வியாழன், 22 ஜனவரி, 2015

குரூப் - 1 தேர்வு முறைகேடு வழக்கு: மறுஆய்வுக்கு கோர்ட் உத்தரவு

2001ல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வில், தேர்ச்சியடைந்து பணியிடம் பெற்ற, 65
அதிகாரிகளின் விடைத்தாள்களை, மறுஆய்வு செய்யும்படி, யு.பி.எஸ்.சி.,க்கு, சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வை, 2 மாதத்திற்குள் முடித்து, அறிக்கை அளிக்கும்படியும், அந்த
உத்தரவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் சார்பில், கடந்த 2001ம் ஆண்டு, குரூப் - 1தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் முடிவில், துணைக் கலெக்டர், வணிகவரித் துறை அதிகாரிகள் என, பலபதவிகளுக்கு, 83 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வுகளில், முறைகேடுகள் நடந்திருப்பதாக, புகார்
எழுந்தது. இதையடுத்து, இந்த அதிகாரிகளின் பணி நியமனத்தை, ரத்து செய்யும்படி கோரி,
சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், 83 பேர்களின் பணி நியமனத்தை,ரத்து செய்து உத்தரவிட்டது. விவகாரம் சுப்ரீம்கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவே, ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, 83 பேரும், தங்களது பணிகளில் தொடரலாம் என்று, இடைக்காலஉத்தரவு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை, மீண்டும் சுப்ரீம்கோர்ட்டிற்கு வந்தது. நீதிபகளின் உத்தரவு: தற்போது அதிகாரிகளாக பணியிலிருக்கும், 65 பேர்களது விடைத்தாள்களையும்,
டி.என்.பி.எஸ்.சி., 2 வார காலத்திற்குள், சீலிடப்பட்ட கவரில் வைத்து, யு.பி.எஸ்.சி., வசம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை, 2 மாதத்திற்குள், யு.பி.எஸ்.சி., ஆய்வு மேற்கொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.,யின் விதிமுறைகள்,மீறப்பட்டு உள்ளனவா என்பது குறித்தும், கலர் பென்சில் கலர் பேனா போன்றவை பயன்படுத்தப்பட்டு, மதிப்பெண்கணக்கீட்டில், குளறுபடிகள் நடந்துள்ளனவா என்பதையெல்லாம் கண்டறிந்து, விரிவானஅறிக்கையை யு.பி.எஸ்.சி., அளிக்க வேண்டும்." இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, மே 6ம் தேதிக்கு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக