திங்கள், 6 ஜூலை, 2015

விடாமுயற்சியால் வெற்றி இலக்கை அடையலாம்!

இரண்டு முறை சிவில்சர்வீசஸ் தேர்வில் பங்கேற்றும்,ஐ.ஆர்.எஸ்.,ஆகவே தேர்ச்சி பெற முடிந்த
உடுமலையைச் சேர்ந்த பூபாலன், தனதுவிடாமுயற்சியால், மூன்றாம் முறையாகமுயற்சி செய்து, வாழ்நாள் லட்சியமாக கருதிய, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கரட்டுமடத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 27. கடந்த 2009ம்
ஆண்டில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து,சென்னை, டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியில்
சேர்ந்தார்.கடந்த 2011ல் முதல் முறையாக, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று, சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின், இரண்டாவது முறையாக இத்தேர்வில் பங்கேற்ற இவரால், ஐ.ஆர்.எஸ்., பட்டியலுக்கேதேர்ச்சிபெற முடிந்தது. எனினும், தன்னம்பிக்கையை தளரவிடாமல், மூன்றாம் முறையாக, சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று, தற்போது,
ஐ.ஏ.எஸ்., தேர்வு பெற்றுள்ளார். இவர், அகில இந்திய அளவில் அளவில், 80வது இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, பூபாலன் கூறியதாவது: ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற வேண்டுமென்பதுதான் எனது கனவு. அந்த பதவியின் மூலமே ஏழை, எளிய மக்களுக்காக நேர்மையாக பணியாற்ற முடியும் என்பது என, நம்பிக்கை; இதையே, வாழ்நாள் லட்சியமாக கொண்டேன்.எனது தந்தை தண்டபாணி, அரசுப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனது வெற்றிக்கு, தாயார் சண்முகவள்ளி, சகோதரி பிரியதர்ஷினி, நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். விடாமுயற்சியால் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.சென்னையிலுள்ள, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி மையம் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நேர்மையாக பணியாற்றி எனது பங்களிப்பை செலுத்துவேன்.இவ்வாறு, பூபாலன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக