"கலைக்கரசு' என்று போற்றப்படும் கலை - நாடகக் கலை.
"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று போற்றப்படுபவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
சமரச சன்மார்க்க நாடகச் சபையை நிறுவியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.
மனோன்மணீயம் பட்ங் ள்ங்ஸ்ரீழ்ங்ற் ஜ்ஹஹ் - (இரகசியவழி) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
"அனிச்ச அடி' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - அ.பழனி.
மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் - அனிச்ச அடி.
"மண்ணியல் சிறு தேர்' என்னும் நாடகம், வடமொழி நூலான மிருச்சகடிகம் என்ற நூலைத் தழுவி பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியாரால் எழுதப்பட்டது.
தமிழில் முதன் முதலில் தோன்றிய சமூக நாடகம் - டம்பாசாரி விலாசம்.
"டம்பாசாரி விலாசம்' எனும் நாடகத்தின் ஆசிரியர் - காசி விசுவநாத முதலியார்.
"நந்தனார் சரித்திரம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - கோபால கிருஷ்ண பாரதியார்.
"தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுவர் - பம்மல் சம்பந்த முதலியார்.
சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நூல்கள் - அபிமன்யு, சுந்தரி, அல்லி அர்ஜூனா, இலங்கா, இலங்கா தகனம், கோவலன், சிறுத்தொண்டர் முதலியன.
சங்கரதாஸ் சுவாமிகளின் பட்டப்பெயர்கள் - பேரறிஞர், நடிப்புக் கலைவன பேராசான், ஞானச்செம்மல், மகாமேதை, கலங்கரை விளக்கம், நாடக உலகின் இமயமலை, நாடக உலகின் ஓர் நல்லிசைப்புலவர்.
"ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடலை (திருவிளையாடல் - ஒüவையார்) இயற்றியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.
"சுகுண விலாச சபை'யை நிறுவியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.
பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்கள் - நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நாடகத்தமிழ், நடிப்புக் கலை, நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்போ?, நாடகமேடை நினைவுகள்.
பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய சிறப்பான நாடகங்கள் - சதிசுலோச்சனா, யயாதி, காலவரிஷி, சபாபதி, கலையோ காதலோ?, பொன் விலங்குகள், குறமகன், தாசிப்பெண் ஆகியவை.
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், சூர்ப்பனகை.
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் - நாடகவியல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக