எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. படர்க்கைப் பெயரை முன்னிலையாக விளிப்பது அதன் பொருள் ஆகும். விளித்தல் என்பதற்கு அழைத்தல் அல்லது கூப்பிடுதல் என்பது பொருள். எட்டாம் வேற்றுமை விளிப்பொருளில் வருவதால் இது விளிவேற்றுமை எனப் பெயர் பெற்றது. எடுத்துக்காட்டாக, 'இராமா! வா' என விளிக்கும்போது (அழைக்கும் போது) இராமன் என்னும் படர்க்கைப்பெயர் முன்னிலைப் பொருளுக்கு உரியது ஆகின்றது. பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது பெயரின் இறுதியில் சில மாறுதல்கள் ஏற்படும். அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் ஆகும். (ஈற்றயல் எழுத்து = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து.) எடுத்துக்காட்டு
விளிவேற்றுமையில் ஏற்படும் மாறுதல்களை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.
இவ்விளிவேற்றுமை அண்மைவிளி, சேய்மைவிளி என இரு வகைப்படும். அருகில் உள்ளவரை அழைப்பது அண்மை விளி; தொலைவில் உள்ளவரை அழைப்பது சேய்மை விளி. (அண்மை = அருகு, சேய்மை = தொலைவு) எடுத்துக்காட்டு
இராமாவோ என்பது புலம்பலில் வரும் விளி. |
வெள்ளி, 23 ஜனவரி, 2015
TRB PG TAMIL அண்மைவிளியும் சேய்மைவிளியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக