சனி, 31 ஜனவரி, 2015

இலவச சமையல் காஸ் வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு சிலிண்டர் வழங்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகஅரசு சுற்றறிக்கை

இலவச சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, மற்ற காஸ் வாடிக்கையாளர் போல்,
ஆண்டுக்கு சிலிண்டர் வழங்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகஅரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய
மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 28 லட்சம் இலவச வாடிக்கையாளர் உட்பட, மொத்தம் 1.53
கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டம், 2007 ஜன., 14ம்தேதி துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளருக்கு அரசு சார்பில், காஸ் அடுப்பு, ரப்பர் குழாய்,ரெகுலேட்டர், டெபாசிட் கட்டணம், 950 ரூபாய் ஆகியவை, இலவசமாக வழங்கப்படுகின்றன. பின், காஸ்ஏஜன்சிகளிடம் இருந்து மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இலவசகாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், மற்ற காஸ் வாடிக்கையாளர் போல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கூடுதல்சிலிண்டர் போன்ற சலுகை களை பெற முடியாது.
தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம், ஜன., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ்வாடிக்கையாளர் சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானிய தொகை, வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், கூடுதல் சிலிண்டர்மற்றும் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கு, காஸ் ஏஜன்சிகளை அணுகினர். ஆனால், அவர்களின்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இலவச சிலிண்டர் இணைப்பை திரும்ப ஒப்படைத்து விட்டு,
வழக்கமான சிலிண்டர் இணைப்பு பெற முடிவு செய்தனர். ஆனால் இதற்கு, பல்வேறு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பதால், எளிதில் மாற முடியவில்லை. இதனால் அவர்கள், வட்ட மற்றும் மாவட்ட உணவு வழங்கல்அதிகாரி களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, மற்ற வாடிக்கையாளர் போல், ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்கும்படி, உணவு வழங்கல் துறை அதிகாரி கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலவச காஸ் வாடிக்கையாளருக்கு, தற்போது ஆண்டுக்கு,ஆறு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களால், மற்ற காஸ்வாடிக்கையாளருக்கு, ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்கப்படுகிறது. எனவே, விருப்பம் உள்ள இலவச காஸ் வாடிக்கையாளர், மேற்கண்ட நடைமுறையை பயன்படுத்தி கொள்ளலாம்.இலவச காஸ் வாடிக்கையாளர்கள், பிறர் போல், இரண்டாவது காஸ் இணைப்பை, டெபாசிட்தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பெயர் திருத்தம், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மாற்றம் போன்றநடைமுறைகளை, பிறருக்கு பின்பற்று வது போல், இலவச வாடிக்கையாளிடமும், எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றலாம். ஆனால், காஸ் இணைப்பை, குடும்ப உறுப்பினர் தவிர்த்து, மூன்றாம் நபருக்கு மாறுதல் செய்யக்கூடாது. மேற்கண்ட விவரம் குறித்து, காஸ் ஏஜன்சிகளுக்கு, விரிவான அறிவுரை வழங்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
இலவச காஸ் சிலிண்டர் வாடிக்கையாளருக்கு, அரசு அறிவிப்பின் படி, ஆண்டுக்கு, 12 சிலிண்டர் வழங்க
மறுக்கும், காஸ் ஏஜன்சி குறித்து புகார் அளித்தால், அந்த ஏஜன்சியின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய
அரசு முடிவு செய்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக