புதன், 25 டிசம்பர், 2013

 முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?


 முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ்சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் நடைபெறுகிறது.  முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150 க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு
1 to 3  வருடங்கள்வரை -   1 மதிப்பெண்

3 to 5   வருடங்கள்வரை - 2மதிப்பெண்

5 to 10  வருடங்கள்வரை - 3 மதிப்பெண்

1 0  வருடங்களுக்கு மேல் - 4 மதிப்பெண்


பணி அனுபவத்துக்கு
1 to 2  வருடங்கள்வரை -   1 மதிப்பெண்

2to 5   வருடங்கள்வரை - 2மதிப்பெண்

5 வருடங்களுக்கு மேல்   - 3 மதிப்பெண்

மேல்னிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே  இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்

எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும்


தற்போது 605  பணியிடங்களுக்கு 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் 89 பேருக்கு பணி நியமன வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 188 பேர்களுல் 7 பேர் மட்டுமே oc  பிரிவைச்சேர்ந்தவர்கள்.
 விவரம் வருமாறு
GT.   -188
BC.   -184 ( 9 visual impaired)
BCM. -27
MBC. -152 (3 visual impaired)
SC.   -110 (1 visual impaired)
SCA. -24
ST.   -9

என 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு  அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக