புதன், 21 ஜனவரி, 2015

கல்வித் துறை சார்பில், 'அனிமேஷன்' பாடங்கள்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெறும்
வகையில், கல்வித் துறை சார்பில், 'அனிமேஷன்' பாடங்கள் அடங்கிய 'டிவிடி'கள், அனைத்து அரசுப்
பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம்
தேர்ச்சி பெற, மாநில கல்வித் துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக்
கல்வித் துறை, பல்வேறு திட்டங் களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.

'அனிமேஷன்' பாடங்கள்
காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் வகுப்புகள், திருப்புதல் தேர்வுகள், விடுமுறை நாட்களில்
சிறப்பு வகுப்புகள் என, அனைத்து வகையிலும் முயற்சி எடுக்கின்றன. ஆனால், எத்தனை புதிய செயல்பாடுகள்,முயற்சியும் செய்தாலும், அரசுப் பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சி என்பது, பெரும்பாலும்,அரிதாகவே காணப்படுகிறது. தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டி போட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. இதனை மாற்றிக் காட்ட, நடப்பு கல்வியாண்டில், புதிய கல்வி செயல் திட்டத்தை மாநில கல்வித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு,பாடங்கள் அடங்கிய, 'டிவிடி' தயார் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.
இதற்காக, பாடங்கள் முழுவதும் 'அனிமேஷன்' முறையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த, 'அனிமேஷன்'பாடங்களுடன், தேர்வில் தேர்ச்சி பெறும் யுக்திகள் அடங்கிய 'டிவிடி'கள் தயாரிக்கப்பட்டன. இந்த 'டிவிடி'கள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்டது.
'டிவிடி' வினியோகம்
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மட்டும் இந்த, 'டிவிடி'யை மாநில கல்வித் துறை வழங்கியதால்,
பிளஸ் 2மாணவர்களுக்கு, பிரத்யேக பாட வகுப்புகள் அடங்கிய, 'டிவிடி'யை காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறையே தயார்செய்துள்ளது.மாவட்டத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு, அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு,வீடியோ பதிவுகள் அடங்கிய 'டிவிடி'கள் தயாரித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில்தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துக் காட்ட மாவட்ட கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக