தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர்
ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால்,நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்று இருந்த ஆவின் பால் கொள்முதல்தற்போது 2013-2014-ல் நாள் ஒன்றுக்கு 23.22 லட்சம் லிட்டர் என்றஅளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பால் பண்ணைகளின் கட்டமைப்பை அதிகரித்து பால்உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நலனுக்காகவும், கால்நடை தீவனபயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் கீழ்க்காணும் பணிகள் தமிழ்நாடு பால்உற்பத்தியாளர்கள், கூட்டுறவு இணையத்தின் மூலம் 46 கோடியே 50 லட்சம்ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
1) சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பால் பண்ணை மற்றும் பால்குளிரூட்டும் நிலையங்களின் இயந்திர தளவாடங்கள் மற்றும்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய பால் குளிரூட்டும்இயந்திரங்கள், பால் கொள்கலன்கள், பாட்டில்களில் நெய் நிரப்பும்தானியங்கி இயந்திரம், மின் ஆக்கி, பால் பதப்படுத்தும் இயந்திரங்கள், கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், பால் சமன்படுத்தும்இயந்திரங்கள், பிளாஸ்டிக் டப்புகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள், பால்பாக்கெட்டுகள் மீது, உரிய விவரங்களை அச்சிடும் வெப்பமாற்று முறை உபகரணங்கள் ஆகியவை 35 கோடியே 77 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரத்து 432பால் உற்பத்தியாளர்களும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 138 பால் நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
2) ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் தீவன தொழிற்சாலை 10 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கப்பட்டு, தீவன உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 150 டன்என்ற அளவிற்கு உயர்த்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சத்து 29
ஆயிரம் உறுப்பினர்கள் மேற்கூறிய அரசின் முனைப்பான திட்டங்கள்,தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் கூடுதலான பயன்களைப் பெற்று நன்மை பெறவும் வழி வகுக்கும் என்று அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக