ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அரசு முத்திரையுடன் அதிரடி போலி கடிதம் : அரசு செயலாளர் கையெழுத்து போட்டு மோசடி


தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு கடந்த சுமார் நான்கைந்து மாதமாக
தொடர்ச்சியாக வந்த உயர் கல்வித்துறை கடிதத்தால்கடும் பிரச்னை உருவானது. இது
சம்பந்தமாகஅதிர்ச்சியடைந்த நிர்வாகம் தகவல் அறியும்உரிமை சட்டத்தின் மூலம் இதற்கான
விபரம் கேட்டதில் அந்த கடிதம் அனைத்தும் போலி என அதிர்ச்சி தகவல்
வெளியானது. ஆனால் போலியான அரசு கடிதத்தை வைத்து கோர்ட்டிலும்
உத்தரவு பெற்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் நேற்று நிருபர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்து நடந்த
விபரத்தை கூறியதாவது; சமீபகாலமாக எங்கள் கல்லூரிக்கு உயர் கல்வித்துறை சென்னையில்
இருந்து வருவது போல் அரசு முத்திரையுடன் போலியான ஆவணங்கள் அடங்கிய எட்டு கடிதங்கள்
வந்துள்ளது. அதில் உள்ள கடிதத்தின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் கண்ணன்,
சொர்ணராஜ் ஆகிய இரண்டு பேராசிரியர்களும் வழக்கு தொடுத்து நீதியரசர்கள் மணிக்குமார்,
நாகமுத்து ஆகியோர் மூலம் இரண்டு தடுப்பாணைகள் பெற்று நிர்வாகத்திற்கு இடையூறு செய்தனர். அந்த
எட்டு கடிதங்களும் போலியானவை என்று உயர் கல்வித்துறையில் இருந்து தகவலறியும் சட்டம் மூலம்
விளக்கம் பெற்றுள்ளோம். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். இப்படி போலிகள்
உருவானது நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. காவல்துறையும் நடவடிக்கை எடுத்துக்
கொண்டிருக்கிறது. இது குறித்து துரித நடவடிக்கை எடுத்து கல்லூரியின் செயல்பாட்டினை குலைக்கும்
விதமாக நடைபெற்று வரும் இத்தகைய சதிச்செயல் புரியும் நபர்களை விரைந்து கைது செய்து காமராஜர் பெயர்
கொண்ட இந்த கல்லூரி மேலும் சிறப்பாக மாணவர்களுக்கு தொண்டாற்ற வழி கோல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். காமராஜ் கல்லூரியில் உயர் கல்வித்துறையை பயன்படுத்தி நடந்துள்ள இந்த
மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் யார்? கல்லூரிக்குள்ளே இருக்கிறார்களா,
வெளியில் இருக்கிறார்களா, வெளியில் இவர்களுக்கு அரசு முத்திரை பயன்படுத்தி போலி கடிதம்
கொடுக்கும் அளவிற்கு துணை நின்றது யார்? வேறு யாரும் பெரும் புள்ளிகளின் தொடர்பு இதில்
இருக்கிறதா உள்ளிட்டவை குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ள உள்ளதால் இதில் மேலும்
அதிரடி திருப்பங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக