நன்னூல் | |
காண்டிகை உரை | |
யாழ்ப்பாணம் நல்லூர் | |
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் | |
திருத்தியும் விளக்கியும் கூட்டியும் புதுக்கியது | |
ஆறுமுகநாவலர் வி.அச்சகம் 300 தங்கசாலைத் தெரு சென்னை 1 | 24 ஆம் பதிப்பு பராபவ-1966,சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை நற்பொறுப்பாளர் தி.க.இராசேசுவரன் B.A. அவர்களால் அச்சிடப்பட்டது. உரிமை உடையது |
பெயரியல்
வேற்றுமை
விளி உருபுகளுக்குப் புறனடை
313 அண்மையி னியல்புமீ றழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னோவு மாகும்.
முன் சொல்லப்பட்ட விளியுருபுகளுள்
இயல்பும் ஈறு அழிவும் அண்மையின் = இயல்பாதலும் ஈறு கெடுதலும் சமீப விளிக்கண்ணும்
அளபு சேய்மையினும் = அளபெடுத்தல் தூர விளிக்கண்ணும் ,
ஓ புலம்பினும் ஆகும் = ஓகாரம்மிகுதல் புலம்பல் விளிக்கண்ணும் வரும்.
எனவே, மற்றை விளி உருபுகள் இம்மூன்றிடத்தும் கலந்துவரும் என்பது பெற்றாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக