.
குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களை நிரப்ப
இத்தேர்வு நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்வுக்கு செப். 5 முதல் இணையதளத்தில் www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை ( oct 4)கடைசி நாளாகும்.
குரூப்-2 முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. குரூப் 2 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்தை அக்.,8ம் தேதிக்குள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக