பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த 11 மற்றும் 13ம் தேதி இரண்டு கட்ட போராட்டங்கள் நிறைவு பெற்றது. நேற்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடக்க வேண்டிய மூன்றாம் கட்ட போராட்டம் ஒத்திவைப்பதாகதிடீர் அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சங்க மாநிலத்தலைவர் பால்ராஜ் கூறுகையில்,
"" இரண்டாம் கட்ட போராட்டத்திற்கு பின், கடந்த 19 மற்றும் 26ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசினர். இதில்,அமைச்சு பணியாளர்களுக்கு இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்கள் உருவாக்குவது, இணை
இயக்குநர்களுக்கு நேர்முக உதவியாளர்பணியிடங்கள் உருவாக்குதல், ஆறு வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்த அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், mஅவசர தாபல்களுக்கு போதிய அவகாசம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளுக்கு உறுதி அளித்துள்ளனர்.இதை தொடர்ந்து, மாநில அளவிலான போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக