மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 19,காலியிடங்கள் ஏற்பட்டன. இதில், நான்கு இடங்கள்,பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2007ல், இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு,நேர்முகத் தேர்வுக்குப் பின், மாவட்டகல்வி அதிகாரியாக, மகேஸ்வரி என்பவர்,தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தேர்வை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், வேலு என்பவர், மனு தாக்கல்செய்தார். மனுவை தள்ளுபடி செய்த, உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "மகேஸ்வரி தேர்ந்தெடுக்கபட்டு, நியமிக்கப்பட்டதில், எந்த முறைகேடும் இல்லை;இடஒதுக்கீடு சுழற்சி0 முறை, சரியாகபின்பற்றப்பட்டுள்ளது' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், அப்பீல் மனுவை,வேலு தாக்கல் செய்தார்.
மனுவை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.மகாதேவன் அடங்கிய,"டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல்
அரசு பிளீடர், ஆர்.ரவிச்சந்திரன், அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், வழக்கறிஞர் நிறைமதி,மகேஸ்வரி சார்பில், வழக்கறிஞர், எம்.செல்வம்
ஆஜராகினர். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பெண்களுக்கான இடஒதுக்கீடு மட்டுமல்லாமல், ஜாதி இடஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீடு செய்வது என்பது, அந்த இடங்களில்,அவர்களை நியமிப்பதற்கு தான். பெண்கள் இல்லை என்றால், அதே சமூகத்தைச் சேர்ந்த ஆணை, சுழற்சி முறையில்
பரிசீலிப்பதாக, தேர்வு நடைமுறையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. வரிசைப் பட்டியலைப் பார்க்கும்போது,மகேஸ்வரி என்பவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண் பட்டியலில், முதலாவது வருகிறார். அவரது நியமனம்சரியானது தான். சமூகத்தில், பெண்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக தான், அவர்களுக்கு, 30 சதவீத ஒதுக்கீட்டை, அரசு கொண்டு வந்தது. பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான, அரசின்
கொள்கை முடிவில், எந்த பாரபட்சமும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இதை, இரட்டை ஒதுக்கீடாககருத முடியாது. எனவே, மகேஸ்வரியை தேர்ந்தெடுத்ததில், எந்த முறைகேடும் இல்லை. "அப்பீல்' மனு,தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
Source dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக