெண் வினாக்கள், கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்டவைதான்.
வி.சுந்தரராமன், ஆசிரியர், எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலை பள்ளி, காரைக்குடி: அனைத்து கேள்விகளும்
எதிர்பார்க்கப்பட்டவையே. ஐந்து மதிப்பெண் வினாக்களில், 10க்கும் மேற்பட்டவை கடந்த ஆண்டுகளை காட்டிலும்எளிதானவை. குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுவர். இரண்டாவது, மூன்றாவதுபாடத்தில் மாணவர்கள் பல முறை எழுதிப் பார்த்த கணக்குகளே கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாவில்,மூன்று கேள்விகள் மாணவர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியது. இவை இதுவரை கேட்கப்படாத கேள்விகள்.ஒருமதிப்பெண் வினாக்களில் 19 கேள்விகள், புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டவை. எந்த ஆண்டிலும் இவ்வளவு கேள்விகள் புத்தக பின் பகுதியில் இருந்து கேட்கப்படவில்லை. புத்தகத்தின்
பின்பகுதியில் இருந்த ஒரு மதிப்பெண்களை படித்திருந்தால் வெற்றி மிக எளிது. வேதியியலில் கஷ்டப்பட்ட மாணவர்கள், இயற்பியலில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 கணித வினாத்தாள், ':மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்

ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில், வெளியானது தொடர்பாக, தனியார்
பள்ளியைச் சேர்ந்த மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில், கடந்த, 18ம் தேதி நடந்த, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளியில் தேர்வு
கண்காணிப்பாளராக பணியாற்றிய, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன்
ஆகியோர், தன் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, கணித
வினாத்தாளை மொபைல்போனில் புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பினர். இதையறிந்த, எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., பொன்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், அவர்களிடம் இருந்துமொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சி.இ.ஓ., ராமசாமி கொடுத்த புகாரின் படி, மாவட்டகுற்றப்பிரிவு போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நான்கு ஆசிரியர்களையும் கைதுசெய்தனர். அவர்களை, கடந்த, 24ம் தேதி, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், நேற்று முன்தினம்,சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ்உட்பட, ஐந்து கல்வித்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீஸ் காவலில் உள்ள நான்கு ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், பிளஸ் 2 வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது தொடர்பாக, மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சஞ்சீவ், மைக்கேல் ராஜ், விமல்ராஜ், கவிதா ஆகிய நான்கு பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக, கிருஷ்ணகிரி அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேந்திரன் மூலமாக அனுப்பப்பட்ட வினாத்தாள், வாட்ஸ் அப் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக, மற்ற ஆசிரியர்கள் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, ஓசூர் ஜே.எம்., 2 நீதிபதி சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

வியாழன், 26 மார்ச், 2015

நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமளிக்கக்கூடியவை!

ஆயுதம் செய்வதிலிருந்து காகிதம் செய்வது வரை பயன்படக் கூடிய தொழில்நுட்பம் நானோ தொழில்நுட்பம். 1960-களில் ஜப்பானில் பரபரப்பாக அறிமுகமான நானோ, 1981-ல் 'அணுவையும் காட்டும்' துளையீட்டு உருப் பெருக்குக் கருவி (tunneling microscope) உருவானதும் வேகமெடுத்தது.

உலகமே பொருட்களால் நிரம்பியுள்ளது. கணினி, கதைப் புத்தகம், கார், கத்தரிக்காய், தங்கம், வைரம், கறி, கரி என்று பொருட்களின் பட்டியல் நீளும். இவை நாம் உருவாக்கும் பொருளாக இருக்கும். அல்லது மண்ணில் விளைவதாகவோ இயற்கையாக ஏற்பட்டதாகவோ இருக்கும். இந்தப் பொருட்களை வடிவம் குறுக்கி ஒரு நானோ மீட்டர் கனமே உள்ளதாக ஆக்கினால், வியப்பளிக்கும் விளைவுகள் ஏற்படும். இதுவே நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை.

நானோ மீட்டர் என்றால்?

ஒரே ஒரு இழை தலைமுடியை எடுத்து, பஜ்ஜி போட வாழைக்காய் அரிவதுபோல அதை நீளவாட்டில் 50,000 துண்டாகப் பிளப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த நுண்ணிய துண்டு ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு நானோ மீட்டர் இருக்கும்.

தங்க நகை தங்க மூலக்கூறுகளின் (molecule) தொகுதி. தாமிரத் தட்டு தாமிர மூலக்கூறுகளின் தொகுதி. இப்படி, ஒவ்வொரு பொருளும் அதனதன் மூலக்கூறுகளின் தொகுதியாக இருக்கும். சின்னஞ்சிறிய மூலக்கூறு அளவே நானோ வடிவம்.

இப்படிக் குறுக்கும்போது பொருளின் அடிப்படைத் தன்மையே மாறலாம். இரும்பு திரவமாகப் பொங்கி வழியலாம். கரடுமுரடான கற்பாறை, முகம் பார்க்கும் கண்ணாடிபோல் ஒளியைப் பிரதிபலிக்கலாம். என்ன பயன் என்கிறீர்களா?

நானோ தொழில்நுட்பம் மூலம் தன்மை மாறிய கரியையும், வைரத்தையும் தங்கத்தையும், கணினியில் தகவல் சேர்த்து வைக்கப் பயன்படுத்தலாம். பல ஆயிரக் கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தை முழுவதுமாக மின்வடிவில் இந்தச் சின்னஞ்சிறு நானோ பொருளில் சேமித்து, வீட்டுக் கணினியில் பயன்படுத்தலாம். தகவல் தேடித் தரும் வேகமும் அதிகமாக இருக்கும்.

நானோ வேதியியல் துகள்கள் கலந்த காகிதம் நாம் இதுவரை பார்த்தேயிருக்காத அளவு கண்ணைப் பறிக்கும் வெண்மையாக ஒளிவீசும்.

சுத்தமான உடுப்போடு வெளியே போனால், தூசி, அழுக்கு, வியர்வை என்று எதுவும் உடை மேல் படிய விடாமல், துணியில் பூசிய நானோ ரசாயனப் பொருள் அதைத் தட்டி உதிர்த்து விடும். சலவை சோப்பு உற்பத்தியாளர்கள் வியாபாரம் கெட சட்டை துவைக்காமலேயே எப்போதும் சுத்தமாக இருக்கும்.

மரபணு பாதிப்பு

உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ஈ-கொலி நுண்ணுயிர் (bacteria) உணவில் கலந்திருந்தால், அதைப் பளிச்சென்று ஒளிவீசி மூலம் தெரியப்படுத்தவும், அந்தக் கிருமியோடு பிணைந்து அதை முழுவதுமாக அழிக்கவும், நானோ மாவுச்சத்துத் துகள்கள் உணவில் கலக்கப்படலாம்.

பேக்கரியில் விற்கப்படும் இனிப்பு வடை போன்ற டோநட்டில் பூசிய சர்க்கரைத் துகள்கள் பனிபோல் வெண்மையாகத் தெரிய ஐரோப்பாவில் டைட்டானியம் டை ஆக்ஸைட் என்ற வேதியியல் பொருளின் நானோ துணுக்குகளைச் சர்க்கரையில் கலக்கத் தொடங்கினார்கள். அண்மையில் இந்த நானோ துணுக்குகளால் மரபணு பாதிப்பு ஏற்படலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அபாயம் இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப் பட்டாலேயொழிய, நானோ உணவு பரவலான புழக்கத்துக்கு வருவது சிரமம்தான்.

மருத்துவத்திலும் நானோ தொழில்நுட்பம் பயன் படலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலுக்குள் மிகச் சிறிய நானோ தங்கத் துகள்கள் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அவற்றை வெளியே இருந்து கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் இயக்குவார். புற்றுநோய்த் திசு உடலில் உள்ள இடத்தில் இந்த நானோ துணுக்கு அதன் மேல் படர்ந்து அதைத் தனியாக இனம் காட்டிவிடும். நோய்த் திசுவை அகற்றினால் உடல் நலம் பெறும்.

சாதாரண மாத்திரைகள் ஜீரணமாகி அவற்றில் உள்ளதில் சிறிதளவு மருந்து மட்டும் ரத்தத்தில் கலந்து ஓரளவு நோய் தீர்க்கலாம். நானோ துகள்கள் மருந்துக் கடத்தியாகச் (carrier) செயல்படும்படிக் கலந்து உருவாக்கிய மாத்திரைகள் வேகமாக உடலுக்குள் பயணப்பட்டு, மருந்துப் பொருள் வீணாகாதபடி கொண்டுசேர்க்கும். உடல் நலம் பெறுவது இதனால் விரைவாகும்.

நானோ ரோபாட்களும் அறிமுகமாகின்றன. இந்த ரோபாட் ஒவ்வொன்றும் அரிசி முனையில் செதுக்கியது போல் சிற்றுடல், மூளை, சர்க்யூட் கொண்டது. மருத்துவர் ஊசி கொண்டு நோயாளியின் உடலில் இவற்றைச் செலுத்தி, கணினி வழியே கட்டளை இட, இவை உடலுக்குள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடத்தும். முடித்து, உடலில் ஏற்படுத்திய துளை ஊடாக வெளியேறிவிடும். நானோ ரோபாடிக்ஸ் வேகமாக வளரும் துறை.

மூலக்கூறுகளைச் செதுக்கினால் நானோ வரும். மூலக்கூறுகளைச் சற்றே மாற்றி அமைக்க, சூப்பர் மாலிக்யூல்கள் என்ற மூலக்கூறுகள் உருவாகும். இந்த சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நாசம் விளைவிக்கும் நானோ ரோபாட்களையும் நானோ ஆயுதங்களையும் உருவாக்க முடியும். டாங்குகளும் ஜீப்புகளும் போர் விமானங்களுமாகப் படையெடுத்துப் போகாமல், எறும்புகள் சாரிசாரியாக இருட்டில் ஊர்வதுபோல் இந்த நானோ ரோபாட்டுகள் யார் கவனத்தையும் கவராமல் பகை நாட்டில் புகுந்து மிகப் பெரும் நாச வேலை செய்யக் கூடும். செயல் திறன் மிகுந்த இவை தங்களையே பிரதி எடுத்துப் புது ரோபாட்டுகளை உருவாக்கவும் முடியும்.

கொடிய நோய்க் கிருமிகளைப் பகை நாட்டில் பரப்பி, அணு ஆயுதப் போரை விட அதிக நாசம் விளைவிப்பது நுண்ணுயிரியல் போர்முறை (Biological warfare). காற்றிலும் நீரிலும் உணவிலும் இப்படியான கிருமி பரவியுள்ளதா என்று கண்காணிக்க நானோ ஆய்வகங்களை நிறுவலாம். நாலு மாடிக் கட்டிடமாக ஆய்வகம் எழுப்ப இடம் தேட வேண்டாம். கைக்கடக்கமாக, சட்டைப்பையில் வைத்து எடுத்துப் போகக் கூடியவையாக இவை இருக்கும்.

அழிக்க மட்டுமில்லை, இந்த சூப்பர் மூலக்கூறுகளை அண்டை மாநிலம் ஆற்று நீர் தர மாட்டேனென்று முரண்டு பிடித்தாலும், இருக்கும் குறைவான நீர்வளம், நில வளத்தைக் கொண்டு அதிக மகசூல் தரும் தானிய வித்துக்களை உருவாக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயலும்.

சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நானோ தொழில் நுட்பம் மூலமாக மனித உடலிலும் மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆந்தை போல் இருட்டில் தெளிவாகத் தெரியும் கண்கள், வானொலி போல மின்னலைகளை ஒலியலையாக மாற்றும் காதுகள் இவற்றை எல்லாம் கேட்டு வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். ஆயர்பாடிக் கண்ணன் வாய்க்குள் மூவுலகம் தெரிந்ததுபோல், நானோ மூலம் வெறும் கண்ணுக்குள் தொலைக்காட்சி சீரியல் தெரியுமா என்ற கேள்வி கொஞ்சம் ஓவர் ரகமே.

- இரா. முருகன், தொடர்புக்கு: eramurukan@gmail.com

 

மனசு போல வாழ்க்கை: ஓட்டமாய் ஓடு.... வெற்றியைத் தேடி!

ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்!

படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா?

மன அமைப்பு

நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது.

உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க எங்கள் கல்லூரி தான் கியாரண்டி. திருமணத் தடையா இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள். இடுப்பு வலியா எங்கள் ஆஸ்ரமம் நடத்தும் யோகா கிளாஸ் வாருங்கள்.

மன அசதியா? இந்தப் புத்தகம் படியுங்கள். எங்கள் பயிற்சிக்கு வாருங்கள். அதிர்ஷ்டம் வேண்டுமா? இந்தக் கல்லில் மோதிரம் போடுங்கள்! எனும் குரல்களை நாடிப் போகிறவர்கள் அனைவருக்கும் கேட்டது கிடைக்கிறதா? நிச்சயம் இல்லை.

என்ன காரணம்? தருகிறவர் மன அமைப்பை விடப் பெறுகிறவர் மன அமைப்பு இங்கு முக்கியமாகிறது.

சுடுதண்ணீர் சிகிச்சை

ஒரு உளவியல் சிகிச்சையாளனாய் இதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரே சிகிச்சை முறையை மேற்கொள்ளும் இருவருக்கு மிகுந்த மாறுபட்ட பலன்கள் கிடைப்பது உண்டு. ஒருவர் முழு பலனையும் ஒருவர் மிகக்குறைவான பலனையும் அடைவர்.

அது போலப் பல சமயங்களில் என் வார்த்தைகளும் வழிமுறைகளும் எனக்குப் பயன்படுவதை விட என்னிடம் வருபவர்களுக்கு அதிகம் பயன்படும். ஒரு முறை தீராத தலைவலிக்குச் சிகிச்சைக்கு என்னிடம் வருபவர் ஒருவருக்கு லூயிஸ் ஹேயின் அஃபர்மேஷன் முறை கொண்டு ஒரு சிகிச்சை அளித்தேன்.

நம்ப முடியாத அளவுக்கு வேகமாக முழுமையாகக் குணமானார். என் தலைவலிக்கு நான் முதல் முறையாக அந்த வழிமுறையைப் பயன்படுத்திய போது கூட ஏற்படாத மகத்தான மாறுதல் அது.

ஒரு வேளை இது வெறும் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமா? வீரிய மருந்து என்று சொல்லிச் சுடுதண்ணீரைச் ஊசி மூலம் செலுத்தினால் கூடச் சிலருக்குப் பலன் ஏற்படும். இதை Placebo Effect ஆங்கிலத்தில் சொல்வார்கள். ராசியான டாக்டர் என்று சொல்வது கூட நம்பிக்கை சிகிச்சையின் ஒரு பகுதி தான். கிறிஸ்துவ மதத்தில் Faith Healing மிகப்பிரபலம்.

பெரும் கண்டுபிடிப்பு

நம் கிராமங்களில் அம்மனுக்காகத் தீமிதி சென்று காயம் படாமல் வருவது எப்படி முடிகிறது? தீக்குச்சி நுனி பட்டால் விரல் தீய்ந்து போகுமே! இது பக்தி அல்ல ஆழ்மனச் சக்தி என்று சொல்லும் ஆண்டனி ராப்பின்ஸ் போன்றோர் அமெரிக்காவில் நடத்தும் என். எல்.பி (Neuro Linguistic Programming) பயிற்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் நெருப்பில் நடக்கிறார்கள்.

கடவுள் சக்தியோ மனித ஆற்றலோ நம்பிக்கையால் பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்றால் ஏன் இதை இளைஞர்களுக்குப் பள்ளியிலிருந்தே சொல்லித்தரக்கூடாது? உண்மை என்னவென்றால் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை விட நம்பிக்கை குலைந்து கிடக்கிறார்கள் இங்கு.

மனிதக் குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது: நம் எண்ணத்தை மாற்றினால் நம் வாழ்க்கையை மாற்றலாம் என்பது தான். மனித மனம் ஒன்றை நினைக்க முடிந்தால் அதைச் சாதிக்க முடியும் என்பதுதான் மனிதக் குல வரலாறு. வேளாண்மை முதல் வாட்ஸ் அப் வரை யாரோ ஒருவர் நினைத்து இல்லாததை உருவாக்கியது தான்.

இரண்டும் நிஜங்கள்

பிளேடைத் தின்பது, விமானத்தைப் பற்களில் இழுப்பது, தேனீக்களை முகத்தில் வளர்ப்பது, அரிசிக்குள் சித்திரம் வரைவது, பார்வையற்றோர் மலை ஏறுவது, என நிறையச் செய்திகள் படிக்கிறோம். இவை அனைத்தும் எண்ணம் செயலாகிய சாதனைகள் தான்.

இது தவிர மரணத்தை மனப் பலத்தால் வென்றவர்கள் கதைகள் நிறைய நமக்குத் தெரியும். வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து பின் தன்னம்பிக்கையோடு போராடி ஜெயித்த பலரின் வரலாற்றைப் பாடமாகவே படித்திருக்கிறோம். இருந்தும் எண்ணம் தான் வாழ்க்கை என்பதை நமக்குப் பிரச்சினை வரும் போதெல்லாம் மறந்து விடுகிறோம்.

"எங்க குடும்ப நிலமை மோசம் சார். ஒண்ணுமே பண்ண முடியலை." "எங்க அப்பா சரியில்லை. இவ்வளவு தான் முடிஞ்சது." "இந்தக் கோர்ஸ் படிச்சா இது தான் சார் கதி." "நம்ம நாட்டுல இதுவே ஜாஸ்தி". " நம்ம ராசி அப்படி. சாண் ஏறுனா முழம் சறுக்கும்." "தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இதுக்கு மேல முடியாது!"

இவை எல்லாம் சத்திய வார்த்தைகள். சொன்னவர் வாழ்க்கையில் அவை பலிக்கும். இந்த எண்ணங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த எண்ணங்கள் மீண்டும் வலுப்படும்.

"என்னால் முடியும்" என்று சொன்னாலும் "என்னால் முடியாது" என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். இரண்டும் பலிக்கும்.

எண்ணமே வாழ்வு

நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.

"என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? "என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம். தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!

எல்லாருக்கும் வெற்றி வேண்டும். ஆனால் உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?

உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.

கவிஞர் கண்ணதாசன் அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:

"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!"


தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com



 

தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்

தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்றமாநிலங்களில் முறையாக நடத்தும் போது இங்கு மட்டும் வெயிட்டேஜ், இட ஒதுக்கீடு கிடையாது, 60 சதவீதமதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை தமிழ அரசு வைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை 'கொல்லும்' முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பலிகடா ஆசிரியரா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள் அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.

இவ்வாறான சூழல் உருவெடுத்தமைக்கு கல்வி வணிகமய மானது மட்டுமன்றி, கல்வித் துறையும்கூட ஒரு முதன்மைக் காரணம் என்பதால், கல்வித் துறை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடுபடுகிறது.
உடனடியாக கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு என்னவென்றால், ஒரு தேர்வுக்கூடத்தில் ஒரு மாணவர் காப்பியடிப்பதை அந்த அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடிக்காமல் வேறு யாராவது கண்டுபிடித்தாலோ அல்லது பறக்கும்படை கண்டுபிடித்தாலோ அந்த அறையின் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது . ஒரு மாணவன் காப்பியடிப்பதை அனுமதிக்கும் அறைக் கண் காணிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலும், ஓர் அறைக் கண்காணிப்பாளர் அவ்வாறு காப்பியடிக்க அனுமதிக்கிறார் என்பதை மாணவர்கள் வெளியே வந்தவுடனே பகிர்ந்துகொள்வார்கள். இத்தகைய அறைக் கண்காணிப்பாளர்கள் மீது கூடுதலாக கவனம் செலுத்த, கல்வித் துறை இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின்போது முதல்முறையாக தேர்வு நடைபெறும் பள்ளிகளில் புகார் பெட்டி வைத்திருக்கிறது. இதில் மாணவர்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குறிப்பிட்ட அறையில் இன்று அறைக் கண்காணிப் பாளராக இருந்தவர் குறிப்பிட்ட மாணவருக்கு உதவி செய்தார் என்றோ அல்லது விடைகளைச் சொல்லித் தந்தார் என்றோ புகார் செய்ய முடியும். இவ்வாறான ஒரு நல்ல நடைமுறையை அறிமுகம் செய்திருக்கும் கல்வித் துறை,நடைமுறை சாத்தியமில்லாத தடலாடி உத்தரவுகளையும் போடுகிறது.
இன்றைய பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்களே தவிர, ஆசிரியர்களுக்கு ஆதரவாக இல்லை. ஒரு மாணவன் விடைத்துணுக்குகள் வைத்திருக்கிறானா என்பதைப் பரிசோதிக்கும் உரிமையை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள். நீ பனியனுக்குள் என்ன வைத்திருக்கிறாய், சட்டையை கழற்று என்று சொன்னால், மாணவரை மற்றவர்கள் முன் அசிங்கப்படுத்தியதாக நீதிமன்ற வழக்குத் தொடுக்கும் நிலைமை உள்ளது.
ஒரு மாணவன் விடைத்துணுக்களை வெளியே எடுக்கும் வரை, அவன் வைத்திருந்தானா என்பது அந்த அறைக் கண்காணிப்பாளருக்கும்கூட தெரியாது. ஓர் அறையில் குறைந்தது ஐம்பது மாணவர்கள் தேர்வு எழுதும்போது, ஒரு மாணவன் இத்தகைய விடைத்துணுக்கை எடுக்கும் ஒரு கணம் என்பது கண் மறைக்கும் நேரம்தான். இதற்காக, அறைக் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்வது என்று தொடங்கினால், அறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள்.
மேலும், அறைக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய மாணவர் களைக் கண்டுபிடிக்கும்போது அந்த மாணவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள் என்பதையும் கல்வித் துறை உணர வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதற்கான தீர்வைக் காண வேண்டுமே தவிர, இவ்வாறான அதிரடி உத்தரவுகள் தேவையில்லாத எதிர்ப்புகளையே கொண்டு வந்து சேர்க்கும். தேர்வு அறைக் கண்காணிப்பிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாணவர்களின் நடவடிக்கை மட்டுமன்றி, அறைக் கண்காணிப்பாளரின் நடவடிக்கையும் அதில் பதிவாகும்.
புகார் பெட்டியில் ஆசிரியர் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தாலோ அல்லது தாக்குதலுக்கு அஞ்சிய ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட மாணவர் குறித்து புகார் தெரிவித்திருந்தாலோ, அந்த அறை கேமரா மூலம் மாணவன், ஆசிரியர் நடவடிக்கையை மீட்டெடுத்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நவீன முறைகள்தான் இன்றைய தேவை. அதிரடி உத்தரவுகள் அல்ல. மாணவர்கள் காப்பியடிக்கக் காரணம் படிக்கவில்லை என்பதுதான். எந்த மாணவர்கள் படிக்கவில்லை, எந்த மாணவர்களுக்கு போதுமான வருகைப் பதிவு இல்லை, அவர்களை பொதுத் தேர்வுக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஒரு வரன் முறையை - ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு நடத்துவது போல- கல்வித் துறை உருவாக்க வேண்டியதும் அவசியம்.
75% வருகைப் பதிவு இல்லை என்ற காரணத்துக்காக சீர்காழி அரசு மேனிலைப்
பள்ளித் தலைமையாசிரியை 6 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி, 100% தேர்ச்சிக்காக எங்கள் குழந்தைகளை வேண்டுமென்றே தடுத்துவிட்டார் என்று கூறியதால், அந்தப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களைக் கட்டுப்படுத்துவதுபோய் ஆசிரியர்களின் கரங்கள் கட்டுண்டு இருக்கும் அவலம் மாற வேண்டும். மக்கள் அல்லது பெற்றோரின் கோபத்தை தணிக்கும் நட
வடிக்கை தாற்காலிகமானது. நிரந்தரமான தீர்வுக்கு கல்வித் துறை தன்னை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். அறைக் கண் காணிப்பாளர் பலிகடாவாக்கப்படுவது ஏற்புடையதல்ல.

பிளஸ் 2 கணிதத் தேர்வை, மீண்டும் நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?அரசிடம் விளக்கம் பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

பிளஸ் 2 கணிதத் தேர்வை, மீண்டும் நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது என்பதற்கு, அரசிடம்
விளக்கம் பெறுமாறு, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவி, ரீனா என்பவர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். அவர்
சார்பில், அவரது தந்தை வீரணன் என்பவர், தாக்கல் செய்த மனு:

பிளஸ் 2 கணிதத் தேர்வில், வினாத்தாளை புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பி, மாணவர்களுக்குதெரிவிப்பதற்காக, விடைகளை பெற்றதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. சம்பவம் தொடர்பாக, கல்வித்துறையை சேர்ந்த, ஊழியர்கள் 118 பேர், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஓசூரில் உள்ள, விஜய் வித்யாலயாமெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும், அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதாக உள்ளது. வினாத்தாள் வெளியானதால், நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களை விட, குறிப்பிட்ட பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. கணித பாடத்தை பொறுத்தவரை, மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து, கடந்த 22ம் தேதி, கல்வித் துறைக்கு மனு அனுப்பினேன்; கணித பாடத்துக்கான,மறுதேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதி சிவஞானம் முன், விசாரணைக்கு வந்தது. கணித பாடத்துக்கான மறுதேர்வை நடத்த, ஏன் உத்தரவிடக் கூடாது என்பதற்கு, அரசிடம் விளக்கம் பெற, கூடுதல் பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஏப்., 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி :கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார்பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ளநிலையில், அதில், 29 சதவீத இடங்களேநிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு
இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின்
பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம்பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமானhகல்வியும் கிடைக்காமல் போகிறது. தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு
எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தைஅறிமுகப்படுத்தியது. அதன் படி, தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்குஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி, தனியார பள்ளிகளில் கிடைக்கும் என்பது அரசின் நம்பிக்கை. ஆனால், நடந்தது வேறு. ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய, 25 சதவீத இடங்களை ஒதுக்காமல், அந்த இடங்களை பிற மாணவர்களுக்கு வழங்கி, பணம் சம்பாதித்து வந்துள்ளன,

தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் செயல்படும் இந்த
காலத்தில், அரசின் உத்தரவுகளை, தனியார் பள்ளிகள் மதித்து நடக்காததால், ஏழை மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்என, ஆதங்கம் தெரிவித்துள்ளனர், கல்வி ஆர்வலர்கள்.

இந்தச் சட்டம், 2009ல் நிறைவேற்றப்பட்டாலும், செயல்பாட்டுக்கு வந்தது என்னவோ, அடுத்த கல்விஆண்டு முதல் தான். அதுவும், முழு மனதாக தனியார் பள்ளி நிர்வாகங்களால் செயல்படுத்தப்படவில்லை என்பது தான் குறைபாடு. குஜராத்தில் உள்ள, ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தினரும், இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து, நாடு முழுவதும்நடத்திய ஆய்வில், இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

* கடந்த, 2013 - 14ம் கல்வியாண்டு இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
* 21 லட்சம் இடங்கள் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய நிலையில், 6 லட்சம் இடங்கள்தான் ஏழைகளுக்கு கிடைத்துள்ளது.
* ஒன்பது மாநிலங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.
* ஒன்றாம் வகுப்பில், இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலையில், 45 ஆயிரம் மாணவர்களுக்குத் தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
* பெருநகரங்களிலும், இந்நிலை காணப்படுகிறது. டில்லியில் நிலைமை பரவாயில்லை.
* கல்விக் கட்டணம் இலவசம் என்ற விவரம் பெரும்பான்மையான பெற்றோருக்கு தெரியவில்லை. தனியார்பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பது குறித்து, பள்ளி நிர்வாகங்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.

தமிழகத்தில் 11.25 சதவீதம்: கடந்த, 2013 - 14ம் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள்:டில்லியில், 92 சதவீதம்; மத்திய பிரதேசம், 88 சதவீதம்; ராஜஸ்தான், 69 சதவீதம்; ஆந்திரா, 0.2 சதவீதம்; ஒடிசா, 1.85சதவீதம்; உத்தர பிரதேசம், 3.62 சதவீதம்; தமிழகம், 11.25 சதவீதம்; மகாராஷ்டிரா, 19.35 சதவீதம். 'சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும்' என,சட்டம் இயற்றிய பிறகும், அதை செயல்படுத்தாதது மிகப் பெரிய குற்றம் எனவும், அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க,சில பள்ளிகள் முறைகேடான வழிகளை பின்பற்றியுள்ளன எனவும், ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியபல்கலைக்கழக பேராசிரியர் நளினி ஜுனிஜா கூறும் போது, ''அரசின் இந்த அருமையான சட்டம், ஐந்தாண்டுகள் ஆன பிறகும் முழுமையாக பின்பற்றப்படவில்லை,'' என்றார். ஆமதாபாத் ஐ.ஐ.எம்., பேராசிரியர் அங்குர் சரின், ''தேசிய அளவில், 6 லட்சம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில், பா.ஜ., ஆளும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இந்தச் சட்டம் சிறப்பான முறையில்பின்பற்றப்பட்டுள்ளது. அவ்விரு மாநிலங்களில் மட்டும், 3 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன,'' என்றார்.

''இந்தச்சட்டம் அமலுக்கு வந்து, ஐந்தாண்டுகள் ஆன பிறகும், சரிவர பின்பற்றப்படாததற்கு காரணம், இப்படியொரு சட்டம்இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாதது தான்; தெரிந்தவர்களும் அதை பின்பற்றாதது தான். சரியான முறையில்பின்பற்றப்பட்டிருந்தால், ஐந்தாண்டுகளில், 1.6 கோடி மாணவர்கள் பயன் பெற்றிருப்பர்,'' என, 'சென்ட்ரல் ஸ்கோயர் பவுண்டேஷன்' என்ற அமைப்பைச் சேர்ந்த, ஆஷிஸ் தவான் கூறுகிறார்.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அமைச்சர் நடத்திய பேச்சில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், மாற்றுத் திறனாளிகள்,
இரண்டு நாட்களாக நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், சென்னை,
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, 'கோரிக்கைகளை ஏற்கும் வரை காத்திருப்பு' என்ற
போராட்டத்தை, நேற்று முன்தினம் துவக்கினர். இரவிலும், அங்கேயே படுத்து தூங்கினர்;
இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்தது. அமைப்பின் மாநிலச்செயலர் நம்பு ராஜன் கூறியதாவது:
உதவித்தொகை பெறுவதற்கு உள்ள, விதிமுறைகள் தளர்த்தப்படும்; மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், கடும் ஊனமுற்றோருக்கு, 1,500 ரூபாயாக உயர்த்திய உதவித் தொகை,ஏப்ரலுக்கு முன், நிலுவையுடன் வழங்கப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், பல கோரிக்கைகள்ஏற்கப்பட்டன. இதையேற்று, போராட்டத்தை முடித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

TRB PG TAMIL, CHEMISTRY : TODAY( 26.03.2015) HEARING IN MADRAS HIGHCOURT

COURT NO. 10
HON'BLE MR JUSTICE M.DURAISWAMY
TO BE HEARD ON THURSDAY THE 26TH DAY OF MARCH 2015 AT 10.30 A.M.
---------------------------------------------------------------------------
~~~~~~~~~~~~~


45. WP.3657/2015 M/S.S.VIJAYAN M/S.M.S.RAMESH AGP
(Service) TAKES NOTICE FOR RESPDTS
AND For Direction
MP.1/2015 - DO -
AND For Direction
MP.2/2015 - DO -
AND
WP.3658/2015 M/S.S.VIJAYAN M/S.M.S. RAMESH AGP TAKES
(Service) NOTICE
and For Direction
MP.1/2015 - DO -
a/a

46. WP.3686/2015 M/S.N.SIVA M/S.M.S. RAMESH AGP TAKES
(Service) S.SATHYARAJ K.ARUNAGIRI NOTICE
K.PRASANA
AND To Dispense With
MP.1/2015 - DO -
AND For Direction
MP.2/2015 - DO -
AND For Direction
MP.3/2015 - DO -
AND
WP.3723/2015 M/S.N.SIVA
(Service) S.SATHYARAJ, K.ARUNAGIRI
K.PRASANA
AND To Dispense With
MP.1/2015 - DO -
AND For Direction
MP.2/2015 - DO -
AND For Direction
MP.3/2015 - DO -

47. WP.3763/2015 M/S.S.VIJAYAN M/S.M.S. RAMESH AGP
(Service) TAKES NOTICE FOR RESPSDTS
and For Direction
MP.1/2015 - DO -
and For Direction
MP.2/2015 - DO -

48. WP.3949/2015 M/S.M.SATHISH KUMAR
(Service). S.RAJA RAVIVARMA
M.RAJESWARI
N.BAKKIALAKSHMI
and. For Direction
MP.1/2015 - DO -

49. WP.4135/2015 M/S.S.VIJAYAN
(Service)
and For Direction
MP.1/2015 - DO -
and For Direction
MP.2/2015 - DO -

50. WP.5343/2015 M/S.T.VENKATESAN
(Service). M.RAVI
and. For Direction
MP.1/2015. - DO -

~~~~~~~~~~~~~~~~~~~

புதன், 25 மார்ச், 2015

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக பணம் கொடுப்பது குறித்த ஆடியோ தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடியோ விவரம்:
ஆசிரியர்: சார் வணக்கம்.. சொல்லுங்க சார்...
புரோக்கர்: வணக்கம்.. என்ன ஆச்சு சார். அதுக்கு அப்புறம்...
ஆசிரியர்: பஸ்ட் நீங்க தான் சார் சொல்லணும்... அன்னைக்கு ரெண்டே காலுக்கு (இரண்டே கால் லட்சம்) ஓகேன்னு
சொன்னீங்களே சார். புரோக்கர்: எப்போ சார்.
ஆசிரியர்: அன்னிக்கு போன் பண்ணீங்களே சார். அந்த அம்மாக்கிட்ட எவ்வளவு பேசுனீங்கன்னு சொன்னீங்களே.
புரோக்கர்: அது அன்னிக்கு.
ஆசிரியர்: ஆமா.
புரோக்கர்: அவரு அப்போ போட்டு தரேன்னு சொன்னார்ல.
ஆசிரியர்: ஆமாம் போட்டு தரேன்னு சொன்னாரு.. புரோக்கர்: அவரு இப்போ முடியாதுன்னு சொல்லீட்டாரு.
ஆசிரியர்: அப்படியா?
புரோக்கர்: இப்போ டீலிங் எல்லாம் மேலதான் பார்த்து வாங்குறாங்க.
ஆசிரியர்: சரி..சரி.
புரோக்கர்: ரெண்டே முக்காலுன்னா முடியுமா?
ஆசிரியர்: ரெண்டே முக்காலா? புரோக்கர்: ஆமா
ஆசிரியர்: சரி.. நான் கேட்டு சொல்றேன். நமக்கு இங்க மேனேஜ்மென்ட்ல குறைக்க மாட்டாங்க. நான் வசதியா
இருந்தா எம்ஏ பிஎட்டுக்கு போயிருப்பேன். வசதி இல்லாததால் தான் பி.எட்டுக்கே இறங்குறேன்.
புரோக்கர்: கேட்டு சொல்லுங்க.
ஆசிரியர்: சரி சார் பார்த்துக்கிடுவோம்.
புரோக்கர்: புது சிஇஓக்கிட்ட பேசியிருக்கேன். ஆசிரியர்: சரி சார்.
புரோக்கர்: இன்னைக்கு அவர் மெட்ராசுக்கு போறாரு. போய்ட்டு வந்து செய்வோம்னு சொல்லியிருக்கிறார்.
ஆசிரியர்: சரி சார். சரி சார்..
புரோக்கர்: அந்த அம்மா எவ்வளவு கேட்டாங்க.,
ஆசிரியர்: அந்த அம்மா வந்து ஒன்னே கால் கேட்டாங்க. அது போக ஆபிசுக்கு 50, சார் நீங்க 15 கூட கேட்டிங்க.
அதுக்கு அப்புறம் 65 கூட கேட்டிங்க. புரோக்கர்: சரி அப்புறம் ரெண்டே கால் கொடுத்திருங்க.
ஆசிரியர்: சரி சார். நான் பேசீட்டு சொல்றேன்.. ரெண்டு முடிச்சிருங்க.
புரோக்கர்: திங்கட்கிழமை தூத்துக்குடி திருமண்டலம் ஆபிசுக்கு போய் இருந்தோம். நம்ம எலிமென்ட்ரி
மேனேஜர் என்ன சொன்னார்னா... ஒன்னு 95க்கு பேசி வச்சிருக்கோம்னு சொன்னாரு.
ஆசிரியர்: அவங்க வாங்கி தருவாங்களா?
புரோக்கர்: ஒன்னு 95 கொடுத்தா நாங்க தாரோம்னு சொல்லிருக்காங்க. அதை எப்படி நம்புறதுன்னு தெரியல. அவர் என்ன சொல்றாருன்னா.. மெட்ராஸ்ல நாங்க டைரக்டர பார்த்தோம். டைரக்டர் மந்திரியை பாக்க சொன்னாங்க.
நாங்க மந்திரி பிஏவை பார்த்தோம். அவர் ரெண்டுன்னு சொன்னாரு. நாங்க ரொம்ப பாவ பட்டவங்க தான்.
எல்லாருமே அப்பாய்ன்மென்ட் வாங்கினவங்க தான். ஐந்தை குறைத்து ஒன்னு 95 கொடுத்துருங்க. நாங்க வாங்க
மாட்டோம். நாங்க ஒரு ஓட்டல் சொல்லுவோம் அங்கே போய் கொடுத்துருங்க.
ஆசிரியர்: நீங்க இரண்டு 50ன்னு சொல்றீங்க அது தான் ரொம்ப குழப்பமா இருக்கு...
புரோக்கர்: அங்க ஒன்னு 95ன்னு கொடுப்பாங்க, இங்க டி.இஓ. ஆபிசுக்கு கொடுக்கனும்ல. அதுலாம் சேர்த்து தான் இரண்டரை.
ஆசிரியர்: இரண்டரையை டி.இ.ஓ. கிட்ட கொடுத்துரவா.
சில நாட்கள் கழித்து பின்னர் பேச்சு...
புரோக்கர்: சார் இன்னக்கி ரெடி பண்ணி கொடுத்தா நாளை பார்க்க சொல்லலாம்னு சொன்னார்.
ஆசிரியர்: டிஇஓ சொன்னாரோ
புரோக்கர்: இது வேற சார், முடிக்குறது வேற சாரு. இது ஒரு சார் 2 மணிக்கு முடிக்குறாரு.. ஆசிரியர்: பணம் தந்தா தான் அவர் வருவாரா... இல்லன்னா வரமாட்டாரா
புரோக்கர்: பணம் வந்தா தான் தம்பி வருவாரு. அங்க இருந்து ரூபாய் கொடுத்தா மினிஸ்டர்கிட்ட போய்டும்.
அங்கே இருந்து மினிஸ்டர் பேசுவார். உடனே டைரக்டர் டி.இ.ஓ.வுக்கு தகவல் கொடுத்து, இதே போய்
பன்னுங்கன்னு சொல்லுவாரு. மற்றபடி டிஇ.ஓ. ஒன்னும் காசு வாங்க மாட்டார்.
ஆசிரியர்: எல்லாமே மினிஸ்டர் தானா
புரோக்கர்: இங்க ஒன்னும் கிடையாது தம்பி. எல்லாமே அங்க தான். ஆசிரியர்: முன்னாடி எல்லாம் ஏ.இ.ஓ. ஆபிசிலேயே முடிஞ்சிரும் என்ன சார்.
புரோக்கர்: 33 பேர்ல 5 பேருக்கு அப்ரூவல் ஆகியிருக்னு சொல்லிருக்காங்க..
ஆசிரியர்: நெய்வேலியில் எல்லாம் சம்பளம் போட்டுட்டாங்க.. ஓ.கே. ஆயிட்டு.
புரோக்கர்: அங்க அமவுன்ட் ரொம்ப அதிகம்னு சொல்றாங்களே.
ஆசிரியர்: அதுவும் இந்த ரெண்டு, ரெண்டரை தான்.
புரோக்கர்: மேனேஜர் மூணரையிலருந்து 5 வரை கொடுத்து 5 பேர் வாங்கியிருக்காங்க. ஆசிரியர்: அது தான் சார் நெய்வேலியில. அவங்க வேற வழியில போய்ட்டாங்க.
புரோக்கர்: அப்படி பாக்கும் போது யோகம் தான். குறைவு தான் உங்களுக்கு.
ஆசிரியர்: இது சேர்த்து பார்க்கும் போது கம்மி தான். இதுக்குன்னு மெனக்கெட்டு போறது இல்ல.
புரோக்கர்: பாஸ்கர் சார் என்கிட்ட சொன்னாரு... கொஞ்சம் பாருங்க... இல்லைன்னா அப்படி போய்ட்டே இருக்கும். நாள் போய்ட்டே இருக்கும்.
ஆசிரியர்: அவங்க டயோசிஸ்ல ஒன்னும் செய்ற மாதிரி இல்ல புரோக்கர்: அப்ப எதுக்கு சார் எங்களை கூப்பிட்டு இப்படி பண்றீங்க.
ஆசிரியர்: உங்க டயோசிஸ் அவ்வளவு ஆக்கமா இருக்கு. அதுக்கு நாங்க என்ன பண்றது. அவ்வளவு பேரும்-களவாணி பயங்க. அவங்க ஒரு லட்சத்த போட்டு வேலையை வாங்கி கொடுக்க வேண்டியது தானே. நாளை
வருவேன் அப்போ பார்ப்போம்.
புரோக்கர்: நாளை கண்டிப்பா வருவீங்களா?
ஆசிரியர்: நாளை கண்டிப்பா வருவேன். புரோக்கர்: உங்க டிஇஓ கிட்ட பார்த்து செய்ங்கன்னு பேசி பாருங்க.
ஆசிரியர்: எல்லாம் ரேட்டு தான். இதுக்கும் டி.இ.ஓ. சம்பந்தமே கிடையாது. அவரை பார்க்க வேண்டிய அவசியமே
இல்லை. டி.இ.ஓ.வுக்கு இதுல வேலையை கிடையாது. டிஇ.ஓ இருந்தா நானே முடிச்சு இருப்பேனே. இந்த வருஷமும் சனியன் இப்படி ஆகிவிட்டது.
புரோக்கர்: சீட்டுக்கு பணம் கொடுத்தா உடனே ஆர்டர் வந்துரும்..
ஆசிரியர்: அதுக்கு வாய்ப்பு இருக்கு. புரோக்கர்: பாஸ்கர் சார் சொன்னாரு இப்ப நீங்க போட்டிங்கன்னா ரூ.1 லட்சம் அரியர் வரும்... கூட ஒன்னு,
ஒன்னரை தான் கொடுக்க வேண்டியது வரும்.
ஆசிரியர்: கட்சியை மீறி வேற வழியில்லையா. இது தான் நடக்கு... வேற வழியிருந்த மாதிரி தெரியல.. உங்க டயோசிசன்லேயே ரூபாய் கொடுக்கனும்னு தானே சொல்றாங்க.
புரோக்கர்: மேனேஜர் தான் ரொம்ப ஆர்வமாக இருக்கார். யாரெலாம் கொடுக்கனுமோ சீக்கிரம் கொடுங்க.
ஆசிரியர்: இதுல யோசிக்றதுக்கு என்ன இருக்கு கம்பல்சரி எல்லாம் கிடையாது. புரோக்கர்: உங்களுக்கு தெரிந்த சார்னு சொல்றீங்களே பேசி குறைக்க முடியாதா?
ஆசிரியர்: அவங்க கிட்ட போய் பேசவும் முடியாது, குறைக்கவும் முடியாது. அவசரம் இல்ல முயற்சி செய்து பாருங்க.... வேற வாய்ப்பு இருந்தா பாருங்க.

(மற்றொரு டேப் வெளியீடு)
புரோக்கர்: நீங்க தட்டாங்குளம் ஏ.இ.ஓ. அய்யா தானே? நேத்து அப்ரூவல் விஷயமா பேசினோம்ல... இதை-எப்படியாவது முடிச்சு கொடுங்க... உங்களுக்கு வேணும்னா 50 வாங்கிகிடுங்க. வீட்டுக்கு வேணும்னா வர்றேன். ஏ.இ.ஓ.. எனக்கு ஒன்னுமே வேண்டாம். வேலை கிடைச்சா ரொம்ப சந்தோஷம்...
புரோக்கர்: வேலை தான் கிடைச்சிருச்சே. சம்பளம் தானே வரவேண்டியது. டிஇஓ கிட்ட வேணும்னா பேசுங்க.அமவுன்ட் வேணும்னா கொடுத்துரலாம்..
ஏ.இ.ஓ. நான் பேசிக்கிட்டு தகவல் சொல்றேன்.
புரோக்கர்: திருநெல்வேலி வந்தா உங்களை நேரில் பார்க்கலாமா? டிஇ.ஓ. பணம் வாங்குவாரா? வாங்கினா-கொடுத்துடலாம்.
ஏ.இ.ஓ.: அது எல்லாம் வாங்குவாரு..நான் பாத்து செய்றேன்.
புரோக்கர்: காலன்குடி என் கொளுந்தியா வேலை சொன்னேனே முடிந்து விட்டதா? நம்ப கொளுந்தியா பேரு சுந்தரேஸ்வரி.
ஏ.இ.ஓ.: நான் சொன்னேன். நமக்கு கெட்ட பெயர் வந்துருமோன்னு பயப்படுறார். ஒரு ஆள் கிட்ட கேட்டேன். நீங்க 2
ரூபா கொடுங்க நான் கேரண்டின்னு சொல்றாரு... டி.இ.ஓ. ஆபிஸ் ஸ்டெனோவையும் பார்க்கனும்னு சொல்றாரு. எப்படியும் ரெண்டரை ஆகிடும். எனக்கு வாங்கி கொடுக்குறதுல ஆர்வம் கிடையாது. ஆண்டவன் கொடுத்த சம்பளம் போதும்....
இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது. இது தற்போது எல்லோருடைய செல்போனிலும் பரவ ஆரம்பித்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News :DINAKARAN

பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி :பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் .

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த நான்கு ஆண்டுகளில், 182 புதிய தொடக்கப் பள்ளிகளை துவக்கியும், 107 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 810 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 401 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து தனியார் பள்ளிகளின் சேர்க்கையிலும், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு 1,36,593 குழந்தைகள் இப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2010-2011 ஆம் ஆண்டில், முறையே தொடக்கநிலை மற்றும் உயர்நிலையில் 1 : 29 மற்றும் 1 : 35 ஆக இருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், 2014-2015 ஆம் ஆண்டு முறையே 1 : 25 மற்றும் 1 : 22 எனக் குறைந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 88.59 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு 1,429.09 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக 11,698 புதிய கழிப்பறைகள் 73.52 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், பயன்படுத்தாமல் இருந்த 10,776 கழிப்பறைகள் 41.67 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் 2,688.97 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் சோதனைக் கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற முக்கியக் கட்டமைப்பு வசதிகளை பள்ளிகளில் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

வரும் நிதியாண்டிலும், பல்வேறு நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி, 450.96 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

மாணவ மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடைத் தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016 ஆம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

6.62 இலட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 90.28 சதவீதமாக இருந்த உயர்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம், 2013-2014 ஆம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேல்நிலைக் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதமும், 2013-2014 ஆம் ஆண்டில் 75.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி அளவான 52.21 சதவீதத்தைவிட கணிசமான அளவு அதிகமாகும். அதேபோன்று, 2010-2011 ஆம் ஆண்டைக் காட்டிலும்2014-2015 ஆம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி மொத்த சேர்க்கையில், ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 21.83 சதவீதத்திலிருந்து 24.07 சதவீதமாகவும், பழங்குடியின மாணவ மாணவியர் சேர்க்கையின் பங்கு 1.01 சதவீதத்திலிருந்து 1.03 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

உயர் கல்வி

புதிய, அரசு பொறியியல் கல்லூரிகளையும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அமைப்பதற்கான இந்த அரசின் முயற்சிகளின் பயனாக, 2011-2012 ஆம் ஆண்டில் 6,13,164 ஆக இருந்த கல்லூரி இடங்கள், 2014-2015 ஆம் ஆண்டு 7,28,413 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோன்றே, பலவகை தொழில்நுட்ப கல்விப் பிரிவுகளில் உள்ள இடங்களும் இதே காலகட்டத்தில் 1,72,807–லிருந்து 2,15,652 ஆக உயர்ந்துள்ளன.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் திட்டத்தின் கீழ், 2014-2015 ஆம் ஆண்டில் 2,82,948 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2015-2016 ஆம்ஆண்டிற்கு இத்திட்டத்திற்கு 569.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசின் மேற்கூறிய ஒருங்கிணைந்த முயற்சிகளால், 2010-2011 ஆம் ஆண்டில் 6,51,807 ஆக இருந்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, 2014-2015 ஆம் ஆண்டு 7,66,393 ஆக உயர்ந்துள்ளது.

2014-2015 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்குக் கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 2015-2016 ஆம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 

2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி மாணவி ரீனா என்பவர்
மனுத்தாக்கல் செய்துள்ளார். வினாத்தாள் வெளியானதால் காப்பியடித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர்என்று மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பள்ளி கல்விதத்துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மூலம் பிளஸ் 2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களுக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் 2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களுக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த கணிதத் தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக சென்ற விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் செல்போன் மூலம் வினாத்தாளை படம் எடுத்து, சக ஆசிரியர் களான உதயகுமார், கார்த்தி கேயன் ஆகியோருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஒசூர் ஜெ.எம்.-2 ல் ஆசிரியர்கள் உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன், மகேந்திரன் ஆகிய 4 பேரும் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

ஆசிரியர்கள் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது ஆனால் ஜாமீன் கொடுத்தால் சாட்சியங்கள் களைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஒசூர் ஜெ.எம்.-2 நீதிபதி சுரேஷ் குமார், ஆசிரியர்கள் நால்வரின் ஜாமீன் மனுவை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், ஆசிரியர்கள் நால்வரையும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 404, 420, 606 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஆசிரியர்களை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடைமுறைகள் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

28ம் தேதி, தமிழகத்தில் , 'பந்த்':ஆசிரியர் கலந்தாய்வுதேதியில் மாற்றம் இருப்பின் பள்ளிக்கல்வித்துறை முறைப்படி அறிவிப்பினை வெளியிடும்

ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி போகுமா? வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப்
போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், 1,789 முதுநிலை
ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது.
இதில், தேர்வானவர்களுக்கு பணி வழங்குவதற்கான, இணையம் மூலமான கலந்தாய்வு (ஆன்-லைன் கவுன்சிலிங்), வரும் 28ம்
தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால்,
28ம் தேதி, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சார்பில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வானவர்கள்கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர முடியுமா என, அச்சமடைந்துள்ளனர். எனவே, கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்
துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலந்தாய்வு தேதியில் மாற்றம் இருப்பின் பள்ளிக்கல்வித்துறை முறைப்படி அறிவிப்பினை வெளியிடும் எனத் தெரிகின்றது.

செவ்வாய், 24 மார்ச், 2015

PG TRB TAMIL :உங்களுக்கு வெற்றி நிச்சயம்...

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?உங்களுக்கு வெற்றி நிச்சயம்
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை வரும் 28.03.2015 ல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி
வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 8508774178

முதுகலை ஆசிரியர்களுக்கானகவுன்சலிங்கை ஒளிவுமறைவின்றி நடத்த கோரிக்கை

தனியார்பள்ளிகளின் கூத்து!!!

தனியார் பள்ளியொன்று ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்ததுண்டறிக்கையொன்றுகண்ணில்பட்டது. 'என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்' என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்விகற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை
.இது ஒரு வித்தியாசமான நிபந்தனையாகத் தெரிந்தது. இப்படியெல்லாம் தனியார் பள்ளிகளில் சுயமாக யோசிக்கமாட்டார்களே என்று நினைத்தபடி மேலுமதொடர்ந்தால் அடுத்த நிபந்தனை அதைவிட அதிரடியானது. நல்ல பெற்றோர்கள், பண்பாடான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் சேர்க்கை என்பதுஇரண்டாவது நிபந்தனை. ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், பண்பாடானவர்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. 'எக்ஸ்க்யூஸ்மீ....ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கிடைக்குமா?' என்று கேட்பவர்கள் கூட படு நாகரிகமாகத்தானே வருவார்கள்?எதற்காகதிடீரென்று இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று குழம்பினால் அதற்கடுத்த நிபந்தனை காரண காரியத்தை விளக்கிவிட்டது. பெற்றோர்கள்
புகாரோ, கருத்தோ கூற விரும்பினால் தாளாளரை அணுகி மென்மயாகவும்,நாகரிகமாகவும் கூறவும் என்பதுதான் அதிமுக்கியமான நிபந்தனை.புரிந்துவிட்டது. யாரோ உள்ளே புகுந்து செமத்தியாக வீடு கட்டியிருப்பார்கள்போலிருக்கிறது. கதறக் கதற துண்டறிக்கை அச்சடித்துவெளியிட்டுவிட்டார்கள்.வீடு கட்டாமல் இருப்பார்களா? கட்டத்தான் செய்வார்கள். ப்ரீ.கே.ஜிக்கு வெறும் நாற்பதாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் பள்ளிஅது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு நாற்பதாயிரம் கட்டும் பெற்றவன் என்ன செய்வான்? அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா? அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம்வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில்
கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா? ஒரு தட்டும் தட்டிவிடுகிறார்கள். 'இரண்டரை வயசுப் பையனுக்கு பத்தாம் வாய்ப்பாடு சொல்லித் தரமுடியாதுய்யா' என்று கதறினால் 'அப்புறம் எதுக்குய்யா நாற்பதாயிரம் வாங்கி கல்லாப்பெட்டிக்குள்ள பூட்டுன?' என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா? பள்ளி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணிவாக என்ற சொல்லைப் பார்க்கும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. 'வேண்டாம்...அழுதுடுவேன்' என்பது மாதிரியே தெரிந்தது.இந்தப் பள்ளியில் ஏதோ நல்ல
விவகாரம் நிகழ்ந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. அடித்து மொத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கேள்வி கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போன்ற பல்லாயிரம் பள்ளிகள் திருடிக் கொழிக்கிறார்கள். முரட்டுத்தனமான திருட்டு இது. இப்படி பெற்றோர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம்கொடுக்கிறார்கள்? எம்.எஸ்.ஸி எம்.பில் முடித்த பள்ளித் தோழன் தனியார் பள்ளியொன்றில் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறான்.
அவனை நேரில் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் இந்தக் காலத்தில்?
பெற்றவர்களிடமிருந்து கறக்கிறார்கள். பணியாளர்களுக்கு மரியாதையான சம்பளமும் தருவதில்லை. எங்கே போகிறது அத்தனை பணமும்? கட்டிடத்து மேலாக கட்டிடம். கார் மாற்றி கார். பெருத்துப் போகும் தாளாளர். இப்படித்தானே போகிறது?அப்படியே பணத்தைப் பறித்தாலும் கல்வித்தரத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா? கிழித்தார்கள்.

PISA பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். Program for International Student Assessment என்பதன் சுருக்கம்தான் PISA உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது. சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது. இந்த அமைப்பு யாரையும வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை.2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில்இந்தியா கலந்து கொண்டது. Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால்
இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின.எழுபத்து நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா எழுபத்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள். சிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒருமுறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை.
2015 ஆம் ஆண்டுத் தேர்விலும்கலந்து கொள்ளப் போவதில்லை.

குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக
இருக்கும்? ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.வெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். 'நாங்கள்தான தில்லாலங்கடிகள்' என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச்
சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம்
கண்டுகொள்ளவேமாட்டோம்.பாடத்திட்டங்களில் மாற்றம், கற்பிக்கும் திறனில் மேம்பாடு என நாம் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றன.ஏதாவது உருப்படியாக நடக்கிற மாதிரி தெரிகிறதா? நாராயணமூர்த்திக்கும், அசிம் பிரேம்ஜிக்கும் மாடு மாதிரி உழைப்பவர்களைத்தான் உருவாக்கிக்
கொண்டிருக்கிறோம்.தனியார் பள்ளிகள் திருடட்டும். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களிடம் என்னவிதமான திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன? எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே
உருவாக்குகிறார்கள்? அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய செய்திகள் சேர்வதில்லை. தனியார் பள்ளிகளில்படிக்கும் மாணவர்கள் மிகச் சிறந்த கார்போரேட்
அடிமைகளாக உருவாகிறார்கள். அப்புறம் எப்படி கல்வித்தரம் விளங்கும்?அரசாங்கம்தான் கண்டுகொள்வதேயில்லை. கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது. கண்களை மூடிக் கொள்கிறார்கள். பெற்றவர்களாவது சட்டையைப் பிடித்தால் அதற்கு எதிராக துண்டறிக்கை விடுகிறார்கள். ஆனால் ஒருவிதத்தில சந்தோஷமாக இருக்கிறது. 'முழுமையான திருப்தி கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டினால் போதும் அதுவும் மார்ச் 2016 ஆம்
ஆண்டு கட்டினால் போதும்' என்கிற அளவில் இந்தப் பள்ளியினர் இறங்கி வந்திருக்கிறார்கள். அதையும் இந்தத் துண்டறிக்கையிலேயேகுறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த ஒரு பள்ளி மட்டும்தான் மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. நம் தேசத்தின் கல்வித்தரம், பள்ளிகளில் நடக்கும் பகல் கொள்ளை போன்றவை குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வு ஏற்படுவதே கூட கொண்டாட்டத்திற்கான மனநிலையை உருவாக்குகிறது. இந்தத் துண்டறிக்கையையும் அப்படியொரு கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய அறிக்கைதான்.

பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழை?

பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள்தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. வேதியியல் பாடம் ஏ வகை வினாத்தாள் வரிசையில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்ததாகஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அணு வேதியியல், வெப்ப இயக்கவியல் பகுதிகளிலிருந்து இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 10-ஆவது கேள்வி யுரேனியம் அணுத்துகள் ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியிடப்படும் ஆல்பா, பீட்டாகதிர்களின் எண்ணிக்கை தொடர்பானது. இதில் ஈயத்தின் மதிப்பு 206 என்று இருப்பதற்கு பதிலாக 208 என வழங்கப்பட்டுள்ளது. இதனால் சரியான விடை கிடைக்காது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், வெப்ப இயக்கவியல் தொடர்பான 22-ஆவது கேள்வியில் கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளுமே தவறானவை. இந்தப் பகுதியில் விடையாக +0.032ஒஓ-1 என்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சற்று கடினமான கேள்வித்தாள்: வேதியியல் பாட வினாத்தாள் இந்த ஆண்டு சற்று கடினமானதாகவே இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமானவையாக இருந்தன. பிற பகுதி வினாக்களும் எதிர்பார்க்காத பகுதிகளிலிருந்து வந்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 விடைத்தாளின் முகப்புச் சீட்டை தவறாகக்கிழித்ததால், விடைத்தாள் சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக்கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின்கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த 5ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், தேர்வுத்துறை மூலம், மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாவட்டங்களில் தேர்வுப் பணிநியமனத்தில் நடந்த குளறுபடிகளால், தேர்வுப் பணிக்கு புதிதாக வந்தவர்கள் நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாமல், பலகுழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தத்தில்
முறைகேடுகளை தடுக்க, விடைத்தாளில், மூன்று பார்கோடுகள் கொண்ட முகப்புச் சீட்டு (டாப் ஷீட்)
இணைக்கப்பட்டிருக்கும். அதில், மாணவரின் பதிவு எண், பள்ளியின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்கள் இருக்கும்.அதனால், விடைத்தாளில் தங்கள் பதிவு எண் எழுதக் கூடாது என, மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், தேர்வுமுடிந்ததும், விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்று, முகப்புச் சீட்டில், மூன்று பிரிவு பார்கோடு பகுதியில், ஒரு பார்கோடு பகுதியை மட்டும் கிழித்துக் கொண்டு, இரண்டு பகுதிகளுடன் தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பல தேர்வு மையங்களில், கடைசி நேரத்தில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால், அவர்களில் பலர்,தேர்வுத் துறை நிபந்தனைகள் தெரியாமல் குழம்பினர். அதனால், முதல் நாள் நடந்த, தமிழ் முதல்தாள் தேர்வில் மட்டும்,
விடைத்தாளிலுள்ள முகப்புச் சீட்டை, சில தேர்வு மையங்களில் முழுவதுமாக கிழித்து விட்டனர். இதனால், விடைதிருத்தும் மையங்களுக்கு வந்த விடைத்தாள்களில், முகப்புச் சீட்டு இல்லாமல், எந்த மாணவருக்கு சொந்தமான விடைத்தாள் என்பது தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு, அந்தந்த தேர்வு மைய ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கொண்டு, முழுமையாக இருக்கும் முகப்புச் சீட்டின் கையெழுத்துகளை சரிபார்த்து, அவற்றை விடைத்தாளுடன் பொருத்திப் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்த 3 பேர் வெளியேற்றம்; 3 ஆசிரியர்கள் இடைநீக்கம்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 3 மாணவர்கள் விடைக் குறிப்பை மறைத்து வைத்திருந்ததாகபறக்கும் படையினரிடம் பிடிபட்டதை அடுத்து, தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருந்த 3 ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்செய்யப்பட்டனர்.
முத்துத்தேவன்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 கணக்குப் பதிவியல் மற்றும் வேதியியல்பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது.
அப்போது பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.இதில், கணக்குப் பதிவியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தனித் தேர்வர் ஒருவரும், வேதியியல் தேர்வு எழுதிக்கொண்டிருந்த இதே பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்களும் விடை குறிப்புகளை மறைத்து வைத்திருந்ததாக பறக்கும்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தேர்வறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் வடிவேல்,இதே பள்ளியில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் லட்சுமிநாராயணன், வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம் ஆகியோரை தாற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.வாசு
உத்தரவிட்டார்.

வரும், 26ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டு பிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் சுரேஷ், பொதுச் செயலர் வள்ளிவேலு,பொருளாளர் ஜம்பு கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: தேர்வு அறை கண்காணிப்பு பணியிலுள்ள ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்'செய்யப்படுவர்என, தேர்வுத் துறை அறிவித்திருப்பது, இப்பணியிலுள்ள, 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்களை அச்சமடையசெய்துள்ளது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்லும் முன், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை, அறிவுரையாக மட்டுமே சொல்ல வேண்டும். மாணவ, மாணவியர் ஆடையைத் தொட்டு, உடல் ரீதியாக சோதனை செய்யக்கூடாது என,ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மாணவ, மாணவியர் ஆடைக்குள், 'பிட்' பேப்பரை மறைத்து
வைத்திருப்பதை, சோதித்து எடுப்பது இயலாத காரியம். அதில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில், பறக்கும் படை மற்றும் உயரதிகாரிகள் சோதனை செய்து, பின் தேர்வுஅறை ஆசிரியர்களை தண்டிப்பது நீதிக்குப் புறம்பானது. அதிகாரிகள் பிடித்தால்,ஆசிரியர்கள் பொறுப்பு என்றால், அதிகாரிகள் சோதனைக்கு பின்,மாணவர்களை அறைக்கண்காணிப்பாளர்கள் பிடித்தால், அதற்கு, சோதனைக்கு வந்த அதிகாரிகள் பொறுப்பேற்பரா? எனவே, 'சஸ்பெண்ட்' உத்தரவை வாபஸ் பெறக் கோரி, வரும், 26ம் தேதி, விடைத்தாள் திருத்தப் பணியை, ஒரு மணி நேரம்புறக்கணித்துப் போராட்டம் நடத்தப்படும். அதையும் தாண்டி, உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், தேர்வுப் பணியை
ஆசிரியர்கள் பரிசீலிக்கும் நிலை வரும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் : ஓசூர் டி.இ.ஓ., உட்பட 4 பேர் 'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்டஅலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன்ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், பிளஸ் 2 கணித வினாத்தாளை அனுப்பியது தொடர்பான விவகாரம், உச்சகட்டத்தைஎட்டியுள்ளது.
தீவிர கண்காணிப்பு: இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்கள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், மாவட்டத்தில் உள்ள சில தேர்வு மையங்களை, நேற்று பார்வையிட்டு, தேர்வுப்பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின், தேவராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு பள்ளி தேர்வு மையம்மற்றும் தர்மபுரியில், பச்சமுத்து, செந்தில், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் மற்றும் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிஉட்பட, ஆறு பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தேன். ஓசூரில், கடந்த 18ம் தேதி, பிளஸ் 2 கணித தேர்வுவினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியான சம்பவம் தொடர்பாக, போலீசார், தனியார் பள்ளியை சேர்ந்த, மகேந்திரன்,கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய, நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நாங்களும் நடத்துவோம்: இது தொடர்பாக, போலீசார் தரப்பு விசாரணை முடிந்த பின், எங்கள் தரப்பு விசாரணையை துவங்குவோம். வரும் 31ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடப்பதால், தேர்வு முடிந்த பின், கல்வித் துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டு, துறை ரீதியானவிசாரணை மேற்கொள்ளப்படும்.
உண்மை வெளியே வரும்: மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சிறையில் உள்ளதால், அவர்களுக்கு உதவி செய்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள், யார் யார் என்பது தெரியவில்லை. அவர்களிடம், போலீசார் விரிவான விசாரணை நடத்தினால் தான், எல்லாம் தெரியும். இந்தசம்பவத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது. தனியார் பள்ளிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு
கண்காணிப்பாளராக நியமிக்கப்படலாம்; அதில் தவறு இல்லை. ஆனால், சரியான உத்தரவு நகல் இல்லாமல், தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய விவகாரம் குறித்தும், ஆள் மாறாட்டம் நடந்ததா என்பதுகுறித்தும், கல்வித் துறை தரப்பில் விசாரணை நடத்தப்படும்.

டி.இ.ஓ., 'சஸ்பெண்ட்': ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், அரசு பள்ளி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். 35 குழுக்கள்: மீதியுள்ள பிளஸ் 2 தேர்வுகளை, எவ்வித முறைகேடும் இல்லாமல் நடத்த, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய, 35 குழுக்களை அமைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 23 மார்ச், 2015

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த விவகாரம் ஓசூர் கல்வி அதிகாரி உள்பட 2 பேர் மீது நடவடிக்கை? தேர்வு கண்காணிப்பு பணியில் வட்டாட்சியர்கள்



ஓசூரில் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த விவ காரத்தில், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது ஓசூர் தனியார் பள்ளி ஆசிரி யர்கள் வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்த விவ காரம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அலு வலகப் பணியாளர் ஒருவர் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கல்வித்துறையைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: கடந்த 18-ம் தேதி ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில் நடந்த கணிதத் தேர்வின்போது, கண் காணிப்பாளர்களாக பணியாற்றிய விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரி யர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் செல்போன் மூலம் வினாத்தாளில் உள்ள ஒரு மதிப் பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்களை படம் பிடித்து சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி உள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தலைமை யிலான சிறப்பு பறக்கும் படையினர், சம்பந்தபட்ட ஆசிரியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து விஜய் வித்யாலயா பள்ளிக்குச் சென்ற சிஇஓ பொன். குமார், தேர்வு முடியும் வரை அனைத்து அறைகளிலும் தீவிர மாக கண்காணித்துள்ளார். மேலும், மகேந்திரன், கோவிந்தன் ஆகிய இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் எவ்வித உத்தரவும் இல் லாமல் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், பரிமளம் மெட்ரிக் பள்ளிக்கு டிஇஓ அலு வலகத்திலிருந்து போன் மூலம் வந்த உத்தரவை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட அனுமதித்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜிடம் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கணிதத் தேர்வு நடக்கும்போது, கணித ஆசிரி யர்களை தேர்வு மையக் கண் காணிப்பாளராக நியமிக்கக் கூடாது. அப்படி இருந்தும், தனியார் பள்ளி கணித ஆசிரியர் மகேந்திரன், தேர்வு மைய கண்காணிப்பாளராக எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை கண் காணிப்பாளர்களாக தான் நியமிக்க வில்லை என்றும் அவர் அறிக்கை அளித்ததாகத் தெரிகிறது. அப்படியென்றால் தொலைபேசி மூலம் உத்தரவிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவரை கண் காணிப்பு பணிக்கு அனுப்பியது யார் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் மற்றும் டிஇஓ அலுவலகத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது கல்வித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுக்கிறது. இதனால் இருவரிடமும் அதிகாரிகள் ரகசியமாக விசாரித்து வரு கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 கண்காணிப்பு பணியில் மாற்றம் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்வு சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தொடர்ந்து நடை பெறவுள்ள பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு களைக் கண்காணிக்கும் பணியில் அனைத்து வட்டாட்சியர்களையும் ஈடுபடுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு நியமிக்கப் பட்டுள்ள பறக்கும்படை அலுவ லர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்தும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 
 தருமபுரியிலும் நடவடிக்கை
 வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளி உட்பட 3 பள்ளிகளிலிருந்து 93 கண்காணிப்பாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இப்பள்ளிக் குழுமத்துக்கு தருமபுரியில் 2 பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளின் தேர்வு மையத்திலிருந்து 38 பேரும், முதன்மை கண்காணிப்பாளர்கள் 2 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பள்ளிகளில் ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுரி சிஇஓ மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.