ஜன.28-இல் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 28-ஆம் தேதி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலச் செயலர் தி.கோவிந்தன்ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாகஅதிமுக தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டது. ஆனால்,அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லை. தற்போது தரம் உயர்த்தப்பட்ட 50 மேல்நிலைப் பள்ளிகளுக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம்
தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும்,அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 28-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக