செவ்வாய், 31 டிசம்பர், 2013


தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாண

குரூப் - 1 பணியிடங்களை அளிப்பதில் விதிமீறல் : முதல்வர் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி,அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக,
சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும், தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது. 

13 ஆண்டுகளாக இல்லை :
 அரசு விதியின்படி, ஒவ்வொரு ஆண்டும், நவ., 1ம் தேதி, குரூப் - 1நிலையில் உள்ள காலி பணியிடங்களை, கணக்கெடுக்க வேண்டும். பின், இரு பணியிடங்கள், பதவி உயர்வுக்கும்,
ஒரு பணியிடம், நேரடி நியமனத்திற்கும் என, பிரித்து, அதன்படி, பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த விதிமுறை, 13 ஆண்டு களாக கடைபிடிக்கப்படவில்லை என, தேர்வை எழுதுவோர்,குற்றம் சாட்டுகின்றனர். இதை, டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரமும் ஆமோதிக்கிறது. உயர் பதவிகளில்இருப்பவர்கள், விதிமுறைக்கு மாறாக, போட்டி தேர்வுக்கான இடங்களையும், பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக, இரட்டை இலக்கத்திலான இடங்கள் மட்டுமே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வருகின்றன. 2010ல்,அதிகபட்சமாக, 131 பணிஇடங்கள் தரப்பட்டன. அதன்பின்,
குறைந்து விட்டது. நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பிலும், வெறும், 79 இடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமீறலை, டி.என்.பி.எஸ்.சி.,யும், கண்டு கொள்வதில்லை என்றும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உரிய இடங்களை கேட்டுப் பெறுவதில், ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: விதிமுறையையும், கடைபிடிப்பது இல்லை; காலி பணியிடங்கள்,
பதவி உயர்வு ஆகியவற்றில், வெளிப்படைத்தன்மையும் இல்லை. பணம் வாங்கி, தேர்வுக்கான இடங்களையும், பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுகின்றனர். இதை, அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஒருவர், 28 வயதில், குரூப் - 1 தேர்வை எழுதினால், அதன் முடிவு ?வளிவர, மூன்றரை ஆண்டுகள் ஆகி விடுகின்றன. அதே நபர், வயது காரணமாக, அடுத்த தேர்வை எழுத முடியாது. வயது வரம்பை தளர்த்தக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்; அரசு, கண்டு கொள்ளவில்லை.இது போன்ற நிலையில், காலி பணிஇடங்களை, உரிய விதிமுறைப்படி அளிப்பதை, சட்ட ரீதியில் தான்,
உறுதி செய்ய முடியும். இந்த விவகாரத்தில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 
முதல்வர் உத்தரவிடுவாரா? :
தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், காலி பணியிடங்களை அளிப்பதில்,
விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், இந்த பிரச்னையை, அரசு தான், சரி செய்யவேண்டும். நாங்கள், ஒவ்வொரு துறையாக சென்று, கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முதல்வர் உத்தரவிட்டால், சரியான காலி பணிஇடங்கள், தேர்வாணையத்திற்கு கிடைக்கும் என, தெரிவித்தன.

தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை


தொடக்கக் கல்வியில், பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என,கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 2004-05ம் ஆண்டு முடிய, இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, அந்தந்த, பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும்,அரசு முடிவெடுத்தது.அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில், 2005ல் இருந்து, 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உயர்நிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு, மாநில முன்னுரிமை அடிப்படையில், 50 சதவீதம், முதுகலை ஆசிரியர்களாகபதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தொடக்கக்கல்வித்துறை செயல்பட்டாலும்,அதை, தனி யூனிட்டாகவே கருதி, தனி நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு என்பது கானல் நீராக உள்ளது.முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தங்களுக்கும், பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும் என,தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில், டி.ஆர்.பி., தேர்வெழுதி பணிநியமனம் பெற்ற நிலையில், உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சில ஆண்டுகளில், அவர்கள், தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால், தொடக்கக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த, பட்டதாரி ஆசிரியர்கள், கடைசி வரை,
பட்டதாரி ஆசிரியர்களாவே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதை மாற்றி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 30 டிசம்பர், 2013

FLASH NEWS :2002 ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்ற 115 ஆசிரியபப்யிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு நாளை 31.12.13 பிற்பகல் நடைபெற உள்ளது


Flash news:  MADRAS HIGH COURT  ORDERD TO PARTICIPATE   IN  CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 )   FOR B SERIES  TRB PG  TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT 



  முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு   நாளை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள    சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

Flash news:  MADRAS HIGH COURT  ORDERD TO PARTICIPATE   IN  CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 )   FOR B SERIES  TRB PG  TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT 



  முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு   நாளை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள    சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்


அருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவரும் இந்தத் தருணத்தில், அவரது தமிழாய்வு உணர்வு காரணமாக உருவான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (இண்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் தமிழ் ரிசர்ச்) தடுமாறிநிற்கும் நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இலங்கையில் பிறந்த தனிநாயக அடிகளார், எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர். ஆனால், தவறாமல் அவர் நினைவுகூரப்படுவது, இதுவரை நடந்து முடிந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளால்தான். இந்த மாநாடுகளை நடத்தியது உலகத் தமிழாராய்ச்சி மன்றமே. இந்த மாநாடுகளின் அரசியல் ஆரவாரங்களிடையே விளம்பரமே இல்லாமல் தமிழாய்வை முன்னிறுத்தின, இந்த மன்றம் நடத்திய ஆய்வரங்கங்கள். இப்படிப்பட்ட பெருமைக்குரிய மன்றம் இன்று செயலிழந்து முடங்கிக்கிடக்கிறது.

மன்றத்தின் தோற்றமும் அமைப்பும்

1964-ல் புது டெல்லியில் அனைத்துலகக் கீழையியல் ஆய்வறிஞர்களின் மாநாடு நிகழ்ந்தபோது, தமிழாய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்டது. 1930-களிலிருந்து திராவிட இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளில் மொழி மையம் கொண்டிருந்தது, இந்த மன்றம் உருவாவதற்கான வலுவான பின்னணியாக அமைந்தது. அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த மன்றம் பதிவுசெய்யப்பட்டது. இருந்தாலும், இதற்கெனத் தலைமை அலுவலகம் பாரிஸிலோ வேறு நாடுகளிலோ இல்லை. இதற்கெனத் தனி நிதியும் கிடையாது. உலக அளவில் பல தமிழியல் அறிஞர்கள் இந்த அமைப்பின் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

மன்றமும் உலகத் தமிழ் மாநாடுகளும்

உலக அளவில் தமிழ் மாநாடுகளை நடத்துவது தமிழாராய்ச்சி மன்றத்தின் முதன்மை நோக்கம். 1966-ம் ஆண்டு முதலாம் உலகத் தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் இந்த மன்றம் நடத்தியது. தொடர்ந்து, 1968-ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையிலும், 1970-ல் மூன்றாம் மாநாடு பாரிஸிலும், 1974-ல் நான்காம் மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், ஐந்தாம் மாநாடு 1981-ல் மதுரையிலும், ஆறாம் மாநாடு 1987-ல் மீண்டும் கோலாலம்பூரிலும், 1989-ல்ஏழாம் மாநாடு மொரீசியஸிலும், எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1995-ல் தமிழகத்தில் தஞ்சாவூரிலும் நடைபெற்றன.

நிர்வாகக் கட்டுப்பாடுகள்

இந்த மன்றம் மாநாட்டை நடத்துவதற்கு அந்தந்த நாட்டு அரசின் நிதியாதாரத்தைச் சார்ந்திருந்ததால், அதன் நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாநாட்டுச் செயற்பாடுகள் நடைபெற வேண்டிய கட்டாயமும், மாநாட்டை மூலதனமாக வைத்து ஆளும் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் நிலையும் தவிர்க்க முடியாத நடைமுறைகளாயின. அரசு அதிகாரிகளின் பெரிய அண்ணன் மனப்பாங்கும் இவற்றுக்கு ஒரு மாற்றும் குறைந்ததில்லை.1995-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாம் மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட 10 ஆண்டுகள் ஆனதும், அச்சடித்த 5,000 பக்கங்கள் கொண்ட 5 தொகுதிகளை வெளியிட்டு விநியோகிக்க ஐந்தாண்டுக் காலம் ஆனதும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இதற்குக் கொடுத்த விலை.

ஆளும் கட்சிகளின் அரசியல் ஆதாயம்

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத் தமிழ் மாநாடுகளும் அரசியல் லாபத்தை எதிர்நோக்கி நடத்தப்பட்டவையே. 1967-ல் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததைக் கொண்டாடும் விழாவாக சென்னையில் இரண்டாம் மாநாடு 1968-ல் நடைபெற்றது. 1981-ல் மதுரையில் நடந்த மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் நடந்த மாநாடும் அ.தி.மு.க-வின் அந்தந்தக் காலத் தேர்தல்களுக்குக் களம் அமைப்பதை எதிர்நோக்கி நடத்தப்பட்டன. மலேசியா, இலங்கை, பிரான்ஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதில் அந்தந்த நாட்டு அரசியல் கட்சிகளுக்கு உதவின.

எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் தலையீடு ஆய்வரங்க அமைப்பையும் பாதித்தபோது, தமிழாராய்ச்சி மன்றத்தின் கல்விசார் சுதந்திரம் கேள்விக்குறியானது. ஆய்வரங்கங்களில் பங்கேற்க வந்த இலங்கைத் தமிழறிஞர்களும், வெளிநாட்டு அறிஞர்களில் சிலரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளின் முன் தமிழாராய்ச்சி மன்றத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது.

தடுமாற வைத்த செம்மொழி மாநாடு

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாக அமைப்பைத் தடுமாற வைத்த பெருமையைக் கோவையில் நடந்த முதலாம் செம்மொழித் தமிழ் மாநாடு வாரிக்கொண்டது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை 2010 ஜனவரியில் நடத்தப்போவதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே தமிழக அரசு அறிவித்தது. 2009 செப்டம்பரில்தான் மன்றத்தின் தலைவரான நொபுரு கரஷிமாவுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உலகளாவிய மாநாடொன்றை நான்கே மாதங்களில் நடத்துவது சாத்தியமல்ல; குறைந்தது ஓராண்டுக் காலமாவது வேண்டும் என்ற கருத்து தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநாட்டை நடத்துவதற்கு இரண்டு முன்நிபந்தனைகளையும் மன்றம் வலியுறுத்தியது.

1. கிட்டத்தட்ட 5,000 பக்கங்களில் 5 தொகுதிகளாக அச்சிட்டு 2005-லேயே விநியோகத்துக்குத் தயாராக இருந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வேடுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

2. மாநாட்டின்போது ஆய்வரங்கங்களுக்கும் உடன் நிகழும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இடையே தெளிவான எல்லை வரையறுக்கப்பட வேண்டும்.

கருத்து மோதல்கள்

இந்த இரண்டு நிபந்தனைகளையும் தமிழக அரசு ஒப்புக்கொண்டாலும், அரசு முன்வைத்த தேதியை கரஷிமா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கரஷிமாவுக்கும் மன்றத்தின் துணைத் தலைவர்களான வி. சி. குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன் போன்றோருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.

குழந்தைசாமி, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேரின் ஒப்புதலைப் பெற்று மாநாடு நடத்துவதற்கான இசைவை அன்றைய தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்தார். தமிழாராய்ச்சி மன்றத்தின் ஏகமனதான ஒப்புதலின்றி உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்த அன்றைய முதலமைச்சர், உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பதிலாக முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் 2010, ஜூன் மாதம் அரசே நடத்தும் என்று அறிவித்தார். இந்த மோதல்களின் எதிரொலியாக, கரஷிமா மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

உலகத் தமிழ் மாநாடுகளின் எதிர்காலம்

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்தத் தடுமாற்றத்தின் காரணமாக உலகத் தமிழ் மாநாடுகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. உலகத் தமிழியல் ஆய்வறிஞர்களையும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களையும் ஒன்றுகூடவைத்த ஓர் உன்னதக் கூட்டமைப்பு முழுவதுமாகச் சிதைவுறும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருப்பது தமிழாய்வுக்கு ஏற்பட்டிருக்கும் துரதிர்ஷ்டம்.

எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழகத்தைத் தவிர, எந்த அயல்நாடும் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த இன்றுவரை முன்வரவில்லை. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களும் நிர்வாக மாற்றங்களும் ஒருபுறமிருக்க, தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் சமூக, அரசியல் பிரச்சினைகளும் இந்தத் தயக்கத்துக்கு முக்கியக் காரணங்கள்.

மாறும் ஆய்வுப் போக்கு

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தொடங்கி 50 ஆண்டு காலத்தில் தமிழாய்வின் போக்கும் இன்று மாறியுள்ளது. குறிப்பிட்ட துறைசார்ந்த அறிஞர்கள் கூடி ஆய்வுக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், உலக அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கூடத் தமிழியல் கருத்தரங்குகளை நடத்தலாம். தனிப் புலம்சார் பிரச்சினைகளைக் குவிமையமாகக்கொண்டு, தமிழாராய்ச்சி மன்றம் இந்தப் பணியில் முனைப்புக் காட்ட வேண்டும் என்னும் கரஷிமாவின் கருத்து சிந்திக்கத் தக்கது. உலகத் தமிழ் மாநாடு என்னும் உறுமீன் வருமளவு காத்திருந்து, காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணிகளைத் தள்ளிப்போடுவதை இந்தக் கருத்தரங்குகள் மூலம் தவிர்க்கலாம்.

புத்துயிரும் புதுப்பொலிவும்

இன்று தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம், மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இது தமிழியல் துறை சார்ந்த நேர்மையும் ஆளுமையும் மிக்க இளம் ஆய்வறிஞர்களின் தோள்மீது உள்ளது. அருட்தந்தை தனிநாயக அடிகளார்போல் இன்னொரு தமிழறிஞர் தலைமையேற்று இந்த மாமன்றத்தைத் தலைநிமிரச் செய்ய முன்வருவாரா?

சு. இராசாராம்,பேராசிரியர் (ஓய்வு), தொடர்புக்கு: subbiah_rajaram@yahoo.in

Tamil.thehindu 

கல்வி நிறுவனங்களுக்கு மானியம்: யுஜிசி நிபந்தனை



தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலான "நாக்' ஆய்வு செய்து தரச் சான்றளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மானியங்கள் அளிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பல்கலைக்கழகங்களும் இப்போது யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. யுஜிசி 2012 விதிமுறைகள் பிரிவு 7.1-இன் படி நாக் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றளிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்துக்கு மட்டுமே மானியங்களை வழங்குவது என கடந்த நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற யுஜிசி-யின் 496-வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, உயர் கல்வி நிறுவனங்கள் 2014 ஜூன் 1-ம் தேதிக்குள், ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதுவரை நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் படி தொடர்ந்து மானியங்கள் வழங்கப்படும்.

ஆய்வுக்கு விண்ணப்பிக்கத் தவறும் அல்லது அங்கீகாரம் பெறத் தவறிய கல்வி நிறுவனங்களுக்கு 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட்டு விடும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:

யூஜிசி மானியத்தைப் பெற கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளும் இனி "நாக்' அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.

ஏற்கெனவே, தேசிய அங்கீகார வாரியத்தின் (என்பிஏ) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள், அந்த அங்கீகாரம் காலாவதியானவுடன், "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

6 மண்டல மையங்கள்:

"நாக்' தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இந்த ஒரே அலுவலகம், நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளை தமது நான்கு (தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு, மேற்கு) மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன், கல்வி நிறுவனங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் அளித்து வருகிறது.

இந்த நிலையில், யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொடர் ஆய்வு மற்றும் சான்றளிக்கும் பணியை "நாக்' எளிதாகவும் விரைவாகவும் செய்யும் வகையில் நாடு முழுவதும் 6 மண்டல அலுவலகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.கல்வி நிறுவனங்களுக்கு மானியம்: யுஜிசி நிபந்தனை

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலான "நாக்' ஆய்வு செய்து தரச் சான்றளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மானியங்கள் அளிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் பல்கலைக்கழகங்களும் இப்போது யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. யுஜிசி 2012 விதிமுறைகள் பிரிவு 7.1-இன் படி நாக் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றளிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்துக்கு மட்டுமே மானியங்களை வழங்குவது என கடந்த நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற யுஜிசி-யின் 496-வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, உயர் கல்வி நிறுவனங்கள் 2014 ஜூன் 1-ம் தேதிக்குள், ஆய்வு மற்றும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதுவரை நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் படி தொடர்ந்து மானியங்கள் வழங்கப்படும்.

ஆய்வுக்கு விண்ணப்பிக்கத் தவறும் அல்லது அங்கீகாரம் பெறத் தவறிய கல்வி நிறுவனங்களுக்கு 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட்டு விடும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:

யூஜிசி மானியத்தைப் பெற கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் போல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளும் இனி "நாக்' அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.

ஏற்கெனவே, தேசிய அங்கீகார வாரியத்தின் (என்பிஏ) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள், அந்த அங்கீகாரம் காலாவதியானவுடன், "நாக்' அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

6 மண்டல மையங்கள்:

"நாக்' தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இந்த ஒரே அலுவலகம், நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளை தமது நான்கு (தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு, மேற்கு) மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன், கல்வி நிறுவனங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் அளித்து வருகிறது.

இந்த நிலையில், யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொடர் ஆய்வு மற்றும் சான்றளிக்கும் பணியை "நாக்' எளிதாகவும் விரைவாகவும் செய்யும் வகையில் நாடு முழுவதும் 6 மண்டல அலுவலகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள்


பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்ற பிற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.

யுஜிசி நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான "நெட்' தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். சென்னையில் 13 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மிராண்டா டாம்கின்ஸன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நெட்' தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

270 பார்வையற்றோர் பங்கேற்பு:

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நெட்' தேர்வில் தமிழகத்தில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றபோதும், வழக்கு தொடர்ந்த மிராண்டாவுக்கு மட்டும் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்கப்பட்டது.

இவர் தேர்வெழுதிய எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரி மையத்தில் தேர்வெழுதிய மற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.

அவர்கள் அனைவரும் வழக்கம்போல், உதவியாளர் ஒருவரின் உதவியுடனே தேர்வெழுதினர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பார்வையற்ற தேர்வர் கூறியது:

பிறரது உதவியுடன் தேர்வெழுதும்போது, தவறாக பதிலளிக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால்தான் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என மிராண்டா டாம்கின்ஸன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மிராண்டாவுக்கு மட்டுமே பிரத்யேக வினாத்தாள் வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, வரும் காலங்களில் பார்வையற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரெய்லி வினாத் தாள் வழங்க யுஜிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து யுஜிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தாலேயே வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கும் நிலை ஏற்பட்டது. வரும் காலங்களில் தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த வினாத் தாள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றார்.

தருமபுரி :பட்டதாரி ஆசிரியர்கள் 36 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப்  பதவி உயர்வு


தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 36 பேர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 46 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .இதில், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் 36 பேர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

இவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி ஆணைகளை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ், முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக பதவி உயர்வு பெற்றவர்களில், ஆங்கிலப் பாடத்தில் 6பேர், வரலாறு, வணிகவியல் தலா 2, பொருளியல் 9, தமிழ், வேதியியல், இயற்பியல் தலா 3, தாவரவியல், கணிதம் தலா 4 பேர் அடங்குவர்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில்
தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை,
நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.
அரசு அறிவிப்பின்படி, இந்த மாணவர்களுக்கான முதல் தவணை செப்டம்பர்மாதத்திலேயே
வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் மாதம் முடியும்
நிலையில் இதுவரை கட்டணத்தை அரசு வழங்கவில்லை என தனியார்
பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி,
தனியார் பள்ளிகளில்அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மற்றும் சமூகரீதியாக
நலிவடைந்தமாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான
கட்டணத்தை அரசே திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
 இந்த ஒதுக்கீட்டின் கீழ் நடப்புக் கல்வியாண்டில் (2013-14) மெட்ரிக் பள்ளிகளில்
18 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையின் கீழ்
செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கீழ்
செயல்படும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம்
49 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தனியார் பள்ளிகளுக்கு
கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணம் அல்லது அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு
மாணவருக்கும் ஆகும்செலவு இவற்றில் எது குறைவோ அந்தக் கட்டணத்தை இந்த ஒதுக்கீட்டின் கீழ்
சேரும் மாணவர்களுக்காக அரசு திருப்பி வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

 இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செப்டம்பர், ஜனவரி, ஏப்ரல் ஆகிய
மாதங்களில் மூன்று தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த மாணவர்களுக்கான கட்டணம் வழங்கப்படவில்லை.
இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் க
ே.ஆர்.நந்தகுமார் இது குறித்து கூறியது: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட
மாணவர்களுக்கு இதுவரை அரசு கட்டணத்தைத் திருப்பி வழங்கவில்லை. இந்த
ஆண்டுக்கான கட்டணத்தை வழங்கவில்லையென்றால், அடுத்த ஆண்டில் இந்த
ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

 இந்தக் கட்டணத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று தனியார் பள்ளிகளுக்கு
வழங்க பள்ளிக் கல்வித் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.10 கோடிக்கும்
அதிகமான தொகையைக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர்கூறும்போது, இந்தத்
தொகைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு
நிதியை வழங்கிய பிறகே,தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். இன்னும்
ஓரிரு மாதங்களில் அவர்களுக்கான கட்டணம் வழங்கப்படும் என்றார்.

நெட்' தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு


 கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின்
தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது. கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு, யு.ஜி.சி., சார்பில், தேசிய தகுதித்
தேர்வு (நெட்) நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இதில், 2 ம் கட்ட நெட் தேர்வு நேற்று நடந்தது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், ஜானகி எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட, 13 மையங்களிலும், தமிழகத்தில், 47
மையங்களிலும் இந்த தேர்வு நடந்தது. 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வில் கலந்து கொண்டனர்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

TNPSC GROUP I NOTIFICATION update


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1தேர்வுக்கானஅறிவிப்பு
 டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான,டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்.,26ம் தேதி நடக்கிறது. 
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் -0 33,உதவி இயக்குனர் 10 ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழுக்க முழுக்க ஆன்லைன்
முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஜன., 30ம் தேதி கடைசி நாள். முதல்நிலை தேர்வு ஏப்., 26ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு, அதில்கூறப்பட்டு உள்ளது.
1,Deputy Collector - 3,
2,Deputy Superintendent of Police - 33,
3 Assistant Commissioner - 33,
4.Assistant Director of Rural Development Department -10

Applications through online mode only

.last date28.01.2014
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION

ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு ஜனவரி, 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-
லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி, 5ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சி.பி.எஸ்.இ.,
வாரியத் தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார். ஐ.ஐ.டி.,
டிரிபிள் ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில்
சேர்வதற்கு, ஜே.இ.இ., முதன்மைத்
தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில்
கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆன்-லைனில்
விண்ணப்பிக்க, இம்மாதம் 26ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை,
பத்து லட்சத்திற்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளனர்;
கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால்,
விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, 12 லட்சத்தை எட்டும்,
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு



தமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி பெறுவோருக்கான பாடத்திட்டத்தில் மொழித்திறன், கணினித்திறன் மற்றும் மென்திறன் பயிற்சி குறித்த பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடங்களை பயிற்றுவிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங் களை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களுக்காக தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டவும், இந்த ஆய்வகங்களுக்குத் தேவை யான மென் பொருள் மற்றும் கணினி பொறிகள் வழங்கவும், பயிற்சி அளிக்க தேவையான பயிற்றுநர்களை நியமிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக, நாகலாபுரம், செக்கானூரணி, ஆண்டிப்பட்டி (மகளிர்), அரக்கோணம், திண்டுக்கல் (மகளிர்), புதுக்கோட்டை, திருப்பூர், மேட்டூர், தர்மபுரி, அரியலூர், திருச்செந்தூர், குன்னூர், விருதுநகர், வேலூர், திண்டுக்கல், தாராபுரம், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், வடசென்னை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கடலூர், கரூர் (மகளிர்), கடலூர் (மகளிர்), வேப்பலோடை, ராதாபுரம், அருப்புக்கோட்டை, திருவையாறு மற்றும் போடி ஆகிய 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வகங்களை அமைத்திட ஏதுவாக கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் மின் இணைப்பிற்கு 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இந்த ஆய்வகங்களின் உள்கட்டமைப்பிற்கென 5 கோடியே 72 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய், பயிற்றுநர்களுக்கான ஊதியமாக 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், இணையதளத்திற்கான மாதாந்திர கட்டணமாக 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வகங்களுக்காக 44 பயிற்றுநர் களை ஒப்பந்த அடிப்படை யில் நியமனம் செய்யவும் ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS UPDATE :ரூ.1லட்சம் லஞ்சம்  உடற்கல்வி இயக்குநர் கைது: முதன்மைக் கல்வி அலுவலர் மீதும் வழக்கு


நிர்வாகக் காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட உதவித் தலைமை ஆசிரியையின் உத்தரவை ரத்து செய்ய, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உடற்கல்வி இயக்குநரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புவனா (51), குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிர்வாகக் காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியத்தைச் சந்தித்து புவனா முறையிட்டுள்ளார். இதற்கு அவர் குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்

கல்வி இயக்குநர் கலையரசன் (42) என்பவரைச் சந்தித்துப் பேசுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வாரம் கலை யரசனைச் சந்தித்த புவனா, பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்வது தொடர்பாகப் பேசியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய ரூ.3.50 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளார். பேரத்தின் முடிவில் ரூ.3 லட்சம் வழங்க முடிவானது. பணத்தைக் கொடுக்க விரும்பாத புவனா, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புவனாவிடம் கொடுத்தனுப்பினார்.

வெள்ளிக்கிழமை இரவு ரூ.1 லட்சம் பணத்தை புவனாவின் வீட்டுக்கு வந்த கலையரசனை லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர்கள் பழனி, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லஞ்ச பணத்தில் ரூ.50 ஆயிரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கொடுக்க இருப்பதும் உறுதியானது.

இதையடுத்து, முதல் குற்ற வாளியாக கலையரசன், இரண்டாவது குற்றவாளியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியனின் பெயர் சேர்க்கப்பட்டது.

கைது செய்யப் பட்ட உடற்கல்வி இயக்குநர் கலையரசன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உறவினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கலையரசனை கைது செய்ததையடுத்து, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியத்தின் மீது ஏற்கெனவே வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் வரவு செலவு கணக்கு குறித்த ஆய்வு நடந்தது. அப்போது ஒவ்வொரு பள்ளிகள் சார்பில் கணக்குக் குழுவினருக்காக பணம் பெறப்பட்டது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் அங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, சுப்பிரமணி வேலூர் கல்வி மாவட்ட அலுவலராக இருந்தார்.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தனர். தற்போது இந்த வழக்குத் தொடர்பாக விரைவில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Source the Hindu

இதைப் படிக்கதவறாதீர்கள்...உங்கள் கனவுகளை மெய்ப்படுத்துவது எப்படி?



கலைஞர்கள் வறியவர்கள். செல்வம் சேர்ப்பதில் தோற்றுப் போனவர்கள். கலை விலை போகாது. நிஜமான கலை என்றால் அது வணிகத்திற்கு எதிரானது என்பது போன்ற கற்பிதங்கள் இங்கு புழக்கத்தில் உள்ளவை. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதிலும்.

தான் மடிந்து கலையை வாழவைத்த கலைஞர்களை காவியப்படுத்தி இருக்கிறோம். தோல்வியில் சுகம் கண்டிருக்கிறோம். ஒரு masochistic pleasure-ல் திளைக்கிறோம்.

சில நேரங்களில் அது எல்லை மீறி, வணிக வெற்றி பெற்றதாலேயே சில கலைஞர்களை உதாசீனப்படுத்தியும் இருக்கிறோம். பணம் பண்ணுபவன் எப்படி கலைஞன் ஆக முடியும்? ‘புரிகிற மாதிரி எழுதினால் அதை எப்படி சிறந்த இலக்கியம் என்று ஒப்புக்கொள்வது’ என்பது போல இது!

ஆனால் கலைஞனாகவும் இயங்கி செல்வமும் சேர்க்க முடியும் என்பதை பலர் நிரூபித்தும் அதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் உள்ளது. கலையை விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை செய்யணும் என்றாலே உடனே நாலாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் கொட்டும்: அதுல பணம் பண்ண முடியாது. பிராக்டிகலா யோசி. இது வாழ்க்கைக்கு உதவாது. லட்சியம் எல்லாம் பேச நல்லா இருக்கும். முதல்ல செட்டிலாக ஒரு வேலையை பிடிச்சிக்கோ. இதெல்லாம் எல்லாம் முடிஞ்ச பிறகு வெச்சுக்கோ.

கலை என்று இல்லை. மனதுக்கு பிடித்த எந்த வேலையும் (ஓ! அது தான் கலையோ?) ஆசைப்பட்டு செய்து, செல்வம் சேர்த்து சந்தோஷமாய் வாழலாம் என்கிறார் மார்க் ஆலன் The Millionaire Course புத்தகத்தில்.

ஒரு கலைஞனாய் வாழ்க்கையை வாழ தீர்மானித்து, பிறகு ஆன்மீகத் தேடலில் சில வருடங்கள் செலவிட்டு, எழுத்தாளனாய், பதிப்பாளனாய், வியாபாரியாய் அவதாரமெடுத்ததோடு, கலைஞனாய் தான் வேண்டுவன யாவும் பெற்ற கதை மார்க் ஆலனுடையது. அவர் எழுதிய இந்த புத்தகம் பணக்காரன் ஆவது எப்படி என்று சொல்வதை விட உங்கள் கனவுகளை மெய்ப்படுத்துவது எப்படி என்று சொல்கிறது. தலைப்பு ஒரு விற்பனை உத்தி தான்.

12 பாடங்கள். ஒவ்வொன்றும் நடைமுறைப்படுத்தக்கூடியவை. மிக எளிமையான மொழி. சொல்ல வருகிற விஷயத்தை விளக்க பைபிள், கீதை, ரமணர் உரையிலிருந்து ஸ்டீபன் கோவே, ஷக்தி கவைன், எகார்ட் டாலெ, தீபக் சோப்ரா என்று மிகச்சிலரின் வரிகளை சரியான இடங்களில் சேர்க்கிறார். தன் சொந்த வரிகளிலும் முக்கிய விஷயங்களை Keys என்று குறிப்பிட்டு மனதில் பதிய வைக்கிறார். மொத்தம் 163 சாவிகள். இந்த வடிவமைப்பு வாசிப்பை எளிமைப்படுத்துவதுடன் சுவாரசியப்படுத்துகிறது.

12 பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.

உங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஆதர்ஷ காட்சியை மனதில் பதிவு செய்யுங்கள். தன்னம்பிக்கை வார்த்தைகளில் அவற்றை உருவேற்றுங்கள். வெறும் கனவாக இல்லாமல், யதார்த்தம் போல நுணுக்கமாக காட்சிப்படுத்துங்கள்.

* உங்கள் திட்டத்தை மிக எளிமையாக எழுதுங்கள். யோசிப்பது நடக்காது. உட்கார்ந்து விரிவாக எழுதுவது நடக்கும்.

* உங்கள் தொழில் / வேலை எது என்பதையும் அதற்கான சரியான நோக்கத்தையும் தெளிவுபடுத்துங்கள்.

* உங்கள் நெருக்கடிகளில் தென்படும் அனுகூலங்களை பட்டியல் இடுங்கள். இவை தான் நம்பிக்கை தரும் பாடங்கள். வெற்றிக்கான சிந்தனைகள்.

* கூட்டணிதான் வெற்றி பெறும். எல்லாரிடமும் கூடி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்.

* நல்ல திட்டமும் வெளிப்படையான நிர்வாகமும் நெருக்கடிகளைக் குறைக்கும். நெருக்கடிகள் குறையும்போது தான் அந்த சக்தியை ஆக்கத்திற்கு செலவிட முடியும்.

* மாறுதல்களை நேசியுங்கள்.

* உங்கள் ஆதார நம்பிக்கைகளை அடிக்கடி ஆராயுங்கள். தேவைப்படும்பொழுது அவற்றை மாற்றத் தயங்காதீர்கள்.

* அளவற்ற, குறையா செல்வத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப அது என்றும் கிட்டும் என்று நம்புங்கள்.

* கொடுப்பதில் அளவு வேண்டாம். கொடுப்பதே பெருகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள்.

* ஆன்மிக தேடல் உதவும். பிரார்த்தனையும் தியானமும் கை கொடுக்கும்.

* பிடித்ததை செய்யுங்கள். வெற்றி கிட்டும். உங்களுக்கும் உலகத்திற்கும்.

இவை பொது அறிவுரைகள் போல தோன்றினாலும் ஒவ்வொரு பாடமும் ஒரு அறிவியல் விளக்கப் பாடம் போல சொல்லப்படுகிறது.

செல்வம் மனப்பான்மை சார்ந்தது என்பதைச் சொல்லும் புத்தகங்கள் புதிதல்ல. நெப்போலியன் ஹில் இதன் பிதாமகர். செல்வந்தர் ஒவ்வொருவராய் பேட்டி கண்டு அவர்களின் எண்ணங்கள். வாழ்க்கை முறைகள், முடிவு எடுக்கும் திறன்கள் போன்ற உளவியல் சமாச்சாரங்களை எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதினார். அது பல வெள்ள மடைகளைத் திறந்து விட்டது.

இதற்கும் முன்னர் நம் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கை என எழுதி ஆங்கில “சுய உதவி” இலக்கியத்திற்கு வித்திட்டவர் ஜேம்ஸ் ஆலன்.

(இவர் இந்த நூலாசிரியர் மார்க் ஆலனுக்கு உறவினர் அல்ல!)

1904-ல் As a Man Thinketh என்று அவர் எழுதிய புத்தகத்தின் தாக்கம் இல்லாமல் இது வரை ஒருவரும் எழுதவில்லை. இந்த புத்தகமும் அதற்கு விதி விலக்கில்லை.

ஆனால் இந்த புத்தகத்தை நான் பரிந்துரை செய்யக் காரணம் இதன் தொனி. ஒரு நண்பனின் குரல் போல ஒலிப்பது. பிரசங்கம் இல்லை. பாசாங்கு இல்லை. சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் வலு சேர்க்கின்றன. இந்த பாடங்களால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் என அவர் சொல்லும் விஷயங்கள் யாவும் நமபத்தகுந்தவை.

அதுபோல வடிவமைப்பும் விற்பனை உத்திகள் கொண்ட மொழியும் ஒவ்வொரு எழுத்தாளனும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியவை. யாருக்கு இல்லை பணம் பண்ணும் ஆசை? பிடித்ததை ஆசையுடன் செய்து அதில் வசதியும் புகழும் செல்வமும் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்? எம். எஃப். ஹுசைனும், அமீர்கானும், விக்ரம் சேத்தும், பிரணாய் ராயும், டெண்டுல்கரும், ஏ.ஆர். ரஹ்மானும் கலை, காசு இரண்டிலும் சாதிக்கவில்லையா?

மார்க் ஆலனாலும் இவர்களாலும் முடிந்தது உங்களாலும் என்னாலும் முடியாதா என்ன?

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு: தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றருந்தால் காலியிடங்களுக்கு ஏற்பகுறிப்பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். முதுகலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில், நேரடி நியமனம் என்றால் இளநிலை, முதுகலை இரண்டு பட்டப் படிப்பிலும் குறிப்பிட்ட பாடத்தைப் படித்து பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பதவி உயர்வு நியமனத்தில், பி.எட். தகுதியுடன் சம்பந்தப் பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். பட்டப் படிப்பில் அவர்கள் எந்த படிப்பும் படித்திருக்கலாம் (கிராஸ் மேஜர்). உதாரணத்துக்கு பி.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அறிவியல் ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் படித்திருந்தால் அவர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்.

இந்த பதவி உயர்வில், அறிவியல் படிப்புகளுக்கு (இயற்பியல், வேதியி யல், விலங்கியல்) மற்றும் கணித படிப்புக்கு கிராஸ் மேஜர் அனுமதி இல்லை. ஆனால், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் கிராஸ் மேஜர் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள். வணிகவியல், பொருளாதார முதுகலைப் பாடங்களில் 3:1 என்ற விகிதாச்சாரமுறையும் கடை பிடிக்கப்படுகிறது.

அதாவது, 3 இடங்கள் கிராஸ் மேஜர் பட்டதாரிகளுக்கும் ஒரு இடம் இளங்கலை, முதுகலை இரண்டும் ஒரே பாடத்தில் படித்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்று கிறார்கள். ஒரு காலியிடம் கிராஸ் மேஜர் பட்டதாரிக்கும் ஒரு இடம் இளநிலை, முதுகலை இரண்டிலும் தமிழோ அல்லது ஆங்கிலமோ படித்தவர் களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இதனால், ஒரே பாடத்தில் இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கணக்கு,அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடப்பிரிவில்   முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடன்களுக்கு  பதவி உயர்வு பலனை முழுமையாக  அனுபவிப்பதுடன்   தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல்   பாடங்களிலும் பதவி உயர்வு வாய்ப்புபெறும் நிலை உள்ளது.

அறிவியல் பாடங்களுக்கான பதவி உயர்வில் மட்டும் கிராஸ் மேஜர் முறை இல்லாதபோது மொழிப்பாடத்திலும், வணிகவியல், பொருளாதார பாடங் களில் மட்டும் இந்த முறையை அனு மதிப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது:-

தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேவையான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத காலத்தில் இதுபோன்ற பதவி உயர்வு உத்தரவு போடப்பட்டது. ஆனால், தற்போது இந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிகமாக உள்ளனர்.

அப்படியிருக்கும்போது இன்னும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது முரண்பாடாக இருக் கிறது. இளங்கலை வேறு பாடத் தையும் முதுகலை வேறு பாடத்தையும் படித்த ஆசிரியர்களைக் காட்டிலும் இரண்டு படிப்பிலும் ஒரே பாடத்தை படித்துள்ள ஆசிரியர்களுக்கு பாட அறிவு ஆழமாக இருக்கும் என்றார்.

ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய,உடற்கல்வி ஆசிரியர் கைது


 வேலூரில், ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய,உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். வேலூர்மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த, கேமராயன்
பேட்டையைச் சேர்ந்தவர், புவனா. இவர், குடியாத்தம்,நெல்லூர் பேட்டை அரசினர் உயர் நிலைப் பள்ளியில்,ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரை, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளிக்கு,இடமாறுதல் செய்து, உத்தரவிடப்பட்டது.
பள்ளிக்கு போய் வர சிரமம் ஏற்படுவதாக, பல்லாங்குப்பம்அரசு உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும், ஏரி குத்தியைச் சேர்ந்த, கலையரசன்
என்பவரிடம், புவனா கூறியுள்ளார்."தனக்கு கல்வித் துறையில் உயர் அதிகாரிகளையும்,
கல்வித்துறை அமைச்சரையும் தெரியும் எனவும், மூன்று லட்ச ரூபாய் இருந்தால் மட்டும், முன் பணியாற்றிய பள்ளிக்கே, இடமாறுதல் வாங்கித் தருவதாகவும்' புவனாவிடம், உடற்கல்வி ஆசிரியர் கலையரசன் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த புவனா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, ஒரு லட்ச ரூபாய் பணத்தை, உடற்கல்வி ஆசிரியர் கலையரசனிடம், புவனா கொடுத்தார்.மறைந்திருந்தபோலீசார்,கலையரசனை கைது செய்தனர்

பழமையான 4 வேதங்களும் "தமிழி' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன


பழமையான 4 வேதங்களும் "தமிழி' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன.
அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ
நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி
அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன்
இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான
கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்
வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில் வேதஸ்ரீ தலைவர்
பி.வி.என்.மூர்த்தி பேசியது: பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில்
எழுதப்படவில்லை. அவை "தமிழி'
என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த
அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய
போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத
அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த
போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான்
இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். வேதங்கள் இயற்றப்பட்ட
காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில்
எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக
அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள
முடியவில்லை. சங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர விஞ்ஞானம்,
கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான
மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.
மேற்கத்திய அறிஞர்களான பித்தாகரஸ், டார்வின், ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின்,
பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நம் இலக்கியங்களில்
சொல்லப்பட்டுள்ளன. மேலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற
புராணங்களும் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.
இவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம்
ஏற்கனவே விளக்கி விஞ்ஞானப் புத்தகங்களாக தயாரித்துள்ளது.
இதனை கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால்
இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.

இந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன்
தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்
தலைமை வகித்தார். இதில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்
குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு


தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவிலான போட்டி இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவ– மாணவியர்களுக்கு இடையே மாநில அளவிலான போட்டிகள் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 27–ந் தேதி (நேற்று) அன்று நடத்தப்பட்டது.
 விழா நிகழ்ச்சி மாநில போட்டிக்கான நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சு.தம்புசாமி வரவேற்புரை ஆற்றினார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் முன்னிலை உரையும், சென்னை பொதிகைத் தொலைகாட்சி நிலைய இயக்குநர் பால ரமணி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரையும் நிகழ்த்தினர். தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், வெற்றி பெற்ற மாணவ– மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கோ.செழியன் நன்றி தெரிவித்தார். 
பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பள்ளி முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ச.சரண்யா முதலிடத்தையும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவி ரா.பூமணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் சி.பூவரசன் மூன்றாம் இடத்தையும் வென்றனர். 

 கட்டுரை போட்டியில் மதுரை ஜோதி மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ச.பவித்ரா முதலிடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ர.வித்யா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவன் கெ.சச்சின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
 பேச்சு போட்டியில் புதுக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி மு.பு.லாவண்யா முதலிடத்தையும், பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் சி.அலிமுதீன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் தர்ம வாவன விநாயகர் மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் மு.லெனின்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 கல்லூரி மாணவர்கள் 
மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாமாண்டு மாணவி ரா.நீலாவதி முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பூ.ரஞ்சிதா இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி மாணவன் க.கலைவண்ணன் மூன்றாம் இடத்தையும் வென்றனர். 
கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவன் ரா.கண்ணன் முதலிடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவனைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி சுவாதி பிரியா இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் மாவட்டம் கொல்லியங்குணம் பவுட்டா கலை மற்றும் அறிவியல் மாணவி கோ.சாந்தகுமாரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 
 பேச்சுப் போட்டியில் திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி க.அபிதா முதலிடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவன் க.ஆதிலிங்கம் இரண்டாம் இடத்தையும், திருவாரூர் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் ரா.கார்த்திக் ராஜா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜாதி சான்றிதழ் பிரச்னையால் ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்': மின் வாரிய நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


ஜாதி சான்றிதழ் குறித்து, 16 ஆண்டுகளாகஎந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஓய்வு பெறும்
நாளில், பெண் ஊழியரை, "சஸ்பெண்ட்' செய்த, தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை,சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. "சஸ்பெண்ட்'உத்தரவை, ரத்து செய்து உத்தரவிட்டது. 
மின்சார வாரியத்தில், கணக்கீட்டாளராக, அமுதா என்பவர்,பணியில் சேர்ந்தார்.ST சமூகமான,கொண்டா ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என, 1981ல்,ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார்; ஆனால், "அந்த சமூகத்தை அவர் சாரவில்லை' எனக்கூறி, மின்
உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, திருச்சி கலெக்டர், 1986ல், அறிக்கை அனுப்பினார்.அதற்கு முன், அமுதா தரப்பில், எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில்,அமுதா மனுத்தாக்கல் செய்தார். கலெக்டரின்
உத்தரவை ரத்து செய்து, புதிதாக விசாரணை நடத்தி,சரிபார்க்கும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மின் கணக்கீட்டாளராகபணியில் சேர்ந்த, அமுதா,சிறப்பு நிலை அந்தஸ்துக்கு உயர்ந்தார். கடந்த,மே மாதம், பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.பணி ஓய்வு பெறும் நாள் அன்று, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை, பணியில் இருந்து ஓய்வு பெற, வாரியம் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், அமுதா மனுத்தாக்கல் செய்தார். முழு பென்ஷன் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் வழங்கவும் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுதாகர், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: 
மனுதாரரின் ஜாதி குறித்து விசாரணை நடத்துமாறு, மாவட்ட கலெக்டர், வருவாய் அதிகாரிகளுக்கு,1997ல், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த, மே மாதம் வரை, இதுகுறித்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமுதாவின் ஜாதி சான்றிதழ் குறித்து ஆராய, மாவட்ட அளவிலா விஜிலன்ஸ் குழுவையும், மின் வாரியம் அணுகவில்லை. கடந்த, 16 ஆண்டுகளாக,தூங்கி கொண்டிருந்து விட்டு, பணி ஓய்வு பெறும் நாளில், அமுதாவை, "சஸ்பெண்ட்' செய்துள்ளனர். வாரியம் செய்த தவறை, அதற்கு சாதகமாக எடுத்துக் கொள்ள, அனுமதிக்க முடியாது. பணி ஓய்வு பெறும் நாள் வரை,ஜாதி சான்றிதழ் ரத்து செய்யப்படவில்லை. ஊழியரின் ஜாதி சான்றிதழில் உண்மையில்லை என, நிர்வாகம் கருதினால், அதுகுறித்து, உரிய அதிகாரியிடம் பிரச்னையை கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் ரத்து செய்த பின், அந்த ஊழியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உரிமை,
நிர்வாகத்துக்கு வருகிறது. எனவே, அமுதாவை, "சஸ்பெண்ட்' செய்து பிறப்பித்த உத்தரவு,
ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு, முழு பென்ஷன் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதேநேரத்தில், மாவட்ட கலெக்டரின் விசாரணைக்கு அனுப்புவதற்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, இந்த உத்தரவு குறுககே நிற்காது
 இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது

 தமிழகத்தைச் சேர்ந்த, 10 அதிகாரிகளுக்கு,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து


 தமிழகத்தைச் சேர்ந்த, 10 அதிகாரிகளுக்கு,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ஆட்சிப் பணிக்கு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மாநில அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள், தேர்வு செய்யப்படும் நடைமுறையின்படி, தமிழக அரசுப் பணிகளில் உள்ள, தகுதி வாய்ந்த அதிகாரிகள், 2012, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு பிரிவு ஒதுக்க வேண்டும் என,ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அதிகாரி மலர்விழி,தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார்,கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, கோவை மாவட்ட, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு,
முதுநிலை மண்டல அதிகாரி பிரபாகரன்,சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் லட்சுமி, ஆவின் இணை நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி, சென்னை மண்டல, "டாஸ்மாக்' முதுநிலை மேலாளர் கந்தசாமி, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், சேலம் ஆவின் தனி அதிகாரி கதிரவன், முதல்வர் தனிப்பிரிவு அலுவலக அதிகாரி இன்னசென்ட்
திவ்யா ஆகியோர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றுள்ளனர்."ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெறாமல், மாநில அரசு அதிகாரிகளாக பணிபுரிந்து, ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து பெற விரும்புவோருக்கு, தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு மட்டும்,ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்படும்' என, மத்தியஅரசு அறிவித்துள்ளது. ஆனால், இப்புதிய அறிவிப்பு,எந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என,அறிவிக்கப்படவில்லை. எனவே, தற்போது, ஐ.ஏ.எஸ்.,
அந்தஸ்து பெற்ற, 10 அதிகாரிகளும், தேர்வு இல்லாமல், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்று விட்டனர்.

முப்பருவ கல்வி முறை பிளஸ்1 வகுப்பிற்கு வருமா?


'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல்,பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும்,முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்தவேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது.
 
 தனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில்,பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100
சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன. வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரியபாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம்,மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம்
ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற
விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித்
துறை கருதுகிறது.
 அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை.முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும்,
முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும். அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ
கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

 பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.

நாளை நடைபெறும் தேசிய தகுதி தேர்வில் பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி’ முறை வினாத்தாள் வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


விரிவுரையாளர் பணியிடத்துக்கு Dec  29–ந் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வின்போது, பார்வையற்றவர்களுக்கு ‘பிரைலி‘ முறை கேள்வித்தாள்களை வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் மிராண்டா டாம்கின்சன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தேசிய தகுதி தேர்வு நான் எம்.ஏ. சமூகவியல் மற்றும் எம்.ஏ. பொதுநிர்வாகம் ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளேன். கல்லூரி விரிவுரையாளர் பதவிக்காக பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) நடத்தும் தேசிய தகுதி தேர்வு எழுத உள்ளேன். நான் பிறக்கும்போதே, கண் பார்வையில்லாமல், காது சரிவர கேட்காமலும் பிறந்தேன். இதனால், ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கினால், தேர்வு எழுத எனக்கு வசதியாக இருக்கும். கடந்த ஜூன் மாதம் தேசிய தகுதி தேர்வினை யூ.ஜி.சி நடத்தியபோது, பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வழங்கப்படவில்லை. இதனால், நான் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
 இதனால் ‘பிரைலி‘ முறை கேள்வி வழங்கும்படி, யூ.ஜி.சி.க்கு பல முறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தும், பதில் இல்லை. கண் பார்வை இல்லாமல், காது சரிவர கேட்காமல் இருந்தாலும், விரிவுரையாளர் பணி செய்து, இந்த சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறேன்.
 மேலும், மத்திய சமூக நீதித்துறை கடந்த 26–2–2013 அன்று அலுவலக குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பிரைலி முறையில் தேர்வு எழுத வசதி செய்து தரவேண்டும். அவர்களுக்கு தேவையான கூடுதல் நேரத்தையும் வழங்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை பிறப்பித்துள்ளது. எனவே வருகிற டிசம்பர் 29–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தேசிய தகுதி தேர்வில், பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்களை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
 இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:– தேசிய தகுதி தேர்வு வருகிற டிசம்பர் 29–ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் மனுதாரர் மட்டுமல்லாமல், அவரை போல் பார்வை இழந்தவர்களுக்கு ‘பிரைலி‘ முறையில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளை வழங்கவேண்டும் என்று யூ.ஜி.சி.க்கு உத்தரவிடுகிறேன்.  இதன் மூலம் மனுதாரர் மற்றும் அவரை போன்ற மாற்றுத்திறனாளிகள் எளிதாக தேர்வு எழுத முடியும். ஒருவேளை இந்த வசதியை யூ.ஜி.சி. அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்றால், அந்த செயல் தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் பாகுபாட்டை உருவாக்கும் விதமாக உள்ளது என்று தெளிவாகி விடும். மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்களை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக் கொண்டு, அவர்களை இங்கும் அங்கும் அலையவிடாமல் தேவையான உதவிகளை செய்துக்கொடுக்கவேண்டும். இந்த வழக்கு இறுதிகட்ட விசாரணைக்காக வருகிற ஜனவரி 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கை விசாரணை பைசல் செய்யும்வரை, தேசிய தகுதி தேர்வின் முடிவுகளை வெளியிடாமல், நிறுத்தி வைக்கவேண்டும்.
 இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

சனி, 28 டிசம்பர், 2013

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு


 முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு,இன்று(Dec 28)  நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள்வழங்கப்பட்டன.பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், இன்று,கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர்.இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.பதவி உயர்வு இடம்,எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில்இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31,வேலூரில், 47, சேலத்தில், 48 பேர்,பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில்,ஐந்து காலி பணியிடங்கள்மட்டுமே இருந்தன.கலந்தாய்வில், 26 பேர்,பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர்,பதவி உயர்வை புறக்கணித்தனர்

விரிவான செய்தி:முதுகலை தமிழாசிரியர் தேர்வு- மீண்டும் வழக்குகள்


அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில்  தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

 தேர்வு எழுதிய அன்றே தமிழ்பாடத்தில் 40–க்கும் மேற்பட்ட வினாக்கள் சரியாக தெரியவில்லை. வினாத்தாள் சரியாக அச்சாகவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதன்காரணமாக தமிழ் பாடத்திற்கு உரிய முடிவு தவிர மற்ற பாட முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 7– ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்தபடி இருந்தனர்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது.நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்   தேர்வு முடிவினை வெளியிட அனுமதி  அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு   அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை ஒத்திவைத்தனர்

 இந்த நிலையில் மாலை தமிழ் பாடத்திற்குரிய முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 23.12.13  அன்று வெளியிடப்பட்டது.Dec 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய தேர்வு இடங்களில் 605 பணியிடங்களை நிரப்ப 694 பேருக்குசான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது

 இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி நடத்தப்பட உள்ளது. ஒரே மதிப்பெண்ணை பலர் எடுத்திருப்பதால் ஒரே மதிப்பெண் பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டதால் வேலைக்கு உத்தரவாதம் என்று யாரும் நினைக்கக்கூடாது. இந்த பட்டியல் தற்காலிகமானதுதான். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் இறுதி பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்  என ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேர்வு முடிவு வெளியிடப்படும்போது பி வரிசை வினாத்தாள் குளறுபடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த தேர்வர்களுக்கு அவ்வாறு எவ்வித தீர்வும் வழங்கப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் வேலூர் திருவண்ணாமலை தருமபுரி  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரீரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்த பலர் இதுகுறித்தும், பிழையான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகமுடிவு செய்துள்ளனர். தற்போது  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அவசரவழக்காக 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் அவை 30. 12 1013 அன்று நீதியரசர் வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மதுரை கிளையிலும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு  வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள (  TO IMPLEAD IN WA(MD).1089/2013 and WA(MD).1090/2013 ) வழக்குரைஞர்கள் பொன்ராம்குமார்,சங்கர் ஆகியோர் மனுதாரர் சர்பில் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளனர் இது விடுமுறைக்கால நீதிபதிகளான பிரகாஷ்,மகாதேவன் ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் டிசம்பர் 30 அன்று விசாரணைசெய்யப்படவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், பலர் ஓரிரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்துள்ளனர் ஏற்கனவே வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு   21 கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளாதால் அதேபோல் பாதிப்படைந்துள்ள  பலருக்கும் நீதிமன்றத்தால் தீர்வுகிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்

 
.

TRB PG TAMIL FLASH NEWS



முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு :கருணை மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளையில் மேலும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன  விரிவான செய்தி விரைவில்....

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு உத்தரவு


மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச்செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள்,குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார். 

இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில்மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார். யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன

மாவட்ட கல்வி அதிகாரியாக, பெண் ஒருவரை தேர்ந்தெடுத்ததில், எந்த முறைகேடும் இல்லை' என, சென்னை உயர்நீதிமன்றம்


மாவட்ட கல்வி அதிகாரியாக, பெண் ஒருவரை தேர்ந்தெடுத்ததில், எந்த முறைகேடும் இல்லை' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 19,காலியிடங்கள் ஏற்பட்டன. இதில், நான்கு இடங்கள்,பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2007ல், இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு,நேர்முகத் தேர்வுக்குப் பின், மாவட்டகல்வி அதிகாரியாக, மகேஸ்வரி என்பவர்,தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தேர்வை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், வேலு என்பவர், மனு தாக்கல்செய்தார். மனுவை தள்ளுபடி செய்த, உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "மகேஸ்வரி தேர்ந்தெடுக்கபட்டு, நியமிக்கப்பட்டதில், எந்த முறைகேடும் இல்லை;இடஒதுக்கீடு சுழற்சி0 முறை, சரியாகபின்பற்றப்பட்டுள்ளது' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், அப்பீல் மனுவை,வேலு தாக்கல் செய்தார்.
மனுவை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.மகாதேவன் அடங்கிய,"டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல்
அரசு பிளீடர், ஆர்.ரவிச்சந்திரன், அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், வழக்கறிஞர் நிறைமதி,மகேஸ்வரி சார்பில், வழக்கறிஞர், எம்.செல்வம்
ஆஜராகினர். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பெண்களுக்கான இடஒதுக்கீடு மட்டுமல்லாமல், ஜாதி இடஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீடு செய்வது என்பது, அந்த இடங்களில்,அவர்களை நியமிப்பதற்கு தான். பெண்கள் இல்லை என்றால், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆணை, சுழற்சி முறையில்
பரிசீலிப்பதாக, தேர்வு நடைமுறையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வரிசைப் பட்டியலைப் பார்க்கும்போது,மகேஸ்வரி என்பவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண் பட்டியலில், முதலாவது வருகிறார். அவரது நியமனம்சரியானது தான். சமூகத்தில், பெண்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக தான், அவர்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீட்டை, அரசு கொண்டு வந்தது. பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான, அரசின்
கொள்கை முடிவில், எந்த பாரபட்சமும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இதை, இரட்டை ஒதுக்கீடாககருத முடியாது. எனவே, மகேஸ்வரியை தேர்ந்தெடுத்ததில், எந்த முறைகேடும் இல்லை. "அப்பீல்' மனு,தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Source dinamalar

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!


பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்அலுவலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் உறுதிமொழியின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாகதிடீர் அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சங்க மாநிலத்தலைவர் பால்ராஜ் கூறுகையில்,
"" இரண்டாம் கட்ட போராட்டத்திற்கு பின், கடந்த 19 மற்றும் 26ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசினர். இதில்,அமைச்சு பணியாளர்களுக்கு இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்கள் உருவாக்குவது, இணை
இயக்குநர்களுக்கு நேர்முக உதவியாளர்பணியிடங்கள் உருவாக்குதல், ஆறு வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்த அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், mஅவசர தாபல்களுக்கு போதிய அவகாசம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளுக்கு உறுதி அளித்துள்ளனர்.இதை தொடர்ந்து, மாநில அளவிலான போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்,'' என்றார்.

நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில்  நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை


நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி,பதவி உயர்வு செய்ய வேண்டும்' என,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன்,பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில்,முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித்
துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும்,கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற முடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25சதவீதத்தை, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி,பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில்
கூறியுள்ளார்.
 தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே,இரு தேர்வுகளிலும், அவர்கள் பங்கேற்கலாம்.பட்டதாரி ஆசிரியர், அதிகளவில்தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு,முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர,வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம்
பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்வு மையம்


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு,உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள, தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க,வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
மத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம்
வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு,கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்பஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள, எட்டாம்வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் தேர்ச்சி அடைய,எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், பிப்., 22 ல், திறன்gதேர்வு நடக்க உள்ளது.  கடந்த ஆண்டு வரை,மாவட்டத்திற்கு இரண்டு மையங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர் gஎண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வில் அதிக அளவில்மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது


ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க,கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்;பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

வெள்ளி, 27 டிசம்பர், 2013

தருமபுரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வு கலந்தாய்வில் இடம்பெற்றுள்ள   ஆசிரியர்கள் விவரம்


தமிழகம் முழுவதும் உள்ள 897 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
வட்டார வள மையங்களில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்த 47
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
நிலையில் இருந்த 17 ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் அரசு மேல்நிலைப்
பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்
டிசம்பர் 28-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைன் மூலம் நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வும் நடைபெறும்
என அவர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில்.   டிசம்பர் 28-ம் தேதி காலை 9 மணிக்குநடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வு கலந்தாய்வில்பாடவாரியாக இடம்பெற்றுள்ள பட்டதாரி  ஆசிரியர்கள் எண்ணிக்கை வருமாறு
இயற்பியல்     -7
கணக்கு       -4
விலங்கியல்b    -3
தாவரவியல்    -5
வேதியியல்     -3
தமிழ்         -2
பொருளியல்   -9
வணிகவியல்   -3
வரலாறு       -3
ஆங்கிலம்      -6

என 46 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

டிட்டோஜாக் கூட்டம் முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டது


சென்னை, திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம்நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன.  கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தவிர்த்த பிற சங்கங்கள் அனைத்தும் பேரணி நடத்தலாம்என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும் கூறின. ஆனால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டும்ஏற்கனவே ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என அனைத்தும் நடத்தி விட்டோம் எனவும், இனி மாவட்ட அளவில் போராட்ட ஆயத்தக்கூட்டம் நடத்திவிட்டு அடையாள வேலைநிறுத்தம் அல்லது தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளலாம்எனக் கூறியது.  பிற இயக்கங்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி பாதியிலேயே வெளியேறியது.

 மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டது. வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் வெளியேறிய  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு DETAILS


01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02 
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண்  1 முதல் 23 வரை

கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்


வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக
சென்னையில்இன்று பயிற்சி தொடங்குகிறது.
நெடுந்தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்கள், மலைப் பிரதேசங்கள் ஆகியபகுதிகளில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் வீடியோ கான்பரசிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது.முதற்கட்டமாக 8 மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் சிரமமான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில  பள்ளிகளில் இது போலவீடியோ கான்பரன்சிங் திரைகள் அமைக்கப்படுகிறது. இதற்காக 7 டிவைஸ்கள்,
இணைய தள வசதி, மைக்ரோ போன்கள், வெப் கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படி இயக்குவது என்பது குறித்து நடுநிலை,உயர்நிலை, மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் நான்கு இடங்களில் நடக்க உள்ளது. முதற்கட்டமாகசென்னை சூளை மேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று பயிற்சி தொடங்குகிறது.இந்தபயிற்சியில் 200 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பயிற்சிக்கு பிறகு ஜனவரி மாதத்தில்இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் நடத்தப்படும்

தாத்தா - பாட்டியைக் கொண்டாடுவோம்


கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் எனது மகளின் பள்ளிக்கூடக் காலத்து பழைய சேகரிப்புகளில் பழைய அடையார் டைம்ஸ் செய்தித்தாள் ஒன்று கண்ணில் பட்டது. அதில் ஒரு புகைப்படத்தில் எனது மாமனார். அருகே எனது மாமியார். தாத்தா-பாட்டிகள் தினக் கொண்டாட்டம் பற்றிய புகைப்படச் செய்தி அது. பொதுவாக, பெற்றோர் தினம் அனுசரிக்கும் பள்ளிகளிடையே, பெற்றோரின் பெற்றோரை அழைக்கும் அந்த நடைமுறை எங்களை மிகவும் வசீகரித்தது. நமது பள்ளி நாட்களில் இப்படி தாத்தா-பாட்டியைக் கௌரவிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதே என்று மனம் பழைய நினைவுகளில் நீந்தியது.

தாத்தாவிடம்தான் படிப்பேன்

இளமைக் காலத்தின் சில நினைவுகளை யாராலும் மறக்க முடியாது. எனது பாட்டனார் வீட்டு முற்றத்தின் தூண் ஒன்றைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “வர மாட்டேன்” என்று நான் அடம்பிடித்த காட்சி, ஒரு புகைப்படம்போல் இன்றும் நெஞ்சில் உறைந்திருக்கிறது. தன்னுடன் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று எனது தந்தை என்னை வற்புறுத்தவும், முடியாது என்று நான் அழுதுபுரளவும், “குழந்தை இங்கேயே இருந்து படிக்கட்டுமே, விட்டுருப்பா” என்று என் தாய்வழி தாத்தா கேட்டுக்கொண்ட குரல்கூட இன்னும் என் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இரண்டாம் வகுப்பு பாதியில் வேறு வழியின்றி எனது தந்தையுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த நான், மீண்டும் எட்டாம் வகுப்பு சமயத்தில் தாத்தா வீட்டுக்குத் திரும்பினேன். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார்.

சால்வையாக இருக்கும் தாத்தா

தாத்தா, பாட்டி வீடு என்பது உள்ளபடியே குழந்தைகளுக்கு வேறு உலகம்! இப்போதுகூட ஏதாவது சால்வை அல்லது போர்வை ஒன்றை எடுத்துப் போர்த்திக்கொள்ளும்போது, என் தாத்தாவின் கதகதப்பு எனக்குள் ஓடுவதாக உணர்வதுண்டு. அவரது பச்சை நிற சால்வைக்குள் எனக்கும் இடம் இருந்த இள வயதில், பக்த ராமதாஸ் கதை அவரது கம்பீரமான குரலில் ஓடும்.

மார்கழி மாதக் குளிர் தாத்தாவின் அரவணைப்புக்குள் என்னைச் சிறைப்படுத்திக்கொள்ளவே வருவதுபோல் எனக்குத் தோன்றும். அத்தனை திருப்பாவை பாசுரங்களும் அவரது குரலில் எனக்குள் பதிவான குழந்தைப் பருவம் அது. நல்ல உயரமான மனிதரான அவர் வாலாஜாபாத் வீதிகளில் கம்பீரமாக இறங்கி நடந்து செல்லும்போது, அவர் உயரே பிடிக்கும் குடையின்கீழ் ஒரு முயல் குட்டி மாதிரி ஒடுங்கி, அவரது வேட்டி முனையைப் பிடித்துக்கொண்டு எனது ஒன்றாம் வகுப்பின் அறைக்குப் போன காட்சிகூட இன்னொரு புகைப்படம்தான் நெஞ்சில்! அந்த உயர்நிலைப் பள்ளியின் மதிப்புமிக்க தலைமை ஆசிரியராக இருந்தவர் எனது பாட்டனார்.

ரயில் சந்திப்பு வீடு
எட்டாம் வகுப்பில் என்னை அவர் விட்டுச்சென்ற இடத்தை முழுமையாகவும் அதற்கு மேல் இரண்டு பங்குமாக நிரப்பியவர் எனது பாட்டி. அதிகம் படித்தவள் அல்ல. ஆனால், தாத்தா வாங்காது விட்டுச்சென்ற ஓய்வூதியத்தை, அரசு அலுவலகங்களின் மூர்க்கமான மனிதர்களுக்கு எதிராகச் சளைக்காது போராடிப்பெற்றுத் தன் சுய மரியாதையான குடும்ப ஓய்வூதியத்தின் பெருமிதத்தில் வாழ்ந்து மறைந்தவர் அவர். அசாத்திய துணிச்சல், முரட்டுப் பாசம், வற்றாத வாஞ்சை என்பதோடு எப்போதும் ஏராளமான உறவினர்கள் வந்து தங்கி உண்டு விடைபெறும் ரயில் சந்திப்பு மாதிரி இயங்கவிட்டிருந்தார் தமது இல்லத்தை.

எட்டாம் வகுப்பிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய எனக்கு, நாடகங்களில் நடிக்கும் ஆர்வமும் தொற்றிக்கொண்டிருந்தது. காலம் தாழ்த்தியே வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னைக் கோபாவேசமாகத் திட்டிக்கொண்டிருந்தாலும், கட்டியணைத்து இன்னொருபுறம் ஊக்குவித்துக்கொண்டிருந்தவள் எனது பாட்டி.

சென்னையில் கல்லூரிக் காலத்தில் மாமா வீடு. அப்போது பாட்டி அங்கு வந்துவிட்டிருந்தார். இப்போது இன்னும் விரிவான நட்பு வட்டம், இலக்கியச் சிந்தனை மாதிரி நிகழ்வுகள், மாணவர் சங்கம் என்று மேலும் தாமதமாகத் திரும்பிக்கொண்டிருந்த நாட்களில் எனக்காக வெளிவாசலில் காத்திருந்து உள்ளே அழைத்துப் போய், திரைப்படங்களில் வரும் வசனமற்ற காட்சிகள் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு, சத்தம் போடாமலே வாயை அசைத்துக் கோப வசவுகளை உமிழ்ந்தவாறு சாப்பாடு போட்ட காலம் இனி எப்போதும் வராது.

பாஸ்போர்ட் புகைப்படமாகிவிட்ட வாழ்க்கை

பாட்டன்-பாட்டியைச் சிறப்பிக்கும் வாய்ப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு மகத்தான அனுபவத்தைக் கொடுக்கும். அது பள்ளிக்கூடம் தன்னைத்தானே சிறப்பித்துக்கொள்ளும் வைபவமாகவும் மாறும். ஆனால், எத்தனை குழந்தைகளால் அப்படி அழைத்துவர முடியும், முதலில்?

உறவு நிலைகளின் இன்றைய தளம் என்னவாக மாறி விட்டிருக்கிறது! பணத்தை முன்னிலைப்படுத்தும் சமூக அமைப்பானது உறவுகளைக் கொச்சைப்படுத்தும், உணர்வுகளை மலினப்படுத்தும், அனைத்துவித மதிப்புகளையும் கீழ்மைப்படுத்தும் என்று சும்மாவா சொன்னார் கார்ல் மார்க்ஸ்.

சந்தையை முன் நிறுத்தும் பொருளாதாரம் நமது பண்பாட்டுக் கூறுகளிலும் நிறைய ஊடுருவல்களை நிகழ்த்துகிறது. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், விளையாட்டு மற்றும் கேளிக்கையின் தன்மை, சமூக விழாக்கள் அடைந்துகொண்டிருக்கும் மாற்றங்கள்... இவற்றின் ஓட்டத்தில் எங்கோ விலகி விலகி நின்றவாறு வாழ்கிறோம் நாம். குடும்பப் புகைப்படங்கள் அரிதானவையாகவும், தனித்தனி மனிதர்களின் பாஸ்போர்ட் புகைப்படமே எங்கும் செல்லுபடியாகும் நடைமுறைத் தேவையாகவும் உருப்பெற்றுவிட்டது நமது வாழ்க்கை.

தாத்தா-பாட்டி தினம்

தாத்தா-பாட்டி காலங்களோடு அவர்களிடமிருந்து புறப்பட்ட கதைகளும் விடைபெற்றுச் சென்றுவிட்டன. ஒரு ஊரில் இருந்த ஒரு ராஜா-ராணி, சிங்கம்-சுண்டெலி, மந்திரவாதி-கிளி... எல்லாம் எங்கோ ஓடிமறைந்து தொலைந்தே போய்விட்டனர். “...ஒரு ஊரில் இருந்த ஒரு ராஜா உட்கார்ந்திருந்த சிம்மாசனத்தில் இப்போது தொலைக்காட்சிப் பெட்டி உட்கார்ந்திருக்கிறது. அது வேளை தவறாது ஏதேதோ தொடர்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. அம்மாக்கள் அதன் முன் உட்கார்ந்திருக்க, குழந்தைகள் தனித்து விடப்பட்டு ஏங்கிக்கொண்டிருக்கின்றன...” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க அறிக்கை ஒன்றில் வாசித்தது நினைவுக்கு வருகிறது.

அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோப முகத்தோடே இழுத்து வைத்துச் சோறு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், அழுது அழுது கஷ்டங்களைப் புரியவைக்கவுமான பேராற்றலை வழிவழி வந்த அனுபவத்தின் காட்டாறு பாட்டன் பாட்டிக்குப் புகட்டியிருந்தது. அவற்றை நழுவ விட்டுவிட்டது சம காலச் சூழல். அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. எங்கள் மகள் படித்த பள்ளியிலிருந்து ஓர் அழைப்பிதழ் வந்திருந்தது. பெற்றோர் தினம்தானே என்று நான் அதை எடுக்கப் போக, இல்லை இல்லை, எங்களைத்தான் அழைத்திருக்கிறார்கள், 'கிராண்ட் பேரன்ட்ஸ் டே' என்று எனது மாமனார் பெருமிதம் பொங்கச் சொன்னது நினைவில் இருக்கிறது - அவர் இப்போது இல்லை என்றாலும்.

- எஸ் வி வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com
Tamil the Hindu

மரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


 பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
 திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது:– தற்காலிக பணியாளர் என் கணவர் சின்னப்பா, கிராம சமூக வனத்துறை ஊழியராக, தொகுப்பூதியம் பெற்று 25 ஆண்டுகளாக பணியாற்றினார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 3,058 தற்காலிக ஊழியரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு 1999–ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனடிப்படையில், பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், என் கணவரின் பெயர் 1002–வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பே, அதாவது 13–3–2007 அன்று இதயநோய் காரணமாக என் கணவர் இறந்துவிட்டார். வேலை வழங்க முடியாது இதையடுத்து என் மகனுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு தமிழக தலைமை வனப்பாதுகாவலர் மனு கொடுத்தேன். அவர் வேலை வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து, நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, வாரிசு வேலைக் கேட்டு கொடுத்த மனுவை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் பரிசீலனை செய்த தலைமை வனப்பாதுகாவலர், மீண்டும் என் கோரிக்கையை நிராகரித்து, 11–10–2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், என் கணவர் பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பே இறந்து விட்டதால், தற்காலிக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.. என் மூத்த மகன் சி.சிவாவுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 இந்த மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– மனுதாரர் தன் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும், தன் பிள்ளைகள் யாரும் அரசு வேலையில் இல்லை என்றும் அதனால் 32 வயதான தன் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால், பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு இறந்து விட்டதால், அவரது வாரிசுக்கு வேலை வழங்க முடியாது என்று வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. வாரிசு வேலை பெற முடியும் லட்சுமிதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பில், தற்காலிக ஊழியர் நீண்ட நாட்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும்போது, அவர் இறந்து விட்டதால், அவரது வாரிசுகள் கருணை அடிப்படையில் வேலை பெற முடியும் என்று கூறியுள்ளது. அதேபோல, ரமணி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தற்காலிக பணியாளரின் மனைவி ரமணிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 இந்த வழக்கில், மனுதாரரின் கணவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். எனவே இவரது மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன். கருணை அடிப்படையில் தன் மகனுக்கு வாரிசு வேலை கேட்டு மனுதாரர் காசியம்மாள் கொடுத்த மனுவை தலைமை வனப்பாதுகாவலர் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். அப்போது, காசியம்மாளின் குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்

பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு


பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள். மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 தேர்வு பயம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு எழுதப்போகும் மாணவ–மாணவிகள் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறோமோ என்று எண்ணுவார்கள். சிலர் அதிகமாக பயப்படுவார்கள். அதுபோல மாணவர்கள் பலருக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வும் இருக்காது. பாலியல் குறித்து பல சந்தேகங்கள் இருக்கலாம். இது போன்ற விவகாரங்களில் மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்லாமல் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பேணவும் தமிழ்நாடு ழுழுவதும் 10 உளவியல் நிபுணர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 3 மாவட்டங்களில் தங்கள் பணியை செயல்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்டங்களும் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கு 3 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சந்தேகம் தீர்க்கப்படுகிறது உளவியல் நிபுணர்கள் இவர்களுக்காக புதிதாக வாங்கப்பட்ட வேன்களில் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர்களின் ஆலோசனைபடி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு மன அழுத்தம்போக்க கலந்தாய்வு நடத்துகிறார்கள். அப்போது பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கும் அந்த உளவியல் நிபுணர்கள் பதில் அளித்து சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள்.
 இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:– வேன்களில் பள்ளிகளுக்கு சென்று உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இதுவரை 24 ஆயிரத்து 500 மாணவ–மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுவிட்டது. 1 லட்சம் பேருக்கு ஆலோசனை இந்த கல்வி ஆண்டில் மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். எனவே மாணவர்கள் தேர்வு பயம் இல்லாமல் தேர்வு எழுதவேண்டும். மேலும் எந்த சந்தேகம் இருந்தாலும் ஒளிவு மறைவு இன்றி உளவியல் நிபுணர்களிடம் சொல்லி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். 
இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து


கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர்
நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது."ஆறு வாரங்களில், விண்ணப்பத்தை பரிசீலித்து,உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என,அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரீத்தி என்பவர்,தாக்கல் செய்த மனு: என் தந்தை, காஞ்சிபுரத்தில் உள்ள,நில அளவை ஆவணத் துறையில், "பிர்கா சர்வேயர்' ஆக,பணியாற்றி வந்தார். 2003, செப்டம்பரில், தந்தை இறந்தார்.கருணை அடிப்படையில், என்சகோதரிக்கு வேலை கோரி, 2004, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில், தாயார் விண்ணப்பித்தார். பின், சகோதரிக்கு திருமணம் நடக்க இருப்பதால், எனக்கு கருணை வேலை கேட்டு, 2005, செப்டம்பரில்,விண்ணப்பித்தார். அப்போது,வேலை நியமனங்களுக்கு தடை இருந்ததால்,"தடை நீ"ங்கிய பின், வேலை கோரலாம்' என, தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் வேலை கேட்டு, 2011 அக்டோபரில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு, "2005 செப்டம்பரில் விண்ணப்பித்த போது, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது' என, காஞ்சிபுரம் நிலஅளவை உதவி இயக்குனர் உத்தரவிட்டார். 2011, நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, பணி நியமனம் வழங்க, உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது. 
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார், ""எந்த அடிப்படையும் இல்லாமல், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தந்தை இறந்து, மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட்டது. மனுதாரர், 18 வயது பூர்த்தி அடைந்துள்ளார்,'' என்றார்.

 அரசு தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "அரசு பணியில் சேர, குறைந்தபட்ச வயது வரம்பு, 18, என, ஊழியர்கள் நலத் துறை நிர்ணயித்துள்ளது.கருணை வேலை கோரி விண்ணப்பிக்கும் போது, மனுதாரர், 18 வயது பூர்த்தி அடையவில்லை' என,கூறப்பட்டுள்ளது.
 மனுவை விசாரித்த, நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: கருணை வேலை கோரிய விண்ணப்பம், 2011 நவம்பரில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்போது, மனுதாரர், பிரீத்தி, 18 வயது பூர்த்தி அடைந்துள்ளார். எனவே,விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு, நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. தந்தை இறக்கும் போது, பிரீத்தி,சிறுமியாக இருந்தார். குறிப்பிட்ட காலத்துக்குள், கருணை வேலை கோரி, அவரது தாயார்
விண்ணப்பித்து விட்டார். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்தது, ரத்து செய்யப்படுகிறது.வேறு ஆட்சேபனை தெரிவிக்காமல், விண்ணப்பத்தை, ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து, புதிய உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

FLASH NEWS :Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு



Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு    .

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது .இக்கலந்தாய்வில் 914 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கபட உள்ளது. .


BRC. TEACHER EDUCATOR TO PG பதவி உயர்வு  -17

BT TO PG.                            பதவி உயர்வு. -897

BRC SUPERVISOR TRANSFER TO PG -            47

பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறதுஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான
உத்தரவுகள் வழங்கப்படும் என்றும்,பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
v
  பின்னர் உள்ள   முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்  தற்போது சரிபார்ப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வில் இறுதிசெய்யப்படும் தேர்வர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது

பள்ளிக் கல்வித்துறையில்  பின்னடைவு காலியிடங்களுக்கு  பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்


பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். 

இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. ( பின்னடைவு காலியிடங்கள் என்பது இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்).

136 பேருக்கு பணி உத்தரவு
அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது. 

குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

5 ஆண்டு அவகாசம்
இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

வியாழன், 26 டிசம்பர், 2013

சென்னை பல்கலை. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?


சமூக நீதி பாதுகாக்கப்படும் வகையில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்
தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
 பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ள புதியஇடஒதுக்கீடு சுழற்சி முறை (200 பாயின்ட் ரோஸ்டர்) காரணமாக,பேராசிரியர் பணியில் எம்.பி.சி., பி.சி., மற்றும் எஸ்.சி. பொதுபபிரிவினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் புகார்தெரிவிக்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகம் 52 துறைகளில் 96 ஆசிரியர் பணியிடங்களுக்கானவிண்ணப்பங்களைக் கோரும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்கள்: 96 இதில் பொதுப் பிரிவுக்கு: 51 இடங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவு (முந்தைய நியமனத்தில் நிரப்பப் படாத எஸ்.சி. பொதுப்
பிரிவு காலியிடம்): 3 எஸ்.சி. அருந்ததியர் - மகளிர்: 27 மிகவும் பிற்பட்ட பிரிவு மற்றும் சீர்மரபினர்: 11 பிற்படுத்தப்பட்ட பிரிவு (முந்தைய நியமனத்தில் நிரப்பப்படாத பி.சி.காலியிடம்): 1 பிற்படுத்தப்பட்ட பிரிவு: 3 இந்த விளம்பரத்தின்படி, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய சுழற்சி முறை, பொதுப்பிரிவு மற்றும் அருந்ததியர்மகளிருக்கு மட்டுமே அதிக அளவில் ஒதுக்கப்பட்டு, எஸ்.சி. (பொது),எம்.பி.சி., பி.சி. பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் பேராசிரியர்கள்.
 இது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறியது: இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உள் ஒதுக்கீடு வந்ததன் காரணமாகவே தமிழக அரசு 200 பாயின்ட் சுழற்சி முறையை அறிமுகம் செய்தது. மேலும், அரசுத் துறைகளில் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களை நிரப்ப 200 பாயின்ட் சுழற்சி முறை ஏற்றது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் 3 உதவிப் பேராசிரியர்கள், 2 இணைப் பேராசிரியர்கள், ஒரு பேராசிரியர் என அதிகபட்சம் 6 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கும். இதுபோன்று குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய முறை ஏற்றதல்ல. உதாரணமாக, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் உள்ள 6 ஆசிரியர் பணியிடங்களில், 2 உதவிப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்றால், 100 பாயின்ட் ரோஸ்டர் முறையை பின்பற்றும்போது முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாவது பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்கும் வழங்கப்படும். பின்னர் மீண்டும் ஆங்கிலத் துறையில் ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் காலியாகும்போது, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.சி.
பிரிவு விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்படும். அடுத்த முறை பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும். இந்த நிலையில், 200 பாயின்ட் சுழற்சி முறையை பின்பற்றும்போது இடஒதுக்கீட்டின் கீழ் சமூகப் பிரிவினர் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படாது. அதாவது ஒரு துறையில் 2 பணியிடம் காலியாகிறது என்றால், முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாம் பணியிடம் எஸ்.சி.பிரிவினருக்கும் வழங்கப்படும். சில மாதங்களுக்குப் பின் அதே துறையில்
மீண்டும் 2 பணியிடம் காலியாகும்போது, முதல் பணியிடம் பொதுப் பிரிவினருக்கும், இரண்டாம் பணியிடம் எஸ்.சி. பிரிவினருக்குமே வழங்கப்படும். அந்தத் துறையில் எப்போது 4-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடம் உருவாகிறதோ, அப்போதுதான் அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய சுழற்சி முறை தொடர்பாக நீதிமன்றத்தில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும்
அதே சுழற்சி முறை அடிப்படையில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வருவது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் தமிழக அரசும் உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்

1,000 மெட்ரிக்பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை


'உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு,விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க,நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும்,
சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும்என கூறப்படுகிறது.

 முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு, குறைந்தபட்ச இடவசதி குறித்து, வரையறை செய்யப்பட்டது. கிராமமாக இருந்தால்,மூன்று ஏக்கர்; நகர பஞ்சாயத்து எனில், ஒரு ஏக்கர்;நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு;
மாவட்ட தலைநகரில், எட்டு கிரவுண்டு; மாநகராட்சி பகுதி எனில், ஆறு கிரவுண்டு இடம்
இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.'இந்த விதிமுறை, புதிய
பள்ளிகள் துவங்குபவர்களுக்கு மட்டும்என்றில்லாமல், ஏற்கனவே இயங்கும் பள்ளிகளுக்கும்
பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டது.
 இதனால், 10 ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் அங்கீகாரம் பெற்று, குறைந்தஇட வசதியில் இயங்கிவரும், 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சிக்கல்ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுவதும், பலதரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை, சில தினங்களுக்கு முன், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக, தனியார் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர்,நந்தகுமார் கூறியதாவது:
 'பழைய பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க,  வழிவகை செய்யலாம்' என, பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.அதன்படி, கிராமப்புற பகுதியில், ஒரு ஏக்கர்; நகர பஞ்சாயத்தில், 10 கிரவுண்டு;நகராட்சி பகுதியில், ஐந்து கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், நான்கு கிரவுண்டு; மாநகராட்சி பகுதியில், மூன்றுகிரவுண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, பழைய பள்ளிகள்,தொடர்ந்து இயங்க வகை செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால், சென்னையில் உள்ள, 75 பள்ளிகளுக்கு மட்டும்பாதிப்பு ஏற்படும். இந்த பள்ளிகளிடம் இடவசதி, ஒரு கிரவுண்டுக்கும் குறைவாக உள்ளது. எனவே,இந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கும். நிபுணர் குழு அறிக்கையை, நாங்கள், முழு மனதுடன் ஏற்கிறோம் .இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி : 2014 பொதுத்தேர்வில் அதிரடிமாற்றங்கள்


தேர்வின்போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வதை தடுக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் ரகசிய “பார்கோடு” கொண்ட விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ல் ஆரம்பித்து ஏப்ரல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 12-ம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வை கிட்டதட்ட 11 லட்சம் பேரும் எழுத இருக்கிறார்கள்.

2014-ல் நடத்தப்படும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அரசு தேர்வுத்துறை பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களின் புகைப் படம், ரகசியக் குறியீடு (பார்கோடு) ஆகியவற்றுடன் ஒவ்வொரு மாணவ ருக்கும் தனித்தனி விடைத்தாள்கள் வழக்கமான பக்கங்களை விட அதிகரித்து வழங்கப்பட இருக் கின்றன.

பக்கங்கள் அதிகரிப்பு

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் ஒரே கட்டாகவும், பிளஸ்-2 மாணவர் களுக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் ஒரே கட்டாகவும், உயி ரியல் மாணவர்களுக்கு மட்டும் 52 (தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தலா 26 பக்கங்கள்) பக் கங்கள் கொண்ட ஒரே விடைத்தாள் கட்டாகவும் கொடுக்கப்படும்.

முன்பு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 8 பக்கங்கள் கொண்ட விடைத்தாளாகவும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 16 பக்கங் கள் கொண்ட விடைத்தாளாகவும் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்கள் தங்களுக்கு கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால் தேர்வுப் பணியில் இருக்கும் ஆசிரியரிடம் வாங்கிக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை கூடுதல் தாள் வாங்கும்போது பதிவு எண், தேர்வு பெயர், பக்கம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

நேரம் மிச்சம்

இதனால் அவர்களின் தேர்வு நேரம் வீணாகும் நிலை இருந் தது. அதேபோல், ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் எழுந்து விடைத்தாள்கள் கேட்டால் ஆசிரி யர்களுக்கும் சிரமம் ஏற்படுவதுடன் மாணவர்களுக்கும் காலதாமதம் ஆகும்.

ஆனால், தற்போது 30 பக்கங் கள், 40 பக்கங்கள், 52 பக்கங்கள் கொண்ட பெரிய விடைத்தாள் கட்டாக கொடுத்துவிடுவதால் பெரும்பாலானோர் இந்த பக்கங் களுக்குள் எழுதி முடித்துவிடுவர். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பொதுத் தேர்வில் மாணவர்கள் எழுதிய அதிகப்பட்ச பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வுத் துறை தற்போது விடைத்தாள் பக்கங்களை நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்கோடு விடைத்தாள்

இதேபோல், ரகசிய குறியீட்டுடன் கூடிய விடைத்தாள்கள் அறிமுகப் படுத்தப்படுவதால் தேர்வின்போது மாணவர்களோ, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ முறைகேடு செய்வது முற்றிலுமாக தடுக்கப்படும். ஏற்கெனவே எழுதிய விடைத்தாள்களுடன் முறைகேடாக புதிய விடைத் தாள்களை சேர்த்து மதிப்பெண் வழங்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுப்பப் பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பார்கோடு விடைத்தாள் முறையால் இது போன்ற புகாருக்கு வாய்ப்பே இல்லை.

விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஒவ்வொரு விடைத்தாளுக்கும் மாற்று எண் (டம்மி எண்) வழங்குவது, பின்னர் மாற்று எண் விடைத்தாளுக்கு வழங்கிய மதிப்பெண்ணை அசல் எண்ணுக்கு மாற்றம் செய்து பதிவேட்டில் பதிவுசெய்வது, மேலும், மதிப் பெண் விவரங்களை அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) ஒவ்வொன்றாக பதிவது என ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் ஏற்படும் வேலைப்பளு வெகுவாக குறைந்துவிடும்.

விடைத்தாளின் முன்பக்கத்தில் மேல்பகுதி, கீழ்பகுதி, மார்ஜின் பகுதி என 3 இடங்களில் ரகசிய குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும். எனவே, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு மாற்று எண் போடும் வேலை இருக்காது. விடைத்தாள்கள் திருத்தப் பட்டவுடன் மதிப்பெண் விவரமும் ரகசிய குறியீடும் ஆன்லைனில் உடனுக்குடன் கணினியில் பதிவுசெய்யப்பட்டுவிடும்.எல்லாவற்றுக்கும் மேலாக வரும் ஆண்டு பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் நேரடியாக குறிப்பிட்ட மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்பப்படாமல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு மொத்தமாக கொண்டுசெல்லப்பட்டு பின்னர் வேவ்வேறு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

யாருக்கும் தெரியாது

பழைய முறையில், குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் எந்த மையத்துக்கு செல்கின்றன என்பது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரியும். இதற்காக விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் பதிவுசெய்து அனுப்பாமல் தேர்வுத்துறை அதிகாரிகளும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் நியமிக்கப்படும் காப்பாளரும் (கஸ்டோடியன்) தனி வாகனத்தில் ஒவ்வொரு மையத்துக்கு சென்று விடைத்தாள்களை சேகரித்து எடுத்துச்செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.