சனி, 24 ஜனவரி, 2015

PG TRB TAMIL key clarification-அண்மை விளி



 


 
 
பவணந்தி முனிவர்
 
இயற்றிய
 
நன்னூல் மூலமும்
 
சங்கர நமச்சிவாயர் செய்து
சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட
புத்தம் புத்துரை
என்னும்
விருத்தியுரையும்
 
உள்ளே
பக்கம் எண் : 374
  

நன்னூல் விருத்தியுரை
 

     எ-னின், னகரவீற்று அஃறிணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எய்தியதன்மேல்
சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பொதுவிதியன்றி (305) னகரவீற்று அஃறிணைப்பெயர்க்கண்ணும்
விரவுப்பெயர்க்கண்ணும் இறுதி கெடுதலும் அதனோடு ஈற்றயல் நீடலும் விளியுருபாம்
எ-று.

     இறந்தது தழீஇய எச்சவும்மைகளும் விளியுருபாம் என்பதூஉம் தொக்கு நின்றன.

     வ-று: அலவ, இகல, கலுழ எனவும் அலவா, இகலா, கலுழா எனவும் சாத்த, கொற்ற
எனவும் சாத்தா, கொற்றா எனவும் வரும். (54)
 

லகார ளகார ஈற்றுப் பெயர்கள்
 

312.

லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றய னீட்சியு முருபா கும்மே.

     எ-னின், லகார ளகார ஈற்று அஃறிணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும்
எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: பொதுவிதியன்றி (305) லகார ளகார ஈற்று அஃறிணைப் பெயர்க்கண்ணும்
விரவுப்பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீடலும் விளியுருபு ஆம் எ-று.

     வ-று: "காட்டுச்சா ரோடுங் குறுமுயால்" (தொல். விளி. 34 இளம்.), கிளிகாள்
எனவும் தூங்கால், மக்காள் எனவும் வரும். (55)
 

விளியுருபுகளுக்குப் புறனடை
 

313.

அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னோவு மாகும்.

     எ-னின், மேல் (305-312) விதந்த விளியுருபுகட்கு ஆவதோர் புறனடை உணர்த்தல்
நுதலிற்று.

     இ-ள்: மேற் போந்த விளியுருபுகளுள் இயல்புகளும் ஈறழிவுகளும் அண்மை
விளிக்கண்ணும் அளபுகள் சேய்மை விளிக்கண்ணும் ஓகாரங்கள் புலம்பல் விளிக்கண்ணும்
வரும் எ-று.

     எனவே ஏனை விளியுருபுகள் அண்மை, சேய்மை, புலம்பு என்னும் மூன்று
இடத்தும் விராய் வரும் என்பது பெற்றாம். (56)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக