ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஜாதி சான்றிதழ் பிரச்னையால் ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்': மின் வாரிய நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


ஜாதி சான்றிதழ் குறித்து, 16 ஆண்டுகளாகஎந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஓய்வு பெறும்
நாளில், பெண் ஊழியரை, "சஸ்பெண்ட்' செய்த, தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை,சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. "சஸ்பெண்ட்'உத்தரவை, ரத்து செய்து உத்தரவிட்டது. 
மின்சார வாரியத்தில், கணக்கீட்டாளராக, அமுதா என்பவர்,பணியில் சேர்ந்தார்.ST சமூகமான,கொண்டா ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என, 1981ல்,ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார்; ஆனால், "அந்த சமூகத்தை அவர் சாரவில்லை' எனக்கூறி, மின்
உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, திருச்சி கலெக்டர், 1986ல், அறிக்கை அனுப்பினார்.அதற்கு முன், அமுதா தரப்பில், எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில்,அமுதா மனுத்தாக்கல் செய்தார். கலெக்டரின்
உத்தரவை ரத்து செய்து, புதிதாக விசாரணை நடத்தி,சரிபார்க்கும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மின் கணக்கீட்டாளராகபணியில் சேர்ந்த, அமுதா,சிறப்பு நிலை அந்தஸ்துக்கு உயர்ந்தார். கடந்த,மே மாதம், பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.பணி ஓய்வு பெறும் நாள் அன்று, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை, பணியில் இருந்து ஓய்வு பெற, வாரியம் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், அமுதா மனுத்தாக்கல் செய்தார். முழு பென்ஷன் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் வழங்கவும் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுதாகர், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: 
மனுதாரரின் ஜாதி குறித்து விசாரணை நடத்துமாறு, மாவட்ட கலெக்டர், வருவாய் அதிகாரிகளுக்கு,1997ல், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த, மே மாதம் வரை, இதுகுறித்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமுதாவின் ஜாதி சான்றிதழ் குறித்து ஆராய, மாவட்ட அளவிலா விஜிலன்ஸ் குழுவையும், மின் வாரியம் அணுகவில்லை. கடந்த, 16 ஆண்டுகளாக,தூங்கி கொண்டிருந்து விட்டு, பணி ஓய்வு பெறும் நாளில், அமுதாவை, "சஸ்பெண்ட்' செய்துள்ளனர். வாரியம் செய்த தவறை, அதற்கு சாதகமாக எடுத்துக் கொள்ள, அனுமதிக்க முடியாது. பணி ஓய்வு பெறும் நாள் வரை,ஜாதி சான்றிதழ் ரத்து செய்யப்படவில்லை. ஊழியரின் ஜாதி சான்றிதழில் உண்மையில்லை என, நிர்வாகம் கருதினால், அதுகுறித்து, உரிய அதிகாரியிடம் பிரச்னையை கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் ரத்து செய்த பின், அந்த ஊழியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உரிமை,
நிர்வாகத்துக்கு வருகிறது. எனவே, அமுதாவை, "சஸ்பெண்ட்' செய்து பிறப்பித்த உத்தரவு,
ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு, முழு பென்ஷன் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதேநேரத்தில், மாவட்ட கலெக்டரின் விசாரணைக்கு அனுப்புவதற்கு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு, இந்த உத்தரவு குறுககே நிற்காது
 இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக